கணவன் அருகில் இல்லாத நேரத்தில்... மீண்டும் பழையபடியே திரும்பிய கன்னிகா
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சினேகன் கலந்து கொண்டிருக்கும் நேரத்தில் கன்னிகா செய்த செயல் அனைவரையும் திகைப்படைய செய்திருக்கிறது.
Recommended Video
கன்னிகா தற்போது தனக்குப் பிடித்தது இதுதான் என்று ஐ லவ் யூ என குறிப்பிட்டது பலருடைய பாராட்டையும் பெற்றுள்ளது.

காதல் தம்பதிகள்
திரைத்துறையில் காதல் தம்பதிகளாக வலம் வந்து கொண்டிருக்கும் சினேகன் மற்றும் கன்னிகா தம்பதியினர் சமீபத்தில் தான் திருமணம் முடிந்தது. திருமணம் முடிந்து ஒரு சில மாதங்களில் சினேகன் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார். ஏற்கனவே சினேகன் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டு இருந்தாலும் தற்போது இவர் மீண்டும் இந்த அல்டிமேட் நிகழ்ச்சியில் தன்னுடைய இழந்த பெயரை பெற்று விட வேண்டும் என்று மீண்டும் கலந்து கொண்டிருக்கிறார். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பார் என்று சொல்வது போல சினேகன் வெற்றிக்கு பின்னால் அவருடைய காதல் மனைவி இருந்து வருகிறார் என்று பலமுறை கூறியிருக்கிறார்.

கன்னிகாவின் புது முயற்சி
சினேகன் ஒரு பாடலாசிரியர் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் அவர் எழுதிய பாடல்கள் என்னவென்பது பலருக்கும் தெரியாது. பல ஹிட்டான பாடல்கள் இவர் எழுதியது தான் என்பது பலருக்கும் தெரியாத வண்ணத்தில் தான் இருந்து வருகிறது. அதனால் தான் தன்னுடைய காதல் கணவரின் பாடல்களை தற்போது சமூக வலைத்தளத்தில் ரீ-போஸ்ட் செய்து வருகிறார். அதில் இந்த பாடலுக்கான வார்த்தைகளை எழுதியவர் சினேகன் என்று இவர் குறிப்பிடுவதை பார்த்துதான் பலருக்கும் இந்த பாடல்கள் எல்லாம் சினேகன் எழுதியது தானா என்று தெரிந்துகொள்ள முடிகிறது.

மீண்டும் கிடைத்த வாய்ப்பு
சினேகன் மற்றும் கன்னிகா இருவருமே பல ஆண்டுகளாக காதலித்து வந்தாலும் தங்களுடைய திரைத்துறையில் தங்களுக்கு என்று ஒரு பெயரை வாங்கிக் கொண்டு திருமணம் செய்து கொள்ளலாம் என்று தான் பல வருடங்கள் பொறுமையாக இருந்தனர். ஆனால் இவர்களின் திறமைக்கு ஏற்ப வாய்ப்பு கிடைக்காததால் தான் அவர்கள் திடீர் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் தற்போது மீண்டும் கன்னிகாவிற்கும், சினேகாவிற்கும் அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சினேகன் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமாகியிருக்கிறார், கன்னிகா புதிய திரைப்படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

பாவாடை தாவணியில் கலக்கல்
சினேகன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருப்பதால், கன்னிகா ஒரு சில நாட்கள் அவரை நினைத்து உருக்கமான தன்னுடைய காதலை வெளிக்காட்டி போஸ்ட் போட்டுக்கொண்டிருந்தார். இந்த நிலையில் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பாவாடை தாவணியில் கலக்கலான ஒரு வீடியோவை போஸ்ட் செய்து இருக்கிறார். இது எனக்கு பிடித்த பாவாடை தாவணி, ஐ லவ் பாவாடை தாவணி என்று அவர் கேப்ஷன் கொடுத்திருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை மட்டுமல்லாமல் ஆசீர்வாதங்களையும் கூறி வருகிறார். கணவன் அருகில் இல்லை என்று கண்கலங்கி இருந்து கொண்டிருக்காமல், அவர் துறையில் அவர் சாதிக்கும் என் வேலையை நான் பார்க்கிறேன் என்று இவருடைய வேலையை தொடங்கி இருப்பதற்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications