கரகாட்டக்கார ரேஞ்சுக்கு களைகட்டிய பாண்டவர் இல்லம் .. என்னென்ன அக்கப்போரு பண்ண போறாங்களோ!
சென்னை : 80ஸ்கிட்ஸ் கெட்டப்பில் வலம்வரும் பாண்டவர் இல்லத்து இளவரசர்களை பார்த்ததும் ஷாக்கான ரசிகர்கள் என்னய்யா இப்படி கிளம்பிட்டாங்க என மூக்கில் விரலை வைத்துக் கொண்டுள்ளனராம்.
சும்மாவே இவர்கள் வீட்டுக்குள்ள இருந்தாலே அங்க பூகம்பம் பல வெடிச்சுகிட்டே இருக்கும். ஆனா இப்போ இவங்க புது கெட்டப்ல கிளம்பி இருக்கிறத பார்த்ததும் அப்போ சம்பவம் இருக்கு என ரசிகர்கள் வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
அதுவும் கரகாட்டக்கார ரேஞ்சுக்கு இவர்கள் கிளம்பி இருப்பதை பார்த்து இந்த கோஷ்டி கச்சேரி பண்ணுவதற்கு.. இல்லை சமையல் பண்ணுவதற்கு கிளம்பிடுச்சு. யார் உயிருக்கு ஆபத்துன்னு தெரியலையே என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

எங்க கிளம்பிட்டீங்க
சன் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டவர் இல்லம் சீரியலின் லேட்டஸ்ட் ப்ரேமோவை பார்த்து என்னவாய் இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஏற்கனவே இந்த சீரியல் விறுவிறுப்போடு போய்க்கொண்டு இருக்கும்போது புது ப்ரேமோவில் வீட்டு சீமாட்டிகள் எல்லாம் பட்டு சேலை மினுமினுக்க , கொண்டையில் மல்லிகை பூவை சுற்றிக் கொண்டு கலக்கலாக கிளம்பி இருக்காங்க. வீட்டு ஆண்கள் எல்லாம் சமையல் கரண்டிகளை தூக்கிக்கண்டு கிளம்பியிருக்கிறார்கள். இது என்ன புதுசா ஏதும் தொடங்கிட்டாங்களா என ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து இருக்கும் நேரத்தில் இந்த சீன்கள் எப்போது வரும் என்று கேட்டு வருகின்றனர்.

மாற்றம் கொண்டு வந்த மருமகள்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் சீரியல் டிஆர்பியிலும் இப்போது முன்னேறி வந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளின் ஒற்றுமையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. பெரிய சுந்தரம் மற்றும் அவரது ஐந்து பேரன்கள் மட்டுமே வாழும் வீட்டில் பெண்களுக்கு அனுமதி இல்லை. யாருக்குமே திருமணம் செய்ய மாட்டோம் என்று உறுதி எடுத்திருக்கின்றனர். இதில் ராஜசுந்தரம் பாண்டவர் , நல்ல சுந்தரம் பாண்டவர் , அழகுசுந்தரம் பாண்டவர் , அன்பு சுந்தரம் பாண்டவர் மற்றும் குட்டி சுந்தரம் பாண்டவர் என அண்ணன் தம்பி அனைவருமே ஒரே வீட்டில் சந்தோசமக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு இடையில் குட்டி சுந்தரம் கயலை காதலித்து கொண்டு இருக்கிறார். ஆனால் இவர்களுக்குள் திருமணம் நடைபெற பல பிரச்சனைகளுக்கு அப்புறம் போராடி கயல் குட்டி சுந்தரத்தை திருமணம் செய்து கொண்டார்.

எல்லோருக்கும் ஜோடி கிடைச்சாச்சு
அவர் திருமணம் செய்ததும் அந்த வீட்டில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் திருமணம் நடத்தி வைக்கிறார். பால் தொழிலதிபரான ராஜ சுந்தரத்துடன் ரேவதி, அன்பு சுந்தரத்துடன் மல்லிகா, அழகு சுந்தரத்துடன் தேன்மொழி மற்றும் சர்வதேச வில்வித்தை சாம்பியன்ஷிப் ரோசிணியை நல்ல சுந்தரத்துடன் திருமணம் செய்து வைக்கிறார்கள். மருமகள்கள் ஒவ்வொருவராக வந்த பிறகுதான் வீட்டிற்குள் பிரச்சனைகளும் புதுசு புதுசாக வந்துகொண்டே இருக்கிறது. அதுவும் நல்ல சுந்தரத்தின் மனைவி ரோசினி வந்தபிறகுதான் அண்ணன் தம்பிகள் பிரிவினையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே ரேவதி முதலில் இப்படிதான் செய்துகொண்டிருந்தார். ஆனால் இப்போ திருந்தி குடும்ப ஒற்றுமைக்காக போராடி வருகிறார்கள்.

மீண்டும் கரகாட்டக்காரன் கார்
கலகலப்பு க்கும் பிரச்சனைகளுக்கும் பஞ்சமே இல்லாமல் பாண்டவர் இல்லம் பரபரத்துக் கொண்டிருந்தாலும் நல்ல சுந்தரத்தின் மொக்கையான சமையல் காமெடிகள் பல நேரம் பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் என்டர்டைன்மென்ட்டைகொடுத்து வருகிறது. அந்த நிலையில் கையில் கரண்டியும் ,கரகாட்டக்காரன் கெட்டப்பிலும் இவர்கள் கிளம்பி இருப்பதை பார்த்ததும் என்னவாய் இருக்கும் என கேட்கும் ரசிகர்களுக்கு இவர்கள் ஒரு குடும்பத்தையே சேர்த்து வைக்கப் போகிறார்களாம். பாண்டவர் இல்லம் மற்றும் நினைத்தாலே இனிக்கும் சீரியல் சங்கமம் வைத்திருக்கிறார்கள். அதில் சோனியா அகர்வால் மற்றும் ராகவ் தம்பதிகளாக நடித்திருக்கின்றனர். அவர்களுக்குள் இருக்கும் மனக்கசப்பை நீக்கி இவர்கள் சேர்த்து வைப்பதற்காக தான் காரை எடுத்துக் கொண்டு பொடிநடையாக கிளம்பி இருக்கிறார்கள்.

அதுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்
திரைப்படங்களில் டாப்பில் நடித்துக்கொண்டிருந்த சோனியா அகர்வால் இப்போ சீரியலில் களமிறங்கி இரக்கிறார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய ரசிகர்கள் எப்படி இருந்தவர் இப்படி மாறி விட்டாரே என்று பீல் பண்ணி வருகின்றனர். ஆனால் ஒரு சிலரோ அதே அழகில் ஜொலிக்கிறாரே என்று கொஞ்சமும் மாறவில்லை என்று கூறியிருக்கிறார்கள். இதுவரைக்கும் பார்த்த முகங்களையும் பிரச்சனைகளுமே இந்த சீரியலில் பார்த்து வந்தவர்களுக்கு புது என்டர்டைன்மென்ட் ஆக இப்போ சீரியல் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. ப்ரோமோவை பார்த்ததும் இந்த சீன்கள் எப்போது வரும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர். சோனியா அகர்வாலும் ராகவும் காதலித்து திருமணம் செய்து கொண்டிருந்தாலும் ராகவ் இப்போது குழந்தை வேண்டாம் ,சந்தோசமாக மட்டும் இருப்போம் என்று கூறிக் கொண்டிருக்கிறார்.

ஃபீல் பண்ணாதீங்க
ஆனால் சோனியா அகர்வாலுக்கு குழந்தை என்றால் கொள்ளை பிரியம். அதனால் இந்த வயதிலே குழந்தையைப் பெற்றுக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று பீல் பண்ணிக் கொண்டிருக்கிறார். இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சின்ன சின்ன பிரச்சனைகளையும் பெரிய பிரச்சனையாக மாறி கொண்டிருக்கிறது. இவர்கள் இப்போது பிரிந்து விடலாம் என்று இருக்கும் நேரத்தில் தான் சோனியா அகர்வாலின் அம்மா அப்பா பாண்டவர் இல்ல குடும்பத்தை பற்றி கேள்விப்பட்டு இவர்களை எப்படியாவது தங்கள் மகளையும் மருமகனையும் சேர்த்து வைத்து விடுவார்கள் என்று கூப்பிட்டு இருக்கிறார்கள். அதுவும் அவர்களுடைய அறுபதாவது கல்யாணத்திற்கு சிறப்பு விருந்தினராக தான் இவர்கள் இப்படி காரில் ஊர்வலமாக போய்க் கொண்டிருக்கின்றனர். அங்கே சென்ற பிறகுதான் இவர்கள் செய்யும் சேட்டைகள் பிளாப் ஆவதும் சக்சஸ் ஆவதும் தெரியும்.












Click it and Unblock the Notifications