கார்த்தியின் சர்தார் 2 vs சூரியின் மண்டாடி 2வது நாளில் யார் மாஸ்? வசூலில் எதிர்பாராத மாற்றம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரே நாளில் ரிலீஸ் ஆன சர்தார் 2 மற்றும் மண்டாடி படங்கள் இரண்டுமே முன்னணி நடிகரின் படங்கள் என்பதால் முதல் நாளிலே வசூல் போட்டி ஆரம்பித்த நிலையில் இப்போது 2வது நாள் வசூலிலும் சூரியின் மண்டாடி முன்னிலை பிடித்து இருப்பதாக ஆரம்ப கட்ட பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் காட்டுகிறது.

மண்டாடி வசூல் நிலவரம்

காமெடி நடிகராக அறிமுகமான சூரி இப்போது கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் கார்த்தி ஏற்கனவே மாஸ் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் யார் படத்துக்கு மக்கள் அதிகமாக தியேட்டருக்கு வருகிறார்கள் என்று எதிர்பார்ப்பு ஆரம்பத்திலேயே இருந்தது. மண்டாடி திரைப்படம் 2வது நாளில் இந்திய அளவில் இதுவரை சுமார் 4.63 கோடி நெட் வசூல் செய்ததாக சமீபத்திய பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் படத்தின் 2 நாள் இந்திய நெட் வசூல் சுமார் 9.53 கோடியை தொட்டுள்ளது. 2வது நாளில் படத்தின் ஆக்குபின்சி 36 சதவீதத்திற்கு மேல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நாளில் மண்டாடி சுமார் 4.45 கோடி நெட் வசூல் செய்ததாகவும், உலக அளவில் 6. 55 கோடி வரை சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின. அதாவது படம் பெரிய ஓபனிங் மட்டும் நம்பி நிற்காமல் 2வது நாளிலும் கூட்டத்தை தக்க வைத்திருக்கிறது என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம். அதே போல கார்த்தியின் சர்க்கார் 2 பக்கம் பார்த்தால் 2வது நாளில் ஆரம்ப கட்ட நிலவரத்தின் படி இந்திய நெட் வசூல் ரூபாய் 1.53 கோடி முதல் 1.97 கோடி வரையிலான நிலையில் இருந்தது.

Soori karthi

சர்தார் 2 வசூல் நிலவரம்

2 நாள் மொத்த நிலவரம் சுமார் 6.03 முதல் 6.32 கோடி என வெவ்வேறு டிராகர்கள் காட்டுகின்றன. இதனால் இங்கும் மொத்த வசூல் நிலவரம் மாற வாய்ப்பு இருக்கிறது. முதல் நாளில் சர்தார் 2 இந்திய நெட்டில் 4.50 கோடி வசூல் செய்திருந்தது. ஆனால் உலக அளவில் பார்த்தால் 6. 80 கோடி கிராஸ் வசூல் உடன் மண்டாடியை விட முன்னிலையில் இருந்தது. இதனால் முதல் நாள் போட்டி கிட்டத்தட்ட சமமாக இருந்தாலும் 2வது நாள் இந்திய பாக்ஸ் ஆபிஸ் மண்டாடிக்கு சாதகமான நிலை உருவாகி உள்ளது.

Mandadi Review: மண்டாடி முழு படம் எப்படி இருக்கு? சூரிக்கு கடல் கை கொடுத்ததா? இல்லையா?
சூரியின் படம் என சொன்னதும் காமெடி இருக்கும் மட்டும் நினைத்தால் இந்த முறை அந்த கணக்கு கொஞ்சம் மாறுகிறது. கடல், மீனவ வாழ்க்கை, பாரம்பரிய படகு போட்டி, பழிவாங்குதல் என ஒரு வேறு ஒரு உலகத்திற்குள் படம் அழைத்து செல்கிறது. மதிமாறன் புகழேந்தி இயக்கி இருக்கும் இந்த படத்தில் சூரியுடன் சுகாஸ், மஹிமா நம்பியார், சத்யராஜ் உள்ளிட்டோர் நடத்து இருக்கின்றனர். படகு போட்டி தான் படத்தின் முக்கியமான பின்னணி என்றாலும் அதற்குள் மனிதர்களின் உணர்வுகளையும் மோதல்களையும் வைத்திருக்கின்றனர்.

சர்தார் 2 ஸ்பெஷல்

மறுபக்கம் சர்தார் 2 என்பது 2002இல் வெளியான சர்தார் படத்தின் தொடர்ச்சி. பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி மீண்டும் ஸ்பை கேரக்டரில் களம் இறங்கி இருக்கிறார். முதல் பாகத்தில் இருந்த ஸ்பை உலகத்தை இன்னும் பெரிதாக்கி ஆக்ஷன், சர்வதேச பின்னணி என அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால் படம் வெளியான பிறகு ஆக்சன் காட்சியில் கார்த்தியின் நடிப்பு, இடைவேளை காட்சி ஆகியவற்றுக்கு பாராட்டு கிடைத்தாலும் 2வது பாதி, கதையின் நீளம் பற்றி கலவையான விமர்சனங்களும் வந்துள்ளன.

மொத்தத்தில் பார்த்தால் முதல் நாளில் கார்த்தி vs சூரி என்று ஆரம்பித்த போட்டி, இப்போது மனண்டாடி கூட்டத்தை தக்க வைக்குமா சர்தார் 2 மீண்டும் வேகம் எடுக்குமா? என்ற கட்டத்திற்கு வந்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+