ஜீ தமிழ் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பராசக்தி பட நடிகை.. ஆரம்பமே அசத்தல் தான்! ஆனாலும் ஒரு ட்விஸ்ட் இருக்கு
சமீபத்தில் வெளியான பராசக்தி திரைப்படத்தில் நடித்த நடிகை ஒருவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். இவருடைய அறிமுகத்தால் இந்த சீரியலில் இனி எதிர்பார்க்காத திருப்பங்கள் வர இருக்கிறது என்று கூறப்படுகிறது. அதிலும் யார் அந்த நடிகை? இந்த சீரியலில் அவருடைய கேரக்டர் என்ன என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
பராசக்தி திரைப்படத்தில் சில காட்சிகளில் மட்டுமே தோன்றினாலும், ரசிகர்களின் கவனத்தை திருப்பி வைத்த நடிகை யார் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த நடிகை வேறு யாருமில்லை... வெள்ளித்திரையிலும் சின்னத்திரையிலும் மெதுவாக தனது இடத்தை பிடித்து வரும் பப்ரி கோஷ் தான்.

பிரபலம் கொடுத்த பராசக்தி படம்
சிவகார்த்திகேயன் நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான பராசக்தி படத்தில், இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் மாணவர் குழுவில் ஒருவராக நடித்த பப்ரி கோஷ் தான் இப்போது கார்த்திகை தீபம் சீரியலில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். பராசக்தி படத்தின் கதையின் முக்கிய காட்சிகளில் அவருடைய நடிப்பு மற்றும் ரியாக்ஷன் பெரிதளவில் சோசியல் மீடியாவில் பேசப்பட்டது. அப்போது "இந்த நடிகை யார்?" என்று தேட வைத்தது.
விஜய், அஜித் படங்களிலும் நடித்தவர்
பலருக்கும் தெரியாத விஷயம் என்னவென்றால், பப்ரி கோஷ் ஏற்கனவே தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார். விஜய் நடித்த பைரவா மற்றும் சர்கார் படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.
அதேபோல், அஜித் நடித்த விஸ்வாசம் படத்திலும் அவர் நடித்தது குறிப்பிடத்தக்கது. இப்படி பெரிய படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம், மெதுவாக தனது முகத்தை ரசிகர்களிடம் பதிய வைத்தார். ஆனால் சின்னத்திரையில் இவர் ஏற்கனவே பரிச்சயம் ஆனவர்தான். அதிலும் சன் டிவியில் ஒளிபரப்பான பாண்டவர் இல்லம் சீரியலில் பல வருடங்களாக நடித்திருந்தார்.
ஆரம்பம்
மேற்கு வங்காளத்தை சேர்ந்த பப்ரி கோஷ், 2009ஆம் ஆண்டு வெளியான பெங்காலி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு ஒடியா, தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்த அவர், டூரிங் டாக்கீஸ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
பெரும்பாலும் சப்போர்ட்டிங் ரோல்களில் நடித்தாலும், ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் தன்னுடைய இருப்பை உணர்த்தும் திறமை அவருக்கு இருக்கிறது.
சின்னத்திரையிலும் வலுவான பயணம்
சினிமாவுடன் சேர்த்து, சீரியல்களிலும் பப்ரி கோஷ் தனி இடம் பிடித்துள்ளார். நாயகி, பாண்டவர் இல்லம், பூவே உனக்காக, சித்தி 2, சுந்தரி, கௌரி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார். மேலும், சன் டிவியில் ஒளிபரப்பான 'வணக்கம் தமிழா' நிகழ்ச்சியிலும் பல முறை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார்.

ஜீ தமிழ் கார்த்திகை தீபம்
தற்போது, கார்த்திகை தீபம் சீரியலில் 'ப்ரியா' என்ற கதாபாத்திரத்தில் பப்ரி கோஷ் இணைந்துள்ளார். ஏற்கனவே விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில், அவரது வரவு புதிய திருப்பங்களை உருவாக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இந்த கதாபாத்திரம் ஹீரோவின் வாழ்க்கையில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications