காதலர் தினத்தில் கன்னிகா வெளியிட்ட போஸ்ட்...குழப்பத்தை ஏற்படுத்தும் கேப்ஷன்
சென்னை: காதலர் தினம் அதுவுமாக கன்னிகா ரவி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட போஸ்ட் ரசிகர்களை குழப்பம் அடைய வைத்திருக்கிறது.
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கணவர் இருக்கும் நிலையில் இப்படி ஒரு கேப்ஷன் கொடுத்து இருக்கிறார் என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

மீண்டும் கிடைத்த வாய்ப்பு
திரைத்துறையில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருக்கும் கன்னிகா ரவி தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட போட்டோக்கள் அவருடைய ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. வெள்ளித்திரை வாய்ப்புக்காக காத்திருந்த கன்னிகாவிற்கு தற்போது பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தன்னுடைய திரைப்படங்களைப் பற்றி இன்னும் ரசிகர்களுக்கு கூறாவிட்டாலும் தற்போது படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்து விட்டதாக மட்டும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை கூறியிருக்கிறார். அவருடைய திறமைக்கும் அழகுக்கும் பல வருடங்களுக்கு பிறகு கிடைத்த வாய்ப்பை செமையாக பயன்படுத்த வேண்டும் என்பது ரசிகர்களின் ஆவலாக இருந்து வருகிறது.

காதலர் தின கொண்டாட்டம்
இன்று காதலர் தினத்தை காதல் செய்பவர்களும் காதலில் வெற்றி பெற்றவர்களும் கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் கன்னிகா ரவி காதல் திருமணம் செய்து மகிழ்ச்சியாக திருமண வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தில், அவருடைய கணவர் இந்த காதலர் தினத்தில் அவர் அருகில் இல்லை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வருகிறார். இருந்தாலும், இவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட போட்டோக்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எப்போதுமே தன்னுடைய கணவன் மீது வைத்திருக்கும் பாசத்தை அதிகமாக வெளிக்காட்டி கொண்டிருக்கும் இவர் என்ன இப்படி செய்திருக்கிறார் என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

பாசத்தை அள்ளிய கன்னிகா
திருமணத்திற்கு முன்பு பல வருடங்களாக காதலித்து கொண்டிருந்த கன்னிகா மற்றும் சினேகன் திருமணத்திற்கு பிறகும் காதல் தம்பதிகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். சினேகனுடைய வாழ்க்கையில் அவருடைய மனைவியின் வருகை பெரிய பொக்கிஷமாக இருப்பதாக கூறி இருக்கிறார். அவருடைய குடும்பத்தினர் கூட பெண் பார்த்து இருந்தால் இப்படி ஒரு பெண்ணை பார்த்திருக்க மாட்டோம் என்று சொல்லும் அளவிற்கு சினேகன் குடும்பத்தினரின் பாசத்தையும் ஒட்டுமொத்தமாக அள்ளி இருக்கிறாராம்.

ஏன் இந்த கேப்ஷன்
தன்னுடைய ஒவ்வொரு வெற்றிக்கு பின்னாடியும் கன்னிகா தான் இருந்து வருவதாக சினேகன் பலமுறை கூறியிருக்கிறார். அதுபோல கன்னிகாவும் தன்னுடைய காதலை அடிக்கடி அனைவருக்கும் வெளிக்காட்டி வருகிறார். இந்த நிலையில் இன்று காதலர் தினத்தில் அவர் கருப்பு உடையில் அழகாக எடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்திருக்கிறார். அதற்கு கருப்பு அனைத்து நிறங்களையும் உள்ளடக்கியது என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார். காதலர் தினம் அதுவுமாக இவர் கருப்பு உடை அணிந்து இருக்கிறாரே என்ன காரணமாக இருக்கும் என்பது பலருடைய கேள்வியாக இருந்தாலும் இதுவும் வேற லெவல் தான் என்று பலர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications