Pandian Stores Serial: அன்னிக்கு கோபமா பேசினான்....இப்போ ஓவரா பார்க்கிறான்...!
சென்னை: முல்லை வீட்டுக்கு போயும், அவளை கண்ணால் பார்க்க முடியவில்லை என்ற ஆதங்கத்தில் கடையில் இருந்த கண்ணனிடம் கோபமா பேசினான். இப்போ குளிச்சுட்டு ஃபிரஷா நடந்து போகும் முல்லையை வச்ச கண் வாங்காம பார்க்கிறான் கதிர்.
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடக்கும் சம்பவம்தான் இது. தினமும் மாலை 4 மணிக்கு ஆரம்பிச்சு 6 மணி வரை 4 எபிஸோட்சை மறு ஒளிபரப்பு செய்து வருது விஜய் டிவி.
லாக்டவுன் முடிந்து, சீரியல் படப்பிடிப்பு ஆரம்பித்து எபிஸோட்ஸ் கைக்கு வரும்வரை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை மறு ஒளிபரப்பு செய்து, கரண்ட் எபிசோட் வரை கொண்டு வந்து விடலாம் என்பது விஜய் டிவி கணக்கு.

கணக்கு தப்பாகவில்லை
விஜய் டிவி போட்ட கணக்கு தப்பாகவில்லை என்று சொல்லும் அளவுக்கு, தொலைக்காட்சி சீரியல் ஷூட்டிங் நடத்தலாம் என்று தமிழக அரசு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது. இனி ஷூட்டிங் முடிந்து, எபிசோட் ஒளிபரப்புக்கு வருவதற்குள் பாண்டியன் ஸ்டோர்ஸ் மறு ஒளிபரப்பையும் முடித்துவிடும் விஜய் டிவி.

பிறந்தநாள் பரிசு
மனைவி முல்லைக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வதற்குள் படாத பாடு பட்டான் கதிர். கலர்கலர் ஜிமிக்கிகளை முல்லைக்கு பரிசாக கொடுக்கலாம் என்று அவள் வீட்டுக்கு போகிறான். முல்லையின் அம்மா டச்சிங்கா பேசினாங்களே தவிர உங்க வீட்டுக்குத்தான் முல்லை போயிருக்கிறாள் என்று ஒரு வார்த்தை சொல்ல மறந்துட்டாங்க.

விரக்தியில் கதிர்
கதிர் விரக்தியில், வீட்டுக்கு போகாமல் அங்கு இங்கு என்று அலைந்துவிட்டு, இன்னிக்கு பிறந்தநாளை வாழ்த்து கூட சொல்ல முடியாமல் போச்சேன்னு வருந்தறான். முல்லையை பார்க்காமல் வந்த கோபத்தில் தம்பி கண்ணனிடம் கோபமாக பேசறான். கடையில் எதுக்கு வந்து உட்கார்ந்து இருக்கே...இப்படி இருந்தா உன்னை எந்த பெண்ணுக்கும் பிடிக்காதுன்னு தத்துவம் பேசறான்.

இப்போ இமைக்காம பார்க்கிறான்
இரவு முல்லைக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லியாச்சு...ஜிமிக்கிகளையும் கொடுத்தாச்சு. காலையில் எழுந்து வந்து, கண்ணனை ஏண்டா கடைக்கு போகலைன்னு கேட்கிறான். என்னடா அண்ணன் நேத்து ஒரு பேச்சு பேசுச்சு...இன்னிக்கு ஒரு பேச்சு பேசுதுன்னு அவன் குழம்பி அண்ணன் கதிரையே பார்க்கிறான். அவனோ, குளித்துவிட்டு ஃபிரஷாக தான் வாங்கி வந்த ஜிமிக்கியைப் போட்டு வரும் முல்லையை இமைக்காமல் பார்த்துக்கொண்டே நிற்கிறான்.
-
பாண்டியன் ஸ்டோர்ஸ்: ஒரு வாக்குமூலத்தால் தலைகீழான கதை! மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications