பிக்பாஸ் வீட்டிற்குள் சினேகன்.. கன்னிகா கூறிய மகிழ்ச்சியான செய்தி..வாழ்த்தும் ரசிகர்கள்
சென்னை: பிக்பாஸ் வீட்டிற்குள் சினேகன் இருக்கும் நிலையில் கன்னகா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை கூறியிருக்கிறார்.
கன்னிகா கூறிய மகிழ்ச்சியான செய்தியைக் கேட்டு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

கன்னிகா கூறிய செய்தி
தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக களமிறங்கியிருக்கும் சினேகனின் மனைவியான கன்னிகா இன்ஸ்டாகிராமில் ரசிகர்களிடம் மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்கிறார். இவர் கூறிய செய்தியைக் கேட்டதும் ரசிகர்கள் பலர் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். பல நாட்களாக இவர் எதிர்பார்த்திருந்த நிகழ்வு தற்போது நடந்திருப்பதாகவும் அதில் மகிழ்ச்சியாக தன்னுடைய பயணத்தை தொடங்க இருப்பதாகவும் கன்னிகா கூறியிருக்கிறார்.

திரைத்துறை காதல் தம்பதிகள்
திரைத்துறையில் காதலித்து திருமணம் செய்துகொண்ட கன்னிகா மற்றும் சினேகன் ஜோடிக்கு ரசிகர்கள் அதிகமாக இருந்து வருகின்றனர். சினேகன் ஒரு பாடலாசிரியராக இருந்தாலும் பிக்பாஸ் முதல் சீசனின் மூலமாக பலருக்கும் பரிச்சயமாக மாறிவிட்டார். இந்த முதல் சீசனில் இவருடைய கேரக்டரை ரசித்த ரசிகர்கள் இவருக்கு அதிகமாக வாக்களித்ததன் அடிப்படையில்தான் இவரால் கடைசிவரைக்கும் இந்த நிகழ்ச்சியில் நிலைத்து நிற்க முடிந்தது. அதனால்தான் இவர் பிக் பாஸ் முதல் சீசனின் ரன்னராக ஆனார். ஆனால் அப்போது கூட அவருடைய காதல் பற்றி கேட்ட ரசிகர்களுக்கு இவர் கன்னிகாவின் பெயரை வெளியிடவில்லை.

திடீர் திருமண ஏற்பாடு
கன்னிகா மற்றும் சினேகன் இருவருமே தங்களுடைய துறையில் தங்களின் திறமையை வெளிக்காட்டி தங்களுக்கு என்று ஒரு இடத்தை பிடித்து விட்டு திருமணம் செய்து கொள்ளலாம் என்று தான் பொறுமையாக இருந்து வந்துள்ளனர். ஆனால் கன்னிகா எதிர்பார்த்த வெள்ளித்திரை வாய்ப்பு அவருக்கு சரியாக அமையாததால் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்தார். ஆனால் அங்கேயும் அவருக்கு தன்னுடைய திறமையை நிரூபிக்கும் களம் கிடைக்கவில்லை என்று நினைத்து இருந்ததால், தாங்கள் இருவரும் திருமணத்தை செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து இருந்தனர். இந்த நேரத்தில் இவர்கள் இருவரின் திருமண செய்தி வெளியானதும் ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறி வந்தாலும், ஒருசிலர் நெகட்டிவ் கருத்துக்களை கூறிவந்தனர். காரணம் இவர்கள் இருவருக்கும் இருக்கும் வயது வித்தியாசத்தை பலரும் பெரிது பண்ணி வந்தனர்.

வெள்ளித்திரையில் மீண்டும் அறிமுகம்
தற்போது சினேகன் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் நேரத்தில் கன்னிகா விற்கு திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறதாம். புது திரைப்படத்தின் சூட்டிங் செல்லும் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். பல நாட்கள் காத்திருந்து தற்போது வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் இந்த திரைப்படம் வெற்றியடைய வேண்டும் என்றும் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். இந்த திரைப்படத்தின் அப்டேட்கள் பற்றி இன்னும் தெளிவாக கன்னிகா வெளியிடவில்லை என்றாலும் புது திரைப்படத்தில் கமிட்டாகி உள்ளதை மட்டும் ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications