Katrin Mozhi Serial: ஆம்பளை பிள்ளையை அடிச்சுதான் வளர்க்கணுமோ?
சென்னை: ஆம்பளை பிள்ளையை அடிச்சு வளர்க்கணும்... பொம்பளைப் பிள்ளையை பொத்தி வளர்க்கணும்னு பெரியவங்க சொல்வாங்க. அதே மாதிரிதான் காற்றின் மொழி சீரியல் கதை போக்கு இருக்கிறது.
விஜய் டிவியின் காற்றின் மொழி சீரியலில் ஒரு பெண் குழந்தைக்குப் பிறகு பிறந்த அடுத்த பெண் குழந்தைக்கு வயிற்றில் இருக்கும்போதே மருந்து கொடுத்திட, அவள் வாய் பேச முடியாதவளாய் பிறக்கிறாள்.
இதனால் பெத்த தந்தையால் வெறுத்து ஒதுக்கப்பட்டு, தந்தையின் கண்ணில் படாமல் வளர்கிறாள். இரண்டு பெண் பிள்ளைகளும் துச்சம்தான் இவருக்கு. ஆனால், போற்றி வளர்த்த பையன்?

காற்றின் மொழி சீரியல்
விஜய் டிவியின் காற்றின் மொழி சீரியல் வாய் பேச முடியாத கண்மணிக்கு மாட்டுத் தொழுவம்தான் வீடு. மாட்டைப் பாதுகாத்து, பால் கறந்து சொசைட்டிக்கு கொண்டு போவதுதான் அவளது வேலை. இதை எல்லாம் பொறுத்துக் கொண்டு வளர்ந்தாலும், அரிதாக பிறந்த ஆன் குழந்தை என்று வளர்க்கப்பட்ட தம்பி கெட்ட வழியில் போகிறான்.

மது சீட்டாட்டம்
கல்லூரியில் படிக்கும் தம்பி நண்பர்களுடன் சீட்டாடுவது, தண்ணி அடிப்பது என்று இருப்பதைப் பார்த்துவிட்ட கண்மணி சோகத்தில் இருக்கிறாள். சீட்டாட்ட மோகத்தில் கடனாளியாகி விட்ட தம்பி அக்காவிடம் பொய் சொல்லி தங்க செயினைக் கேட்கிறான். அவளும் தம்பியின் பேச்சைக் கேட்டு கழட்டி கொடுக்கிறாள்.

உண்மையை அம்மாவிடம்
இனியும் சும்மா இருக்கக் கூடாது என்று அம்மாவிடம் சைகையால் சொல்ல, தம்பி அதற்குள் வந்து வேலைக்காரி நீ உன் வேலையைப் பார்த்துகிட்டு போன்னு திட்டறான். அக்காவை வேலைக்காரின்னு சொல்றியா? மன்னிப்பு கேளுடான்னு அம்மா சொல்ல ,அப்பா வந்து விடுகிறார்.

வீட்டு ராஜா
அவன் இந்த வீட்டு ராஜா.. அவன் பிறந்த உடனேதான் நாம செல்வாக்கா வாழறோம். மத்த புள்ளைங்க மாதிரி இல்லை அவன்.. சீட்டாடுறானா, தண்ணி அடிக்கறானா? ஒழுங்கா காலேஜ் போற பிள்ளையை அந்த வேலைக்காரி இல்லாததும் பொல்லாததும் சொல்லி மன்னிப்பு கேட்க சொல்றாளான்னு கத்தறார்.
பாவம் நல்லதுக்கு காலம் இல்லை. ஆம்பிளை பிள்ளைங்களை அடிச்சுதான் வளர்க்கனும் போல!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications