பட்டிமன்ற பாப்பம்மாவாக மாறிய கஸ்தூரி.. கலகல கலவர பட்டிமன்றம்!
சென்னை: புத்தாண்டு பிறக்கப் போகிறது. இன்னும் ஒரு நாள்தான் இடையில் இருக்கு. ஒவ்வொருவரும் புத்தாண்டை வரவேற்க ரெடியாகி வருகின்றனர்.
டிவிகளில் வழக்கம் போல, புத்தாண்டு நிகழ்ச்சிகள் களை கட்ட ஆரம்பித்துள்ளன. பட்டிமன்றம், பேச்சரங்கம், பாட்டரங்கம், கலை நிகழ்ச்சிகள் என விதம் விதாக ரெடியாகி வருகிறது.
வழக்கம் போல சினிமாக்களும் அணிவகுத்து கொண்டுள்ளன நமது இல்லங்களை அலங்கரிக்க. மக்களும் கொண்டாட்டத்துடன் ஜாலியாக படம் பார்க்கவும் ரெடியாகி வருகின்றனர்.

கஸ்தூரி பட்டி மன்றம்
இந்த நிலையில் நடிகை கஸ்தூரி தற்போது பட்டிமன்ற நடுவராகியுள்ளார். ஆமாங்க, ஆமா நம்ப முடியலையா. உண்மைதான். அவரது தலைமையில் ஒரு பட்டிமன்றம் அரங்கேறப் போகிறது வசந்த் டிவியில். அதில்தான் கஸ்தூரி நடுவராகியுள்ளார்.

பட்டையை கிளப்புது
உங்கள் வசந்த் தொலைக்காட்சியில் புத்தாண்டு பட்டிமன்றம் என்ற அறிவிப்போது கஸ்தூரியின் பட்டிமன்றம் குறித்த புரமோக்கள் பட்டையைக் கிளப்புகின்றன. பட்டிமன்றத் தலைப்பே படு சுவாரஸ்யமாக உள்ளது.

ஜாலி தலைப்பு
புத்தாண்டு தினத்தன்று மாலை 4 மணிக்கு நடைபெறப் போகும் பட்டிமன்றத்திற்கு தலைப்பே படு ஜாலியாக இருக்கிறது. அதாவது ஆண்கள் சந்தோஷமாக இருப்பது திருமணத்திற்கு முன்பா திருமணத்திற்குப் பின்பா என்பதுதான் அந்த பட்டிமன்றத்துக்கான தலைப்பாகும். இதற்குத்தான் கஸ்தூரி நடுவராகியுள்ளார்.

கணவரை கிக்கு
கஸ்தூரி ஒரு வாதத்தின்போது கணவரை பைக்கு மாதிரி கிக்கு பண்ணி ஸ்டார்ட் பண்ணா பிறகு அது ஏன் ஓடிப் போகாதுன்னு கஸ்தூரி கேட்கிறார். அதற்கு ஒரு பட்டிமன்ற பங்கேற்பாளர் பெண் கேட்கிறார்.. 200 பவுன் நகை கொடுத்து நான் அவரை வாங்கிட்டு வந்திருக்கேன். அப்படி இருக்கும்போது அவரை நாலு அடி அடிக்கக் கூடாதா என்று கேட்கிறார்.

எக்சேஞ்ச் ஆபர்
அதற்கு ஒரு ஆண் பங்கேற்பாளர் இப்படிக் கேட்கிறார்.. நாலு அடி அடிக்கலாம்தான்.. தப்பு இல்லைதான். எங்க ஊர்ல புத்தாண்டை முன்னிட்டு எக்சேஞ்ச் ஆபர் போட்டிருக்கான். நான் வண்டியை எக்சேஞ்ச் போடலாம்னு இருக்கேன் என்று கேட்க பெண்கள் கூட்டம் கொல்லென்று சிரிக்கிறது. இப்படிப் போகிறதுங்க இந்த பட்டிமன்றம்.

கலவர பட்டிமன்றம்!
புத்தாண்டு பட்டிமன்றம்!!! ஆங்கிலப்புத்தாண்டை தமிழோடு தொடங்குவோம்! என் தலைமையில் கலகல கலவர பட்டிமன்றம்! Do watch and give feedback! என்று கஸ்தூரி தனது டிவிட்டரிலும் போட்டு அனைவரையும் சிரித்து மகிழ அழைத்துள்ளார். மறக்காம பாருங்க மக்களே..!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications