Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிக் பாஸ் வீட்டிற்குள் சினேகன்... மதுரைக்கு விசிட் அடித்த கன்னிகா... மகிழ்ச்சியான செய்திதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கன்னிகா தற்போது தன்னுடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை கூறியிருக்கிறார்.

Recommended Video

    பிக் பாஸ் வீட்டிற்குள் சினேகன்... மதுரைக்கு விசிட் அடித்த கன்னிகா... மகிழ்ச்சியான செய்திதான்

    மதுரையில் வலம்வரும் கன்னிகாவின் லேட்டஸ்ட் வீடியோவை பார்த்ததும் ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.

    காதல் திருமணம்

    காதல் திருமணம்

    சன் டிவியில் ஒளிபரப்பான கல்யாண வீடு சீரியலின் மூலமாக சீரியல் ரசிகர்களுக்கு பரிச்சயமான கன்னிகா தற்போது வெள்ளித்திரையிலும் கால் தடம் பதித்திருக்கிறார். ஏற்கனவே இவர் நடித்த ஒரு சில திரைப்படங்கள் அந்த அளவுக்கு இவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் இவர் பாடலாசிரியர் சினேகனை காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது மீண்டும் தன்னுடைய திறமையை வெளிக் காட்டுவதற்காக வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.

    கவிஞர் சினேகன்

    கவிஞர் சினேகன்

    சின்னத்திரையாக இருந்தாலும் சரி வெள்ளித்திரையாக இருந்தாலும் சரி அதில் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் பலர் இருந்து வருகிறார்கள். அந்த வரிசையில் கன்னிகா மற்றும் சினேகன் ஜோடி இருந்துவருகின்றது. ஏற்கனவே சினேகன் கவிஞர் என்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும், இவருக்கு பெயரும் புகழும் கொடுத்தது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமான முதல் சீசனில் ஒரு போட்டியாளராக அறிமுகமாகி கட்டிப்பிடி வைத்தியர் என்று பலருக்கும் பரிச்சயமான சினேகன் தற்போது மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.

    மனைவிக்காக வாய்ப்பு கேட்கும் கணவன்

    மனைவிக்காக வாய்ப்பு கேட்கும் கணவன்

    பிக்பாஸ் அல்டிமேட் வீட்டில் இருக்கும் சினேகனுக்காக கன்னிகா ரவி வாழ்த்துக்களை கூறி அனுப்பி வைத்து இருந்தாலும், அவர் வெளியே வரும்போது அவருக்கு மகிழ்ச்சியான செய்தியை கொடுக்க வேண்டும் என்று முடிவு கட்டி இருக்கிறார் போல, அதனால் தன்னுடைய கணவருக்காக கன்னிகா சமூக வலைத்தளத்தில் ஆதரவுகளை தெரிவித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பல நாட்கள் காத்திருந்த கதாநாயகி வாய்ப்பு தற்போது சினேகனால் கன்னிகாவிற்கு கிடைத்துள்ளதால் தான் பாடல்கள் எழுதும் திரைப்படங்களில் தன்னுடைய மனைவியான கன்னிகாவிற்கும் வாய்ப்பு கேட்டு வருகிறாராம்.

    மதுரையில் கன்னிகா

    மதுரையில் கன்னிகா

    தற்போது சினேகனால் மீண்டும் கன்னிகாவிற்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தான் திரைப்படங்களில் நடிக்க தொடங்கி விட்டேன் என்று சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுக்கு கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று மதுரையில் சூட்டிங் நடக்கும் இடத்தின் வீடியோவை தற்போது வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோவை பார்த்ததும் ரசிகர்கள் பலர் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். பாவாடை தாவணியில் மதுரையில் இவர் வலம் வரும் இடத்தை பார்த்ததும் ரசிகர்கள் பலர் இது எந்த இடம் நாங்களும் வரலாமா??என்று கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் திரைப்படத்தை பற்றியும் கேட்டு வருகின்றனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+