கார்த்திகை தீபம் நடிகைக்கு டும் டும் டும்.. இனி சீரியலில் யாரு கதாநாயகி.. அவரே கொடுத்த விளக்கம்
சென்னை: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் அர்திகாவிற்கு அடுத்த மாதம் திருமணம் என்பதை தற்போது அவரே கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் யாரு மாப்பிள்ளை என்பது பற்றி பலர் கேள்வி எழுப்பி வரும் நிலையில் அவர் காதலித்த நபர் தான் என்று அர்திகா கூறி இருக்கிறார்.
அதே நேரத்தில் இனி சீரியலில் தான் தொடர்வேனா இல்லையா என்ற ரசிகர்களின் கேள்விக்கும் அர்திகா பதிலளித்து இருக்கிறார்.
கார்த்திகை தீபம் சீரியலில் தீபா கேரக்டரில் நடிக்கும் அர்திகா நிஜத்தில் இந்த சீரியலில் வருவது போல கருப்பாக இருக்க மாட்டாராம். நிஜத்தில் இவர் கலராக இருந்தாலும் இந்த சீரியலுக்காக தான் இப்படி நடிக்கிறார் .ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் சீரியலில் ரச்சிதா இப்படி தான் அறிமுகமானார்.
அதேபோல இப்போது இவரும் பாவாடை தாவணியில் இந்த சீரியலில் அறிமுகமாகி இருக்கிறார். ஒரு பாடகியாக இருக்கும் இவர் அழகு இல்லாமல் இருக்கிறார் என்று இவரை பின்னாடி வைத்துக் கொண்டு அழகாக இருக்கிறார் என அழகாக இருக்கும் ஒரு நடிகையை முன்பு வைத்து இவருடைய திறமை மறைக்கப்படுகிறது. இந்த சீரியலில் ஒரு சில எபிசோடுகளில் இவர் ரசிகர்களின் மத்தியில் அனுதாபங்களை பெற்றிருக்கின்றார்.
அர்திகா சுமார் நான்கு திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அந்த திரைப்படங்களில் இன்னும் வெளியாகாமல் தான் இருக்கின்றது. குறிப்பாக கார்த்திக் ராஜ் நடித்த பிளாக் அண்ட் ஒயிட் திரைப்படத்தில் இவர் நடித்திருக்கிறாராம். இந்த நிலையில் இந்த சீரியலுக்கு இவருக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தது சேதுபட நடிகையான அபிதாதானாம்.
அபிதா இப்போது சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்துக் கொண்டு இருந்தாலும், இந்த சீரியலின் வாய்ப்பு அவரால் தான் அர்திகாவுக்கு கிடைத்திருந்ததாம். அபிதாவும் அர்த்திகாவும் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பதால் அர்திகாவுக்கு இந்த வாய்ப்பைப் பற்றி அபிதா தான் கூறி இருந்தாராம்.
அது மட்டுமல்லாமல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் நடிக்கும் கார்த்திக் மூலமாகவும் இவருக்கு இந்த வாய்ப்பு நிரந்தரமாகி இருக்கிறதாம் . அர்திகா ஏற்கனவே கார்த்திக் உடன் மாதவி என்ற ஷார்ட் ஃப்லிம்மில் நடித்திருக்கிறாராம். இந்த ஷார்ட் ஃப்லிம்மில் இவரை பார்ப்பதற்கும் இப்போது இந்த சீரியலில் பார்ப்பதற்கும் அதிகமாக வித்தியாசம் இருக்கிறதாம்.
அந்த சீரியலில் படுமார்டன் பெண்ணாக வந்த இவர் இந்த சீரியலில் எப்படி ஒரு கேரக்டரில் நடித்து இருக்கிறார் என்பது பலருக்கும் பார்த்ததும் தெரிந்து கொள்ள முடியாத வகையில் தான் இருக்கிறதாம். ஆனால் இந்த சீரியலில் இவர் நடிக்கும் போது தான் கருப்பாக இருப்பவர்களுக்கு சமுதாயத்தில் எவ்வளவு அவமானங்களும், புறக்கணிப்புகளும் ஏற்படுகிறது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது என்று அவர் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் பேட்டி ஒன்றில் தமிழ் பசங்கள தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவங்க தான் பொண்ணுங்களை ரொம்ப கேர் எடுத்து பாத்துக்குவாங்க. நான் தமிழ் பையனை தான் காதலித்து திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் அர்திகாவுக்கு வரும் நவம்பர் மாதம் ஆறாம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறதாம்.

இவர் காதலித்த நபரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்றும் இவருடைய திருமணம் கேரளாவில் பெற்றோர்கள் உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக நடைபெற இருக்கிறது என்றும் சமீபத்தில் வீடியோ ஒன்றில் பேசியிருக்கிறார். அதோடு திருமணத்திற்கு பிறகு நீங்கள் இந்த சீரியலில் நடிப்பீர்களா இல்லையா என்று பலர் கேள்வி எழுப்பி இருந்த நிலையில் நான் கண்டிப்பாக இதே கேரக்டரில் தொடர்ந்து நடிப்பேன்.
எனக்கு தமிழ் ரசிகர்கள் கொடுத்த அன்பு பெரியது. அதை நான் எப்போதும் இழக்க மாட்டேன் என்று அந்த பேட்டியில் பேசி இருக்கிறார். தற்போது இவருக்கு அதிகமான ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல்












Click it and Unblock the Notifications