கஸ்தூரி புடலங்காய்க்காக அமெரிக்க தெருவில் அலைந்து.. 8 டேக்கிலும் முத்தம் தர முடியாத ஹீரோ: செம பேட்டி
சென்னை: நடிகர் சந்தானத்தை பொறுத்தவரை உழைப்பின் மொத்த உருவம் என்று சொல்லலாம்.. ஒரு காமெடி நன்றாக வர வேண்டுமானால், அதை பற்றி யோசித்து கொண்டேயிருக்கிறார்.. தலைமுடிக்கு, முகத்துக்கு என தனித்தனியாக கவனம் செலுத்துகிறார்.. இதெல்லாம் திரைக்கு பின்னால் சந்தானத்தின் உழைப்பாகும். வடிவேலுவை பற்றி ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், வடிவேலு இல்லாவிட்டால் சோஷியல் மீடியாவே இன்று இல்லை" என நடிகை கஸ்தூரி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மூத்த பத்திரிகையாளர் சித்ரா லட்சுமணனின் Touring Talkies என்ற யூடியூப் சேனலுக்கு நடிகை கஸ்தூரி பேட்டி ஒன்றை தந்துள்ளார்..

அதில், "நடிக்கக் கற்றுக்கொண்டதே டப்பிங்கில் தான்.. ஆனால், இப்போது டிஜிட்டல் தொழில்நுட்பம் வந்ததால் ரிகர்சல் பார்க்கும்போதே ரெக்கார்ட் செய்துவிட்டு, தேவையை மாற்றிக்கொள்ளலாம் என்று மிகவும் எளிதாகிவிட்டது
டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் விதவிதமாக நான் கத்த வேண்டியிருந்தது. அந்த காட்சி எடுப்பதற்கு முன்பு, அது சம்பந்தப்பட்ட டயலாக் பிராக்டீஸ் செய்து கொண்டிருந்தேன். கொஞ்ச நேரத்தில் அதை படமாக்கி எனக்கு போட்டு காட்டுகிறார்கள்.. அதாவது பிராக்டீஸ் செய்யும்போதே அதை படமாக்கிவிடுகிறார்கள்..
ஹீரோவின் முத்தக்காட்சி
நான் ஒரு படத்தில், தயாரிப்பு பணிகளை மேற்கொண்டிருந்தேன். அதில் நடித்த இளம் ஹீரோவுக்கு முத்தக்காட்சி இருந்தது.. பெரிய அளவுக்கு முத்தக்காட்சி இல்லை.. ஜஸ்ட் காதலிக்கு பாய் சொல்லிவிட்டு, கிளம்பி செல்லும்போது, உதட்டில் லேசாக முத்தம் தந்துவிட்டு போக வேண்டும்.. இதுதான் அந்த சீன்..
ஆனால், அந்த இளம் நடிகர், தன்னுடைய மனைவிக்கு பயந்து இந்த சீனில் நடிக்க தயங்கினார்.. அதனால் அந்த ஒரு சீனை எடுக்க முடியாமல் நிறைய டேக் வாங்கினார்..
8வது டேக்கிலும் அந்த சீனை நடிகரால் நடிக்க முடியவில்லை. மிகவும் அப்செட் ஆகிவிட்டார்.. கடைசியில் பல டேக்குகளை எடுத்து, ஆங்கிளை மாற்றி, அந்த சீனை எடுத்து முடித்தோம்..
முத்தம் தர தயங்கிய நடிகர்
ஆனால், அப்படியெல்லாம் இன்று நிலைமை இல்லை.. இன்று பிரதீப் ரங்கநாதன், நாய்க்கு முத்தம் தருவதையும் எளிதாக செய்துவிடுகிறார்.. அந்த அளவுக்கு டிஜிட்டல் ரிக்கார்டிங் இன்று வந்துவிட்டது.. ஒரு ஆங்கிளில் முகமே நன்றாக இல்லை என்றாலும்கூட, அதை AI வைத்து அழித்து வேற மாதிரியாக மாற்ற முடிகிறது.. இப்படியெல்லாம் எல்லாமே ஈஸியாகிவிட்டால் எங்களுக்கெல்லாம் சினிமாவில் வேலை இருக்குமா? என்றே தெரியாது.
சந்தானம் என்றால் உழைப்பு
நடிகர் சந்தானத்தை பொறுத்தவரை உழைப்பின் மொத்த உருவம் என்று சொல்லலாம்.. ஒரு காமெடி நன்றாக வர வேண்டுமானால், அதை பற்றி யோசித்து கொண்டேயிருக்கிறார்..
புள்ளிங்கோ படம், டிக்கிலோனோ படம் என புது புது பாடி லேங்குவேஜில் இருப்பார்.. படத்துக்கு படம் வித்தியாசமான கெட்டப்பை போடுகிறார்.. சாப்பிடறதே கிடையாது.. டயட்டில் மிகுந்த கவனம் செலுத்துகிறார். தலைமுடிக்கு, முகத்துக்கு என தனித்தனியாக கவனம் செலுத்துகிறார்.. இதெல்லாம் திரைக்கு பின்னால் சந்தானத்தின் உழைப்பாகும்.
வடிவேலு சாருடன் நிறைய படங்கள் நடித்திருக்கிறேன்.. ராஜபாண்டி படத்தில் சிரித்து கொண்டேதான் நாங்கள் ஷூட்டிங்கில் நடித்தோம்.. வடிவேலுவை பற்றி ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், வடிவேலு இல்லாவிட்டால் சோஷியல் மீடியாவே இன்று இல்லை எனலாம்.
புடலங்காய், பூசணிக்காய்
நான் திருமணமாகி அமெரிக்கா சென்று நிறைய விஷயங்களை மிஸ் செய்தேன்.. 2000-ல் அமெரிக்காவில் வாழ்க்கையை துவங்கினேன்..அப்போது புடலங்காய் கிடைக்காமல் அமெரிக்காவில் அலைந்திருக்கிறேன்.. ஐரோப்பாவில் எல்லாமே கிடைக்கும் அதுக்கு காரணம் ஈழத்தமிழர்கள்.. தமிழ் உணவு எல்லா இடத்திலயும் பரிச்சயமா இருந்தது.
ஆனால் அமெரிக்காவில் ஒன்னும் கிடையாது. பூசணிக்காய், புடலங்காய் கிடைக்காது. நாக்கு செத்துரும். எத்தனை நாளுக்கு கேரட்டையும் பீட்ரூட்டையுமே வெச்சு சாம்பார் வைக்கிறது? அரிசிக்கும் கஷ்டப்பட்டேன்.. நம்ம உணவை அங்கே மிஸ் பண்ணேன்.
பொதுவாழ்வில் ஈடுபட காரணம்
அதேபோல கடவுளை அமெரிக்காவில் மிஸ் பண்ணேன். எல்லாத்தையும்விட அங்கே ரோடு எல்லாம் பளிங்கு போல இருக்கு... யாரும் ரோட்டில் துப்புறது இல்லை. மரத்தடியில யாரும் ஒதுங்குறது இல்லை.. ரோட்டில் சிக்னல் பிரச்சனை இல்லை.. ஒரே ஒரு கார், ரெட் சிக்னலுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கும்.
நேரம் தவறாமை அமெரிக்கர்களிடம் உள்ளது, எங்கு பார்த்தாலும் வரிசையில் நிற்கிறார்கள்.. ஆனால், இங்கே இன்றும் எல்லாவற்றிற்கும் நாம் முண்டியடித்து கொண்டிருக்கிறோம்..
தமிழகத்தின் நிலைமை?
அரசியல்வாதிகள் எல்லா இடத்திலயும் மோசமாகதான் இருக்காங்க என்றாலும், மக்கள் மிகவும் கட்டுப்பாடோட இருக்காங்க என்று தோன்றியது. இந்த கட்டுப்பாடு காரணமாகத்தான் அமெரிக்கா இப்படி இருக்கா? என்று நினைத்தேன்.
ஒன்றுமே இல்லாமல் அவர்களே இப்படி இருக்கும்போது, தமிழ்நாட்டில் எத்தனையோ பெருமைகள் இருந்தும் நாம் ஏன் இப்படி இருக்கிறோமே என்ற ஆற்றாமை எனக்குள் ஏற்பட்டது.. தஞ்சை பெரிய கோவில், மகாபலிபுரம் போன்ற பெருமைகள் இருந்தும், சாலைகள் ஏன் தமிழ்நாட்டில் இன்னமும் இப்படி உள்ளது? என்ற கோபமும் எனக்குள் வந்தது.. இதெல்லாம்தான் என்னை பொதுவாழ்வில் ஈடுபட தள்ளியது" என்றெல்லாம் கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications