கஸ்தூரிக்கு செம ஆத்திரம்! "மாமா கிளம்பி வந்துரு".. ஜெயில்ல குன்றத்தூர் இச்சை அபிராமி செய்வது இதுதான்
சென்னை: சிங்கப்பூர், துபாய் என வளைகுடா நாடுகளில் உள்ளதுபோல, சில விஷயங்களுக்கு அன்பு, மனிதாபிமானம் பார்க்கக்கூடாது.. காந்தி பிறந்த நாடு, உயிரை போக்குவது நிவாரணம் இல்லை என்றாலும், சிலநேரங்களில் ஏற்க முடிவதில்லை.. அபிராமி போன்றோருக்கெல்லாம் என்ன பெரிய மனமாற்றம் வந்துவிடப்போகிறது? அப்படியே மனம் மாறினால்தான் என்ன பிரயோஜனம்? என்று நடிகை கஸ்தூரி காட்டமாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.
Nakkheeran TV என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள கஸ்தூரி, "கொடூர குற்றங்கள் நடந்து வரும் சூழலில், சரியான தீர்ப்பு, சரியான நேரத்தில் வந்திருக்கிறது.. நீதிபதி செம்ம அவர்களுக்கு நன்றியும், வணக்கத்தையும் தெரிவித்து கொள்கிறோம்.

இதுமாதிரி பெண்ணையெல்லாம் தூக்கில் போட வேண்டும் என்றுதான் நினைக்கிறேன்.. ஆனால், சட்டம் அதற்கு இடம் தரவில்லை என்பதால், சாகும்வரை சிறை, வீரியமான சிறைத்தண்டனை என்று சொல்லி உள்ளார்.. இதுபோன்ற பெண்ணெல்லாம் தாய் என்ற சொல்லுக்கே களங்கம் விளைவிக்கக்கூடிய பேய்..
கள்ளக்காதல் உல்லாசம்
கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக கணவர், 3 குழந்தைகளுக்கும் விஷம் வைத்து கொல்லவே அபிராமி முயன்றார்.. ஆனால், 4 வயது குழந்தை முதலில் இறந்துவிட்டது.. கணவனும், 7 வயது மகனுக்கும் விஷம் வேலை செய்யவில்லை.. கணவன் எழுந்து கிளம்பி வேலைக்கே சென்றுவிட்டார்..
மகனை தலைகாணியை வைத்து அழுத்தி மூச்சு திணறி திணறியே கொலை செய்துள்ளார்.. பிறகு வேலைக்கு சென்ற கணவரையும் கொலை செய்ய அபிராமி காத்திருந்தார்.. ஆனால், அன்றைய தினம் லேட்டாக வீட்டுக்கு வந்ததால், அபிராமியின் திட்டமெல்லாம் வீணாகிவிட்டது.. வீட்டிலிருந்த நகைகளையும் எடுத்து கொண்டு, நாகர்கோவிலுக்கு தப்பித்துவிட்டார்..
மீனாட்சி சுந்தரம் - அபிராமி
அபிராமியை வீட்டில் காணவில்லை என்றதுமே, மீனாட்சி சுந்தரம் வீட்டுக்கு சென்று தேடி சென்றுள்ளார்கள்.. பிறகு சுந்தரத்தின் போன் மூலமாகவே, அபிராமியிடம் போலீசார் பேசவைத்தனர்.. "மாமா இங்கேதான் இருக்கேன், வந்துடுங்க" என்று எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் ஜாலியாக, சுந்தரத்திடம் சொன்னாராம் அபிராமி.
இதுபோன்ற ஒரு பீடையை, பேயை, சமூகத்துல கேவலமான ஒரு ஜந்துவை தூக்கில் போடுவதே சரியானது.. சோறு போட்டு சிறையில் நல்லபடியா வைத்திருக்க வேண்டும் என்று யாருமே நினைக்க மாட்டார்கள்.. ஆனால், மரண தண்டனையை தரக்கூடிய வாய்ப்பு நமக்கு இல்லை.. அதுக்கு மாற்றாக தரவேண்டியது கடுங்காவல் ஆயுள் தண்டனையை தந்துள்ளார்கள்..
கடுமையான வேலைகள்
அப்படியென்றால், நம்முடைய அரசுக்கு செலவு வைக்காமல், அவங்களை நன்றாக வேலை வாங்குவாங்க.. சுத்தம் செய்வது, பெருக்குவது, சமைப்பது, சட்டை துணிகளை துவைத்து தேய்த்து தருவது, என்று அவர்களின் ஆயுள் தண்டனை செலவில் ஒரு முக்கால் பங்குக்கு சம்பாதிக்கும் அளவுக்கு வேலையை தந்துவிடுவார்கள்.. இதுபோன்றவர்களுக்கு எந்த ஈவு இரக்கமும் காட்ட மாட்டார்கள்..
கடந்த 7 வருஷம் ஜாலியாக சிறையில் இருந்தார் என்றால், வெறும் ரிமாண்டு செய்யப்பட்ட கைதியாக மட்டுமே இருந்தார். இப்ப தீர்ப்பு வந்திருக்கிறது..
அப்பீல் செய்வார்களா
சுந்தரம் உட்பட இருவருக்குமே சாகும்வரை வெளியில் வராதபடி தண்டனை தரப்பட்டுள்ளது.. ஆனால், இதில் சுந்தரம் அப்பீல் செய்ய வாய்ப்புள்ளது.. காரணம், நேரடியாக அவர் கொலை செய்யவில்லை.. நேரடி கொலைக் குற்றவாளியும் கிடையாது.. என்பதால் மேல்முறையீட்டுக்கு வாய்ப்புள்ளது.. எனினும் அதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், அபிராமி மேல் முறையீடு செய்தாலும்கூட, வாய்ப்பு குறைவுதான்.. இதுபோன்ற கொடுமையான குற்றத்துக்கு யாரும் கருணை காட்ட மாட்டார்கள்..
உடல் இச்சையை போலவே, உணவு இச்சையிலும் அதிக ஆசை அபிராமிக்கு இருந்திருக்கிறது.. அபிராமியின் டிக்டாக் முழுவதுமே, சாப்பிடுவதையே பெருமளவு டிக்டாக்கில் வீடியோ பதிவிட்டு வந்துள்ளார்.. அதிலும் சமைத்து சாப்பிடுவதில்லை.. ஓட்டலிலிருந்து வாங்கி சாப்பிட்டே பழக்கப்பட்டுள்ளார்.. அப்படித்தான் ஓசி பிரியாணிக்காரர் சிக்கியிருக்கிறார்..
புத்திமதி சொன்ன பெற்றோர்
பல வருட காலம், கள்ளக்காதல்கள் இங்கு இருக்கின்றன.. அதற்காக பெற்ற குழந்தைகளை அனைவருமே கொல்வதில்லை.. தற்போது சமீபகாலமாகத்தான், கணவனை கொல்லும் போக்கு அதிகரித்துள்ளது.. அபிராமி ஏற்கனவே ஒருமுறை, இதே சுந்தரத்துடன், 3 நாள் வீட்டை விட்டே ஓடிவிட்டார்.. அப்போது குடும்ப மானம் போகக்கூடாது என்பதற்காக பெற்றோர் அபிராமியை தேடிக்கண்டு பிடித்துள்ளனர்..
2 குழந்தைகளும் அம்மா எங்கே? என்று ஏங்கி போயிருக்கிறார்கள் என்றெல்லாம் புத்திமதி சொல்லி வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்.. குழந்தைகள் இருப்பதால்தானே, தன்னை இப்படி அழைத்து வந்துவிடுகிறார்கள், குழந்தைகளே இல்லாமல் செய்துவிட வேண்டும் என்று முடிவெடுத்துதான், விஷத்தை தந்தார்.
இந்தியாவில் மரண தண்டனை
இந்தியாவில் மரண தண்டனையை பொறுத்தவரைக்கும், அரிதிலும் அரிது என்ற கொள்கை உள்ளது.. 1980-ல் ஒரு வழக்கில், மொத்தம் 4 காரணங்களுக்காக மட்டுமே மரண தண்டனை தரலாம் என்கிற உடன்படிக்கையை நீதிமன்றம் வெளியிடுகிறது..
திட்டமிட்ட பல கொலைகள், தீவிரவாத செயல்கள் அதன்மூலமாக பல உயிர்கள் பறிபோதல், வெகுஜன படுகொலைகள், மிக கொடூரமான பாலியல் வன்புணர்வு அல்லது குரூரமான வன்முறை செயலை ஒட்டிய கொலைகள் என இதுபோன்ற காரணங்களுக்காக மட்டுமே மரண தண்டனை தரப்படுகிறது.
ஆனால், என்னை கேட்டால், சிங்கப்பூர், துபாய் என வளைகுடா நாடுகளில் உள்ளதுபோல, சில விஷயங்களுக்கு அன்பு, மனிதாபிமானம் பார்க்கக்கூடாது.. காந்தி பிறந்த நாடு, உயிரை போக்குவது நிவாரணம் இல்லை என்றாலும், சிலநேரங்களில் ஏற்க முடிவதில்லை..
அபிராமி போன்றோருக்கெல்லாம் என்ன பெரிய மனமாற்றம் வந்துவிடப்போகிறது? அப்படியே மனம் மாறினால்தான் என்ன பிரயோஜனம்?
2 குழந்தைகள் உயிர் துடிதுடித்து போய்விட்டது.. அந்த கொலையாளிக்கு மட்டும் எதுக்கு கருணை காட்டணும்? எனவே, அந்த சட்டத்தை மாற்ற வேண்டும்.. மரண தண்டனையை தமிழ்நாட்டு அளவிலாவது, அமல்படுத்தவேண்டும்.. மனித உரிமை என்று சொல்லி, அஜ்மல் கசாபுக்குகூட விசாரணை வைக்க, வக்கீலை தந்த நாடு நம்முடையது.. எனவே, மனித உரிமை என்பது மனிதர்களுக்கு மட்டும்தான் இருக்கணுமே தவிர, இன்-ஹியூமனுக்கு கிடையாது" என்று தெரிவித்துள்ளார்.
-
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின் -
மாதம் 1.2 கோடியா... இன்ஸ்டா அஸ்வினி அஷ் கல்லா கட்டுவது உண்மையா.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள் -
3 மாநில சட்டசபை தேர்தல் LIVE: புதுச்சேரியில் மாலை 6 மணி நிலவரப்படி 89.2% வாக்குகள் பதிவு -
பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி? -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
Durga Stalin: துர்கா என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசலை! 5 ஆண்டு ரகசியத்தை உடைத்த ஸ்டாலின் -
இது இந்தியா இல்லை.. நேபாளத்தில் குட்கா போட்டு துப்பிய சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத சம்பவம் -
நிர்மலா சீதாராமன் கணவர் எடுத்த "ஜீரோ பிஜேபி" விஸ்வரூபம்.. 27 தொகுதிகளிலும் பாஜக காலி..? திடுக்கிட்ட தாமரை -
தவெக 4 - 6 சீட்களில் வெல்ல வாய்ப்பு.. 20% வாக்குகளை அள்ளக்கூடும்.. ABP Nadu கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
விஜய் இந்த தேர்தலில் ஆட்டக்காரர் தான்.. மே 4 தவெகவுக்கு பல பாடங்களை கற்பிக்கும்.. இயக்குநர் அமீர்!












Click it and Unblock the Notifications