ஹுசைனிக்கு அஞ்சலி செலுத்த வந்த காயத்ரி.. கலா மாஸ்டர் சொன்ன உருக்கமான வார்த்தை.. கலங்கிய நடிகர்
சென்னை: திரைப்பட நடிகராகவும் கராத்தே நிபுணராகவும் இருந்த ஹுசைனி ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலையில் காலமானார். அவருடைய இறுதி சடங்கில் நடிகையையும் அரசியல் பிரமுகருமான காயத்ரி கலந்து கொண்டிருக்கிறார். அதுபோல கலா மாஸ்டர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கண்ணீரோடு ஹுசைனி குறித்து பேசி இருக்கிறார்.
மதுரையை பூர்வீகமான கொண்ட ஷிஹான் ஹுசைன் கராத்தே மாஸ்டராக பல நடிகர்களுக்கும் பல மாணவர்களுக்கும் பயிற்சி அளித்திருக்கிறார். அதுபோல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். புன்னகை மன்னன் என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் சினிமாவில் அறிமுகமானார். அதற்கு பிறகு வேலைக்காரன், மூங்கில் கோட்டை, பத்ரி, காத்து வாக்குல ரெண்டு காதல் உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார்.

பலருக்கும் முன்மாதிரி
அதுபோல பல மாணவர்களுக்கு வில்வித்தை மற்றும் கராத்தே பயிற்சி அளித்து கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் பல நடிகர்களும் இவரிடம் கராத்தே பயிற்சி எடுக்கிறார்கள். நடிகர் விஜய் கூட பத்ரி படத்திற்காக இவரிடம் தான் கராத்தே பயிற்சி முறையாக கற்றுக் கொண்டாராம். இவருக்கு ரத்த புற்றுநோய் பாதிக்கப்பட்டு இருப்பதை தெரிந்ததும் டாக்டர்கள் நீங்கள் 10 நாட்கள் தான் உயிரோடு இருப்பீர்கள் என்று அதிர்ச்சிகரமான விஷயத்தை சொல்லி இருந்தனர்.
ஹுசைன் கடைசி ஆசை
ஆனாலும் சிரித்த முகமாக அதை ஏற்றுக் கொண்டார். கடந்த இரண்டு வாரங்களாக அவர் தன்னுடைய கடைசி ஆசைகள் ஒவ்வொன்றையும் சொல்லிக் கொண்டே இருந்தார். தன்னுடைய மாணவர்கள் தமிழ்நாடு சார்பாக ஒலிம்பிக் நிகழ்ச்சியில் பங்கு பெற்று வெற்றி பெற வேண்டும் என்பது என்னுடைய ஆசை அதற்கு முறையாக விளையாட்டு அரங்கம் வேண்டும் என்று விளையாட்டு துறை அமைச்சரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்திருந்தார்.
அதுபோல நடிகர் விஜய் தமிழ்நாட்டில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு வில்வித்தை வீரரை உருவாக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். தன்னுடைய கராத்தே பள்ளியை விற்கப் போகிறேன் என்றும் கூறியிருந்தார். ஒவ்வொரு நாளும் தன்னுடைய ரத்தத்தின் அளவு குறைந்து கொண்டே வரும்போதும் தனக்கு பிறகு தன்னுடைய மாணவர்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
டான்ஸ் மாஸ்டர் கலா வருத்தம்
அதுபோல இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு தன்னுடைய உடலை தானம் செய்திருந்தார். தன்னுடைய இதயம் தவிர மற்ற பாகங்களை தானம் செய்திருந்தார். இதயத்தை மட்டும் மதுரையில் உள்ள கராத்தே பள்ளியில் தன் சிலையில் வைக்க வேண்டும் என்று உருக்கமாக பேசி இருந்தார். இந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவருடைய இறுதி சடங்கில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
அப்போது டான்ஸ் மாஸ்டர் கலா கண்கலங்கி பேசியிருந்தார். அதில் நான் டான்ஸ் ஸ்கூல் தொடங்கிய போது எனக்கு முதல் மாணவனாக ஹுசேன் வந்து சேர்ந்தான். அப்போது இருந்து இப்ப வரைக்கும் நாங்கள் நல்ல விஷயமாக இருந்தாலும் சரி கெட்ட விஷயமாக இருந்தாலும் சரி எல்லாமே பேசிக் கொள்கிறோம். எனக்கு உறுதுணையாக இருந்தான் அவனுக்கு உடல்நிலை சரியில்லை என்றபோது நான் போன் செய்து உன்னை பார்க்க வரேன்னு சொன்னேன்.
அஞ்சலி செலுத்திய காயத்ரி
அதற்கு வேண்டாம் இன்பெக்சன் வந்துரும் என்று சொல்லிவிட்டார். அதற்குப் பிறகு ஐசியூக்கு அவனைக் கொண்டு போகும்போது நான் கடைசியாக பேசினேன். இப்ப கூட அவனுடைய குரல் என் காதுக்குள் கேட்டுக் கொண்டே இருக்கிறது என்று கலங்கியபடியே பேசி இருக்கிறார். அதுபோல நடிகை காயத்ரி ஹுசைனுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.
வின்சென்ட் அசோகன் வருத்தம்
ஹுசைன் மருத்துவமனையில் இருக்கும்போது விரைவில் நலம் பெற வேண்டும் என்று அவரை நேரில் சந்தித்து அவரோடு எடுத்த புகைப்படங்களை காயத்ரி பகிர்ந்து இருந்தார். அதுபோல ஹுசைனுக்கு கடைசி வரைக்கும் உறுதுணையாக இருந்த நடிகர் வின்சென்ட் அசோகன் ஹுசைனின் மறைவு குறித்து கலங்கி பேசியிருந்தார்.
நான் இதுவரைக்கும் பார்த்த மனிதர்களில் ஹுசைன் வித்தியாசமானவர். தன்னுடைய மரணம் வந்துவிட்டது என்று தெரிந்தும் சந்தோஷமாக அதை எதிர்கொண்டார். நாங்கள் கடந்த ஆறு ஏழு வருடங்களாக ஒன்றாக பயணிக்கிறோம். அவருடைய ஆரம்ப காலம் முதல் இப்போ வரைக்கும் பல விஷயங்களை என்னிடம் சொல்லி இருக்கிறார்.
அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்
எவ்வளவோ கஷ்டங்களை தாண்டி எப்படியாவது வாழ்க்கையில் முன்னுக்கு வரவேண்டும் என்ற துடிப்போடு இருந்தாரு. அதுபோல அவரை சுற்றி இருப்பவர்களும் மேலே வர வேண்டும் என்று நினைப்பாரு. ஆனால் அவருக்கு இந்த நிலை வந்ததை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவருடைய ஆன்மா சாந்தியடைய வேண்டிக் கொள்கிறேன் என்று கண்ணீரோடு பேசியிருந்தார். அதுபோல எஸ் வி சேகர் உட்பட ஒரு சில நடிகர்களும் நேரில் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.
-
திடீரென பிரச்சார வாகனத்தில் ஏறி விஜய் முகத்துக்கு முன் வந்த சிறுவன்.. இழுத்துப்போட்ட பாதுகாவலர்கள் -
விஜய் பெரம்பூர் தொகுதிக்கான வேட்புமனுவில் தவறு செய்திருந்தாலும்! அவரது வேட்புமனு ரத்தாகாதாமே! ஏன்? -
Vijay: புதுச்சேரியிலும் திருந்தாத ரசிகர்கள்! விஜய்யை பார்க்க சாலை விதிகளை மீறும் தவெகவினர்! -
2026 தேர்தல் களம்.. மக்களுக்கு அட்வைஸ்! ரஜினிகாந்த் கொடுத்த ரியாக்ஷன்.. அடுத்த பஞ்சாயத்து -
டைம் ட்ராவல் செய்த விஜய்? பெரம்பூர் மனுவில் 52 வயது.. திருச்சி வேட்புமனுவில் 51 வயது! வெரி ராங் ப்ரோ -
ஷாக்! விஜய் வேட்புமனுவிலேயே செய்த பெரிய பிழை! திருச்சி கிழக்கு, பெரம்பூரில் நிராகரிக்கப்பட வாய்ப்பு? -
களத்தில் தலைவரை காணோம்.. தேர்தல் ஹீட்டிலும் பனையூரில் ரெஸ்ட்? தவெக தொண்டர்களையே கதறவிடும் விஜய்! -
திருத்தணி தவெக நிர்வாகியின் அலப்பறை.. தனித்து விடப்பட்டதற்கு காரணம் இதுதான்! புலம்பும் நிர்வாகிகள் -
ரஜினிகாந்த் திருந்திவிட்டார்.. விஜய் கட்சியை கலைத்துவிட்டு சென்றால் நல்லது - அமீர் -
நல்ல நேரத்திற்காக அரை மணி நேரம் காத்திருந்த விஜய்.. திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்கல் செய்தார் -
ஆதவ் அர்ஜுனா கார் மோதி போலீஸ்காரர் கால் முறிந்தது.. திருச்சி விஜய் பிரச்சாரத்தில் அதிர்ச்சி -
Election history: இந்திரா டூ மோடி.! ‘இரட்டைத் தொகுதிகள்’: யார்? எங்கே? நின்றார்கள்.. வென்றார்கள்?












Click it and Unblock the Notifications