இசையமைப்பாளர் தேவா தம்பி மகன் கார்த்திக் சபேசன் 37 வயதில் திடீர் உயிரிழப்பு.. சோதனை மேல் சோதனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் சபேஷ் இன்னொரு சகோதரரான முரளியுடன் இணைந்து சபேஷ் - முரளி என்ற பெயரில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்தவர். இவருடைய மகன்தான் நடிகர் கார்த்திக் சபேஷ். 37 வயதே ஆன கார்த்திக், உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவருடைய திடீர் மறைவு செய்தி, சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கார்த்திக் சபேஷின் வாழ்க்கையில் ஏற்கனவே மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டிருந்தது. அவரது தந்தை சபேஷ் கடந்த ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். தந்தையை இழந்த துயரத்திலிருந்து குடும்பத்தினர் மீண்டு வருவதற்குள், 2 நாட்களுக்கு முன்பு அவரது பெரியப்பாவான இசையமைப்பாளர் தேவாவும் காலமானார். இப்போது கார்த்திக் சபேஷும் உயிரிழந்திருப்பது அந்த குடும்பத்துக்கு தாங்க முடியாத இன்னொரு அடியாக அமைந்துள்ளது.

Karthik Sabesh Deva Sabesh Murali Tamil Cinema Actor Death

அடுத்தடுத்து ஏற்பட்ட இழப்புகள்

தேவா தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிய இசையமைப்பாளர். குறிப்பாக, கானா பாடல்களை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்ததில் அவருக்கு முக்கிய பங்கு உண்டு. அவருடைய பாடல்களைக் கேட்டு வளர்ந்த ரசிகர்கள் ஏராளம். அப்படிப்பட்ட தேவாவின் மறைவே திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் பெரிய இழப்பாக இருக்கும் நிலையில், அவருடைய குடும்பத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்திருக்கும் இந்த மரணங்கள் செய்தியை அறிந்தவர்களை மேலும் வேதனைப்படுத்தியுள்ளன.

தந்தையை இழந்த கார்த்திக் சபேஷ், அதன்பிறகு பெரியப்பா தேவாவையும் இழந்த நிலையில், தற்போது அவரும் உயிரிழந்திருப்பது குடும்பத்தினர் எதிர்பார்த்திராத பேரதிர்ச்சியாக மாறியுள்ளது. ஒரே குடும்பத்தில் இவ்வளவு குறுகிய காலத்தில் அடுத்தடுத்து இழப்புகள் ஏற்பட்டிருப்பதை நினைத்து பார்க்கவே மனம் கனக்கிறது.

திரைப்படங்களில் நடித்த கார்த்திக் சபேஷ்

கார்த்திக் சபேஷ் சில தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். தம், வல்லவன், குளிர் 100, பட்டத்து யானை உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் இசையமைப்பாளர் சபேஷின் மகனாக பிரபலம் இருந்தாலும் அவர், நடிகராகவும் தனது பயணத்தை தொடர்ந்தார். கார்த்திக் சபேஷுக்கு ரம்யா கார்த்திக் என்ற மனைவியும், பிரிஷானிதாரா, ஹைரானிதாரா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகளே இல்லாத அளவுக்கு இந்த இழப்பு அமைந்துள்ளது. அவருடைய மறைவு செய்தியைத் தொடர்ந்து உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலகினர் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

ஒருபக்கம் தேவாவின் மறைவை ஏற்றுக்கொள்ள முடியாமல் ரசிகர்கள் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், அவருடைய குடும்பத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த அடுத்தடுத்த இழப்புகள் பலரையும் கலங்க வைத்திருக்கின்றன. காலம் எல்லா காயங்களையும் ஆற்றும் என்று சொன்னாலும், இப்படி தொடர்ந்து துயர செய்திகள் வந்து கொண்டிருக்கும் ஒரு குடும்பத்துக்கு ஆறுதல் கிடைக்கவே நீண்ட காலம் ஆகலாம். தேவாவின் குடும்பத்தினர் இந்த துயரத்திலிருந்து மீண்டு வர வேண்டும் என்பதே தற்போது பலருடைய பிரார்த்தனையாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+