Kantara Chapter 1 Ott: ஓடிடிக்கு வந்த காந்தாரா சாப்டர் 1.. முதல் நாளே அமோகமான வரவேற்பு
சென்னை: கன்னடத் திரையுலகின் பெருமையை உலகறியச் செய்தப் படங்களில் முக்கியமான இடம்பிடித்திருக்கும் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள 'காந்தாரா லெஜண்ட் சாப்டர் 1' திரைப்படம், திரையரங்குகளில் பெற்ற பிரம்மாண்ட வரவேற்புக்குப் பிறகு இன்று (அக்டோபர் 31, 2025) அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்ட இந்த மெகா ஹிட் திரைப்படத்தைக் காண ரசிகர்கள் மீண்டும் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.

கன்னடத் திரையுலகின் எழுச்சி
ஒரு காலத்தில் கன்னடத் திரையுலகம் மற்ற மொழித் திரைப்படங்களை ரீமேக் செய்து கொண்டிருந்தது. கிச்சா சுதீப், உபேந்திரா போன்றோர் 'வாலி', 'பிதாமகன்', 'வரலாறு' எனப் பலத் தமிழ்ப் படங்களை அங்கே ரீமேக் செய்து நடித்திருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு போல் கன்னட மொழிப் படங்களும் எப்போதுதான் பாக்ஸ் ஆஃபிஸில் ஆதிக்கம் செலுத்துமோ என்ற பேச்சு அத்திரைத்துறையில் நீண்ட காலமாகவே ஓடிக்கொண்டிருந்தது.
காந்தாரா மெகா ஹிட் கதை
நடிகரும், இயக்குநருமான ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த 'காந்தாரா' திரைப்படம் 2022ஆம் ஆண்டு வெளியானது. நாட்டு தெய்வங்களையும் அதன் வழிபாடுகளையும் மையப்படுத்தி எடுக்கப்பட்ட அந்தப் படம், ரொம்பவே குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருந்தாலும், பல நூறு கோடி ரூபாய் வசூல் செய்து கன்னடத் திரையுலகின் திருப்புமுனையாக அமைந்தது.வசூல் மட்டுமின்றி, டெக்னிக்கலாகவும், மேக்கிங் ரீதியாகவும், அதன் ஆழமானக் கதைக்களத்துக்காகவும், குறிப்பாகத் தியேட்டரில் கிடைத்த உணர்ச்சிப்பூர்வமான அனுபவத்துக்காகவும் விமர்சன ரீதியாகக் கொண்டாடப்பட்டது.

காந்தாரா லெஜண்ட் சாப்டர் 1
முதல் பாகத்தின் மாபெரும் வெற்றி கொடுத்த உற்சாகத்தோடு, காந்தாரா படத்தின் இரண்டாவதுப் பாகத்தை, அதாவது முதல் பாகத்தின் முன்கதையை (Prequel) உருவாக்கியிருக்கிறார் ரிஷப் ஷெட்டி. கிட்டத்தட்ட 125 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் ருக்மிணி வசந்த் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். எதிர்பார்த்தபடியே இந்தப் படமும் மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆகியிருக்கிறது. உலகம் முழுவதும் இந்தப் படம் மொத்தமாக 600 கோடி ரூபாய் அள்ளி சாதனை செய்திருக்கிறது.
ஓடிடியில் மீண்டும் மாஸ்
இத்தனைப் பெரிய வசூல் சாதனைப் படைத்தப் படம், இன்று (அக்டோபர் 31) அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆக ஆரம்பித்திருக்கிறது. தியேட்டருக்குச் சென்று பார்க்காதவர்களும், ஏற்கனவே திரையரங்கில் பார்த்து அந்தப் பிரம்மாண்டத்தை அனுபவித்தவர்களும் மீண்டும் உற்சாகத்தோடுப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். திரையரங்கில் பெற்ற ரெஸ்பான்ஸை போன்றே, ஓடிடியிலும் 'காந்தாரா லெஜண்ட் சாப்டர் 1' பெரிய ரெஸ்பான்ஸைப் பெறும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் இந்தப் படத்தைக் கொண்டாடி வருகின்றனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications