Karuppu Review: கருப்பு கதை இதுதான்! இந்த இடத்தில் செம, ஆனால்.. ப்ளூ சட்டை மாறன் இப்படி சொல்லிட்டாரே
சென்னை: இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா, திரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள 'கருப்பு' படம் மே 15ஆம் தேதி வெளியாகியுள்ளது. Dream Warrior Pictures தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். வெளியான நிலையில், படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தாலும், விமர்சனங்கள் பல்வேறு கோணங்களில் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சன வீடியோவில் 'கருப்பு' படம் குறித்து விரிவாக கருத்து தெரிவித்துள்ளார்.

ப்ளூ சட்டை மாறன் ரிவ்யூ
அவர் கூறியதாவது, "இந்த படத்தில் இரண்டு சுவாரஸ்யமான விஷயங்களைக் கையாண்டிருக்காங்க. ஒன்று கோர்ட் ரூம் டிராமா, இன்னொன்று சாமி படம். முதல் பாதி முழுக்க கதை ஓரளவுக்கு சுவாரஸ்யமாக போகுது. இந்திரன்ஸ் வரும் காட்சிகளும், கோர்ட் ரூம் காட்சிகளும் நல்லா வேலை செய்கிறது.
அதுல ஒரு முக்கியமான காட்சி இருக்கு. ஆர்.ஜே. பாலாஜி, கடவுளா இருக்கும் சூர்யாவிடம் 'நீ கடவுளா இருந்து எல்லாம் பண்றது ஈஸி. மனிதனா இருந்து பண்ணி பார், அப்ப தான் தெரியும்'ன்னு சொல்வது நல்லா இருந்துச்சு.
முதல் பாதி வரை மனிதனை மனிதன் வென்றான் மாதிரி ஒரு ஃபீல் இருக்கு. அதனால அது ஓகேன்னு சொல்லலாம். ஆனா இரண்டாம் பாதி வந்ததும் படம் முழுக்க மாறிடுது. சாமி வந்ததும் கோர்ட் ரூம் டிராமா மிஸ்ஸாகிடுது. ஒரே நீதிபதி, ஒரே நீதிமன்றம், ஒரே வழக்கு மாதிரி ஒரே விஷயத்தையே தொடர்ந்து காட்டிக்கிட்டு இருக்காங்க. அந்த வழக்குகளும் அவ்வளவு சுவாரஸ்யமா இல்லை.
கருப்பு படத்தின் பிளஸ், மைனஸ்
முதல் பாதியில் இருந்த சுவாரஸ்யம் இரண்டாம் பாதியில் கிடையாது. இங்க மனிதனை கடவுள் வெல்லுற மாதிரி காட்டுறாங்க. அதுல என்ன புதுசு இருக்கப்போகுது? இரண்டாம் பாதி முழுக்க சூர்யா கடவுளாகவே வர்றார். அவருக்குத் தெரிந்த எல்லா வித்தைகளையும் காட்டி வில்லனை வீழ்த்துறார். அதனால் கதையில் எந்த எதிர்பார்ப்பும் இருக்காது.
மேலும் கதை எதை நோக்கி போகுது என்று தெரியல. அது தன்னோட இஷ்டத்துக்கு போய்கிட்டு இருக்கு. நடுவுல ஏதோ ஏதோ படங்களோட ரெஃபரன்ஸ்கள் வருது. திடீர்னு சிங்கம் சூர்யா மாதிரி காட்சிகள் வருது.

கருப்பு படத்தின் குறைகள்
கிளைமாக்ஸ்ல ஒரு கதாபாத்திரம் வருது. அது சூர்யா மாதிரி தெரியல, கார்த்தி மாதிரி தெரிகிறது. கோர்ட் காட்சிகளும், அதுல வரும் வாக்குவாதங்களும் பெரிய அளவுக்கு ஈர்க்கல.
இனிமே இந்த படத்துக்கு ப்ரோமோஷன் எப்படி இருக்கும் தெரியுமா? இந்த ஊர்ல 50 பெண்கள் சாமி ஆடினாங்க, அந்த ஊர்ல 100 பெண்கள் சாமி ஆடினாங்கன்னு வீடியோக்கள் வைரலாக்கி படத்துக்கு ஹைப் கொடுத்து ஹிட் ஆக்கிடுவாங்க.
எங்களைப் பொறுத்தவரை முதல் பாதி ஓகே. ஆனா இரண்டாம் பாதி ரொம்ப மோசம். கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த படம் வேலை செய்யலாம். ஆனா கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இது மண்டை பத்திரம் தான்." என ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் படத்தின் பல அம்சங்களை நேரடியாக விமர்சித்துள்ளார்.

கருப்பு படம் வசூல் நிலவரம்
இதனுடன், 'கருப்பு' படத்தின் வசூல் நிலவரமும் கவனத்தை ஈர்த்துள்ளது. படம் வெளியான முதல் நாளிலேயே நல்ல ஓப்பனிங்கை பெற்று, தமிழ்நாட்டில் சுமார் ₹8 முதல் ₹10 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. முதல் வார இறுதிக்குள் உலகளவில் ₹25 கோடி வரை வசூல் எட்டும் என டிரேட் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.
மொத்தத்தில், ஒரு பக்கம் ரசிகர்களின் ஆதரவும், மற்றொரு பக்கம் இவ்வாறு கடுமையான விமர்சனங்களும் உள்ள நிலையில், 'கருப்பு' படம் தொடர்ந்து பேசுபொருளாக மாறியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications