Pandian Stores Serial: கதிர் கொஞ்சம் எந்திரத்தனமாக நடந்துக்கறாரே... தெரியலையா?
சென்னை: விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதை மறு ஒளிபரப்பு செய்ய கூட விஜய் டிவி யோசித்து யோசித்துதான் செய்கிறது. தொடர்ந்து ஒரு வாரம் அல்லது இரண்டு வாரம் பிற்பகல் நேரத்தில் மறு ஒளிபரப்பு செய்யும்.
சரி, மறு ஒளிபரப்பில் பார்த்துக்கலாம் என்று கொஞ்சம் ஆசுவாசப்பட்டு இரவில் ஒளிபரப்பாகும் நேரத்தில் பார்க்காமல் விட்டுவிட்டால், போச்சு. ஓரிரு வாரங்களில் அந்த மறு ஒளிபரப்பை நிறுத்திக்கொண்டுவிடும் விஜய் டிவி.
இதுவும் ஒரு தந்திரம்தான்.. சீரியல் வசம் மக்களை ஈர்க்கும் தந்திரம். கொஞ்சம் சீரியலை பார்க்க வைத்து, பிறகு இரவு நேரத்தில் தொடர்ந்து பார்க்க வைக்கும் தந்திரம்.

முல்லை கதிர்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதிருக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ். இவர்கள் காதல் ரொமான்ஸை பார்க்க...முல்லையின் எக்சைட்டிங் எமோஷன்ஸ் பார்க்க என்று சீரியலை மிஸ் பண்ணாமல் பார்த்து வருகிறார்கள் பலரும். சொல்லப் போனால் இவர்கள் ஒரு எபிசோடில் அந்த ரொமான்ஸ் செய்யவில்லை என்றால் மிகுந்த ஏமாற்றத்துக்கு ஆளாகி, போனில் ஹாட் ஸ்டார் தேடி முல்லை கதிரின் ஒரு ரொமான்ஸ் சீன பார்த்துவிட்டுத்தான் உறங்கப் போகிறார்களாம்.

மார்க்கெட்டிங் யுக்தி
இந்த மார்க்கெட்டிங் யுக்தியைத் தெரிந்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் குழு, தினமும் என்ன வைக்கலாம் என்று மண்டையை உடைத்துக்கொண்டு காட்சிகள் அமைக்கிறார்கள். அதிலும் விரசம் இல்லாமல் வைக்க வேண்டும்... அதே சமயம் நச்சென்று இருக்க வேண்டும் என்பதிலும் அதிக கவனம் செலுத்தி காட்சியாக்குகிறார்கள். சீரியல் கதை வேறு மிகவும் கவனமாக கையாள வேண்டிய குடும்ப கதையாகவும் இருக்கிறது.

குறை பிடிக்கவில்லை
இந்த சீரியலில் யாரையாவது குறித்து குறை சொன்னால் கூட சீரியல் ரசிகர்களுக்கு பிடிப்பதில்லை. அதனால் பார்ப்பவர்கள் நன்றாக இருப்பதை மட்டுமே சுட்டிக்காட்டி எழுதிவிட்டு போகிறார்கள். தனம் கதாபாத்திரம் செய்யும் தியாகம், குடும்பத்தில் அண்ணன் தம்பி, ஓரகத்தி ஒற்றுமை இவை எல்லாம் கட்சிகளாக்கும்போது போரடிக்காமல் கொண்டு செல்லும் லாவகத்தை மட்டும் சிலாகித்து சொல்லி அத்துடன் நிறுத்திக்கொள்கிறார்கள்.

இது சரியா?
கதிராக நடிக்கும் குமரன் நிற்கையில், திரும்பிப் பார்த்து நடிக்கையில், ஒரு டயலாக் பேசுகையில் கொஞ்சம் இயல்பாக இல்லாமல் ரோபோ மாதிரி இருக்குதே.. அது கதாபாத்திரத்தின் தன்மை என்பதாலா? இல்லை குமரன் நடிப்பே அப்படித்தானா? முல்லை எக்சைட்டிங் முன்னால் கதிர் ரொம்ப சாதாரணமாக வசனம் பேசிவிட்டு போகிறார். அது கூட பரவாயில்லை, கொஞ்சம் எந்திரத்தனமாக இருக்கிறதே..!
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications