கார்த்திகை தீபம்: காலை வாரிய ரூபஸ்ரீ.. சிதம்பரத்திற்கு சவால் விட்ட கார்த்திக்.. எதிர்பாராத திருப்பங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் டிசம்பர் 19ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நேற்றைய எபிசோடில் பாட வந்தது பல்லவியே இல்லை என்ற உண்மை கார்த்திக்கு தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து கார்த்திக் ரூபஸ்ரீ இடம் கோபமாக சண்டை இடுகிறார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெறுகிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

 Karthikai Deepam Serial December 19th Episode Karthik challenged Chidambaram

அந்த வகையில் நேற்றைய எபிசோடில் பாட வந்தது பல்லவி இல்லை என்ற விஷயம் கார்த்திக்கு தெரிய வந்திருக்கிறது. அதை தொடர்ந்து இன்று தன்னை அனுப்பி வைத்தது ரூபஸ்ரீ தான் என்பதை பற்றி பல்லவி ஆக நடிக்க வந்த பெண் போட்டுக் கொடுக்க, அதனால் கோபமாக கார்த்திக் ரூபஸ்ரீ வீட்டிற்கு கிளம்பி போகிறார். அங்கு ரூபஸ்ரீ ஹாய் ஆக டிவி பார்த்துக் கொண்டே அவருடைய பாட்டியோடு பேசிக் கொண்டிருக்கிறார்.

இருவரும் பல்லவியாக நடிக்கப் போகும் அந்த பெண் சரியாக செய்து விடுவாரா? என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் கார்த்திக்கும் தீபாவும் வீட்டிற்குள் வர உண்மை தெரிந்து விட்டு தான் கார்த்திக் வீட்டுக்கு வருகிறாரா என்று இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அப்போது பாட்டி அங்கிருந்து நைசாக கழண்டு போய்விடலாம் என்று முயற்சி செய்ய அதற்கு ரூபஸ்ரீ பாட்டியை பிடித்து வைத்துக் கொள்கிறார்.

 Karthikai Deepam Serial December 19th Episode Karthik challenged Chidambaram

அப்போது கார்த்திக் ரூபஸ்ரீ இடம் என்னுடைய கேரியர் இருக்கு இதுல, உங்களால எப்படி பொய் சொல்ல முடிந்தது என்று சத்தம் போட்டு கொண்டு உங்களை நான் போலீசில் பிடித்துக் கொடுக்கவா? நீங்க ஆள் மாறாட்டம் பண்ணியிருக்கீங்க என்று மிரட்டுகிறார். ஆனாலும் ரூபஸ்ரீ பல்லவி தீபா தான் என்ற ரகசியம் கார்த்திக்கு தெரியவில்லை என்பதை தெரிந்து கொண்டு திமிராக பேசிக் கொண்டிருக்கிறார்.

 Karthikai Deepam Serial December 19th Episode Karthik challenged Chidambaram

அதனால் கோபத்தில் கார்த்திக் அங்கிருந்து கிளம்பி வருகிறார். அடுத்து என்ன செய்வது? யாரை எப்படி பாட வைப்பது என்று யோசனையில் இருக்கும் கார்த்திக்குக்கு சிதம்பரம் போன் செய்து பல்லவி விஷயம் என்னாச்சு என்று கேட்க அதற்கு கார்த்திக் இதெல்லாம் உங்க வேலை தானா நிச்சயம் நாம் பல்லவியை தேடி கண்டுபிடித்து உங்ககிட்ட சொன்ன மாதிரி இருபதாம் தேதிக்குள்ள பல்லவி பாடுவா என்று சவால் விட்டு போனை வைக்கிறார்.

அதைத் தொடர்ந்து வீட்டிற்கு வந்த கார்த்திக் அபிராமி உட்பட எல்லாரிடமும் வந்தது பல்லவியே இல்லை என்ற உண்மையை சொல்லிக் கொண்டிருக்கிறார். அதோடு அபிராமி நல்லா தானே பாடுனா என்று எல்லோரும் கேட்க அதற்கு பல்லவிகிட்ட ஒரு தயக்கம் இருக்கும் அந்த தயக்கம் அபிராமி கிட்ட இருந்தது.

 Karthikai Deepam Serial December 19th Episode Karthik challenged Chidambaram

அதனால் தான் நம்பி ஏமாந்துட்டேன். தப்பு என் மேல தான் இருக்கு என்று கார்த்திக் வருத்தப்பட்டு பேசிக் கொண்டிருக்கிறார். இப்படியாக எபிசோடு முடிவடையும் நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+