கார்த்திகை தீபம் நடிகைக்கு திருமணம்.. கணவர் இந்த பிரபலம் தானா? புகைப்படத்தோடு கொடுத்த கேப்ஷன்
சென்னை: ஜீ தமிழில் சேனலில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் அர்திகாவிற்கு திருமணம் நடைபெற்று இருக்கிறது.
நடிகை அர்திகா தன்னுடைய காதலனை திருமணம் செய்திருக்கும் நிலையில் அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

அதோடு தன்னுடைய கணவர் குறித்து சில தகவல்களை அர்திகா பகிர்ந்து இருக்கிறார். இதற்கு அதிகமான ரசிகர்கள் புது தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.
அர்திகா சுமார் நான்கு திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அந்த திரைப்படங்களில் இன்னும் வெளியாகாமல் தான் இருக்கின்றது. குறிப்பாக கார்த்திக் ராஜ் நடித்த பிளாக் அண்ட் ஒயிட் திரைப்படத்தில் இவர் நடித்திருக்கிறாராம். இந்த நிலையில் இந்த சீரியலுக்கு இவருக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தது சேதுபட நடிகையான அபிதாதனாம்.

அபிதா இப்போது சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்துக் கொண்டு இருந்தாலும், இந்த சீரியலின் வாய்ப்பு அவரால் தான் அர்திகாவுக்கு கிடைத்திருந்ததாம். அபிதாவும் அர்த்திகாவும் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பதால் அர்திகாவுக்கு இந்த வாய்ப்பைப் பற்றி அபிதா தான் கூறி இருந்தாராம்.
அது மட்டுமல்லாமல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் நடிக்கும் கார்த்திக் மூலமாகவும் இவருக்கு இந்த வாய்ப்பு நிரந்தரமாகி இருக்கிறதாம் . அர்திகா ஏற்கனவே கார்த்திக் உடன் மாதவி என்ற ஷார்ட் ஃப்லிமில் நடித்திருக்கிறாராம். இந்த ஷார்ட் பிலிமில் இவரை பார்ப்பதற்கும் இப்போது இந்த சீரியல் பார்ப்பதற்கும் அதிகமாக வித்தியாசம் இருக்கிறதாம்.

அந்த ஷார்ட் பிலிமில் படுமார்டன் பெண்ணாக வந்த இவர் இந்த சீரியலில் எப்படி ஒரு கேரக்டரில் நடித்து இருக்கிறார் என்பது பலருக்கும் பார்த்ததும் தெரிந்து கொள்ள முடியாத வகையில் தான் இருக்கிறதாம். ஆனால் இந்த சீரியலில் இவர் நடிக்கும் போது தான் கருப்பாக இருப்பவர்களுக்கு சமுதாயத்தில் எவ்வளவு அவமானங்களும், புறக்கணிப்புகளும் ஏற்படுகிறது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது என்று அவர் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் பேட்டி ஒன்றில் தமிழ் பசங்கள தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவங்க தான் பொண்ணுங்களை ரொம்ப கேர் எடுத்து பாத்துக்குவாங்க. நான் தமிழ் பையனை தான் காதலித்து திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருந்தார்.இந்த நிலையில் கடந்த மாதம் அர்திகா தனக்கு விரைவில் திருமணம் என்று தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்திருந்தார்.
அதே நேரத்தில் அவருடைய கணவர் யார் என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வந்திருந்தது. அது மட்டுமில்லாமல் அர்திகா இனி சீரியலில் தொடர்வாரா? என்பதும் பலருடைய கேள்வியாக இருந்தது. அது குறித்து அந்த வீடியோவில் விளக்கம் கொடுத்திருந்தார். அப்போது தான் சீரியலில் தொடர்வேன் என்றும் எனக்கு அங்கீகாரம் கொடுத்தது தமிழ் சீரியலில் தான்.
அதுவும் கார்த்திகை தீபம் சீரியலில் இருந்து என்னால் விலக முடியாது என்றும் கூறியிருந்தார். இப்படியாக இருக்கும் நிலையில் கடந்த நவம்பர் 6ஆம் தேதி கேரளாவில் அர்திகாவிற்க்கு அவருடைய காதலனுடன் திருமணம் நடைபெற்று இருக்கிறது. அர்திகா தனது திருமண புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதோடு எனது வாழ்க்கையில் சிறந்த தருணங்கள் என்று கேப்ஷனையும் அவர் கொடுத்திருக்கிறார். இதற்கு சின்னத்திரை பிரபலங்கள் ரசிகர்கள் என பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
-
நடிகர் விவேக் பிரசன்னாவின் சகோதரர் யார் தெரியுமா? 100க்கும் மேற்பட்ட ஹிட் படங்களுக்கு பாடல் எழுதியவர்! நெகிழ்ச்சி கதை -
இந்த அம்மா கையில் இருக்கும் குழந்தை யார் தெரியுதா? தனுஷ்க்கு ஜோடி! இப்போ உருக்கமான பதிவு -
தங்கத்திற்கு தடை.. ரஷ்ய உத்தரவால் தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயரபோகுது.. புடின் மெகா திட்டம்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம்












Click it and Unblock the Notifications