Barathi Kannamma Serial: ஏங்க.. எதுக்குங்க இவ்ளோ மஸ்காரா போடறீங்க?
சென்னை: விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் கருப்பு கண்ணம்மான்னு ஒரு நடிகையை போட்டு நடிக்க வைக்கறாங்க. அந்த நடிகை மேக்கப் போட்டுக்கறதை பார்த்தால்.. கருப்புன்னு யாரும் சொல்ல மாட்டாங்க.
நடிக்க வைக்கறீங்க.. அதை கதைக்கு ஏத்த மாதிரி நிறத்தை மெயின்டெயின் செய்வதில் என்ன தப்பு. இவ்ளோ மேக்கப்.. கண் இமையில் மஸ்காரா அப்படியே அப்பிக்கிட்டு தெரியுது.
கேமிராமேன் இதை எல்லாம் பார்த்து கவனிச்சு சொல்ல மாட்டீங்களா? கதையோட மெயின் பாயிண்ட் இங்கே அடிபட்டுப் போகுது. கண்ணை கீழே தாழ்த்தினாலே அடர்ந்த மஸ்காரா அசிங்கமா தெரியுது.

மஸ்காரா மயக்குறியே
கருப்பா காண்பிக்கணும்னு மட்டும் இதை சொல்லலை. வேறு எந்த கேரக்டரில் நடிச்சாலும் இதைத்தான் சொல்லுவோம். கண்ணம்மா நடிகைக்கு மேக்கப் அதிகமாத்தான் இருக்குது. அதே மாதிரி இந்த பொண்ணு மட்டும்தான் மஸ்காராவை எடுத்து இமையில் கொட்டி வச்சுக்குது. கண்ணை சிமிட்டினால் மஸ்காரா.. கண்ணை கீழே தாழ்த்தினால் மஸ்காரா என்று மஸ்காரா போட்டு மயக்குறியேதான்.நிஜமா நல்லா இல்லை.

வெண்பா கொளுத்தி போடறா
வெண்பா கொளுத்திப் போட்டுட்டு போயிடறா.. அது பத்திகிட்டு எரியுது. ஆனால், இதை யார் இப்படி சொல்லி இருப்பான்னு யாரும் ஆராய்ச்சி பண்றதில்லை. அதனால் வெண்பாவின் ஆட்டம் நாளுக்கு நாள் அதிகமாகுது. பார்க்கற மக்களுக்கும் பொறுமை இல்லாம போகுது. ஏங்க.. இப்படியே கொளுத்திப் போட்டு அது வெடிச்சுக்கிட்டே இருந்தா கேப் எப்போ விடுவீங்க? தவறு செய்தவங்களை எப்போ கண்டு பிடிச்சு தண்டனை கொடுக்கறது?

வாந்தி மசக்கை
வெண்பா சொன்ன பொய்யால் தங்களுக்கு இனி குழந்தை பிறக்காதுன்னு பாரதியும், கண்ணம்மாவும் முடிவு பண்ணிடறாங்க. வெண்பா கொடுத்த மாத்திரையை சாப்பிடாமல் விட்டுட்டாளோ என்னவோ, கண்ணம்மா குழந்தை உண்டாகி விடுகிறாள். அவளுக்கே இது தெரியலை.. மசக்கை வாந்தி என்று சோர்ந்து சோர்ந்து படுக்கிறான். என்னவோ பண்ணுதுன்னு சொல்லவும் தெரியலை.

தொட்டில் பூ
கண்ணம்மா கோயிலில் கட்டிய தொட்டிலை ஒரு அம்மா வந்து அவிழ்க்கறாங்க. ஏம்மா.. கட்டின தொட்டிலை அவிழ்க்கறீங்க என்று கண்ணம்மா பதற்றத்துடன் ஒடி வந்து கேட்கிறாள். அப்போது அந்த அம்மா சொல்றாங்க... இந்த தொட்டில் பூவால் நிரம்பிருச்சுன்னா தொட்டிலை கட்டினவங்க வயிறு பிள்ளை உண்டாகி நிறைஞ்சு இருக்கும் இது அம்மனோட அருள்மான்னு.. இந்த டயலாக் நல்லா இருந்துச்சு.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications