பிரபல சீரியலை பின்னுக்கு தள்ளிய கார்த்திகை தீபம் .. மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும் ஜீ தமிழ்
சென்னை: இந்த வருடத்தின் எட்டாவது வாரத்திற்கான டாப் 10 சீரியல்களின் டிஆர்பி விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
கடந்த வாரத்தை போலவே இந்த வாரமும் கார்த்திகை தீபம் சீரியல் முன்னேறி இருக்கிறது.
கடந்த வாரத்தில் பத்தாவது இடத்தில் இருந்த கார்த்திகை தீபம் சீரியல் இந்த வாரத்தில் ஒன்பதாவது இடத்தில் வந்திருக்கிறது.

ஆரம்பத்தில் தொடங்கப்பட்டது
சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகள் டிஆர்பி யின் அடிப்படையில்தான் மக்களின் மத்தியில் பிரபலமடைந்திருக்கிறதா? இல்லையா? என்று கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் அதிகமான ரசிகர்களை கவர்ந்த டிவி சேனல் என்றால் ஆரம்ப காலத்தில் இருந்து சன் டிவியாக தான் இருக்கும். ஆனால் இப்போது அந்த சேனலுக்கு போட்டியாக பல சேனல்கள் புதியது புதியதாக தொடங்கப்பட்டு வருகிறது. சன் டிவி சேனல்களில் சீரியல்களில் நடிப்பவர்கள் ரசிகர்களின் மத்தியில் நன்றாக பிரபலம் அடைந்து விடுகிறார்கள். அதிலும் குறிப்பாக இரவு நேர சீரியல்கள் என்றால் மேலும் அவர்களுக்கு பிளஸ் தான். சன் டிவியின் இரவு நேர சீரியல்களுக்கு தான் ரசிகர்களின் மத்தியில் அதிகமான மவுசு இருக்கிறது.

செம்பருத்தி சீரியல்
இந்த நிலையில் புதியது புதியதாக சன் டிவிக்கு போட்டியாக பல சேனல்கள் முளைத்து வந்தாலும், இப்ப வரைக்கும் சன் டிவி டிஆர்பியை பிறர் சேனல்களால் தொட முடியவில்லை என்ற ஒரு நிலை பல நேரங்களில் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதை சில வருடங்களுக்கு முன்பு முறியடித்ததில் செம்பருத்தி சீரியல் முக்கிய பங்கு வகித்தது. ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் கதாநாயகனாக கார்த்திக் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக பார்வதி கேரக்டரில் முதல்முறையாக சின்னத்திரையில் ஷபானா அறிமுகமாகி இருந்தார். முக்கியமான கேரக்டரில் பிரியா ராமன் நடித்திருந்தார். இந்த சீரியல் தொடர்ந்து 5 வருடங்களாக ஒளிபரப்பாகி வந்தது.

அதிகரித்த டிஆர்பி
இந்த சீரியலில் செம்பருத்தி சீரியலில் இருந்து திடீரென சில காரணங்களால் கார்த்திக் விலகியிருந்தார். அவர் விலகலுக்குப் பிறகு இந்த சீரியல் டிஆர்பி வெகுவாக குறைய தொடங்கிவிட்டது. அதற்கு பிறகு சில வருடங்கள் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வந்தாலும் அந்த அளவிற்கு பழைய நிலையில் இருக்கவில்லை என்பது பலருக்கும் தெரிந்த உண்மைதான். இந்த நிலையில் சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கார்த்திக் ஜி தமிழில் புதிய சீரியலில் நடித்து வருகிறார். கார்த்திகை தீபம் எனும் சீரியலில் அவர் நடித்து வரும் நிலையில், அந்த சீரியல் ஒளிபரப்பாக தொடங்கி சில வாரங்கள் ஆகின்றது. முதல் ஒரு சில வாரங்கள் டிஆர்பியில் பின்னணியிலே இருந்த நிலையில் தற்போது அந்த சீரியலில் முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது.

ஒன்பதாவது இடம்
முதல்முறையாக கார்த்திகை தீபம் சீரியல் டாப் 10 சீரியல்களின் வரிசையில் கடந்த வாரம் பத்தாவது இடத்தை பிடித்தது. இந்த வாரம் ஒன்பதாவது இடத்தை பிடித்திருக்கிறது. ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலும் ஒன்பதாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த சீரியலும் அதே டிஆர்பி அளவை பெற்றிருப்பதால் இரண்டும் ஒன்பதாவது இடத்தை பிடித்திருக்கிறது. தொடர்ந்து இந்த சீரியலில் முன்னேற்றம் ஏற்பட்டு வரும் நிலையில் மீண்டும் முதலிடத்திற்கு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்று சீரியலில் ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.
-
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications