Karuppu First Half Review: கருப்பு சூர்யாவை கருப்பன் கைவிடல! ஃபர்ஸ்ட் ஹாஃப் எப்படி இருக்கு? மெரட்டிட்டாரே ஆர்ஜே பாலாஜி
சென்னை: நடிகர் சூர்யா நடித்துள்ள "கருப்பு" திரைப்படம் இன்று மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. நீண்ட நாட்களாக பல பிரச்சனைகளை சந்தித்து தாமதமான இந்த படம், வெளியான முதல் நாளிலேயே ரசிகர்களிடையே பெரிய அளவில் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது. குறிப்பாக, படம் பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள First Half ரிவ்யூ தற்போது வைரலாக பரவி வருகிறது.

கருப்பு படத்தின் ரிவ்யூ
படத்தின் முதல் பாதி குறித்து ரசிகர்கள் கூறும் கருத்துகளை பார்க்கும்போது, இது ஒரு சாதாரண மாஸ் படம் அல்ல என்பது தெளிவாகிறது. கதை அமைப்பு வித்தியாசமாக இருப்பதுடன், ஆரம்ப காட்சியிலிருந்தே படம் சுவாரஸ்யமாக நகர்கிறது என்று ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள். எந்த இடத்திலும் சலிப்பு இல்லாமல், தொடர்ந்து என்ன நடக்கப் போகிறது என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் திரைக்கதை அமைந்துள்ளது என்பதும் அவர்கள் கருத்தாக உள்ளது.
குறிப்பாக, படத்தின் இடைவேளை காட்சி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. "Interval மெரட்டிட்டுருக்கா" என்று ரசிகர்கள் நேரடியாகப் பதிவு செய்து வருவது, அந்த காட்சியின் தாக்கத்தை வெளிப்படுத்துகிறது. அந்த இடைவேளை பிளாக் தான் படத்தின் முக்கிய ஹைலைட்டாக இருக்கிறது என்றும், அது ரசிகர்களை இரண்டாம் பாதிக்காக இன்னும் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்க வைக்கிறது என்றும் கூறப்படுகிறது.

கருப்பு முதல் பாதி ரிவ்யூ
இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜியின் திரைக்கதை மற்றும் கான்செப்ட் பற்றியும் நல்ல கருத்துக்கள் வந்துள்ளன. "Fantastic concept" என்று ரசிகர்கள் பாராட்டுவது, படம் வழக்கமான கதை போக்கில் செல்லாமல், புதிய கோணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது என்பதற்கான சான்றாக பார்க்கப்படுகிறது. திரில்லர் அம்சங்கள் மற்றும் சஸ்பென்ஸ் எலிமென்ட்கள் முதல் பாதியிலேயே வலுவாக பதிந்துள்ளன.
சூர்யாவின் நடிப்பும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. "கருப்பன் கை விடல" என்று ரசிகர்கள் கூறுவது, அவரது கேரக்டர் வலுவாகவும் தாக்கமிக்கதாகவும் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. மாஸ் மற்றும் கிளாஸ் கலந்த நடிப்பு இந்த படத்தின் பெரிய பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இடைவேளை காட்சி
மேலும், படம் முழுவதும் ஒரு நல்ல எங்கேஜ்மென்ட் லெவலை தக்க வைத்திருக்கிறது என்பதும் ரசிகர்கள் கூறும் முக்கிய அம்சமாகும். முதல் காட்சியிலிருந்தே வேகம் குறையாமல், இடைவேளை வரைக்கும் சுவாரஸ்யமாக நகர்கிறது. இதனால், படம் பார்க்கும் அனுபவம் தொடர்ந்து ஈர்ப்புடன் இருக்கிறது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த First Half ரிவ்யூ அடிப்படையில், "கருப்பு" படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய வெற்றியை பெறும் வாய்ப்பு உள்ளதாகவே ரசிகர்கள் கணிக்க தொடங்கியுள்ளனர். சிலர் இதையே "மாஸிவ் ப்ளாக்பஸ்டர் ஆகலாம்" என்றும் கூறி வருகின்றனர்.
மொத்தத்தில், "கருப்பு" திரைப்படத்தின் முதல் பாதி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக இடைவேளை காட்சி, வித்தியாசமான கதை அமைப்பு, சூர்யாவின் கேரக்டர் ஆகியவை படத்தின் பலமாக அமைந்துள்ளன. தற்போது அனைவரின் கவனமும் இரண்டாம் பாதி எப்படி இருக்கும் என்பதில்தான் உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications