ஒரு கோடியப்பு.. முதல் முறையாக 14 வயது சிறுவன் செய்த சாதனை.. எப்படி தெரியுமா? வியந்த அமிதாப்பச்சன்
சென்னை: அமிதாப்பச்சன் தொகுத்து வழங்கும் ரியாலிட்டி நிகழ்ச்சியான கவுன் பனேகா கோடிபதி என்ற இந்தி நிகழ்ச்சியில் மயங்க் என்ற சிறுவர் ஒரு கோடி ரூபாய் பரிசு பெற்று இருக்கிறார்.
இதுபோன்ற ரியாலிட்டி ஷோக்களில் ஜூனியர் பிரிவில் ஒரு கோடி ரூபாய் பரிசு பெற்ற முதல் சிறுவன் என்ற சாதனைக்கு மயங்க் சொந்தக்காரர் ஆகி இருக்கிறார்.

அமிதாப்பச்சன் தொகுத்து வழங்கும் கே பி சி ஜூனியர் வீக் நிகழ்ச்சியில் 7 கோடி வரை வெல்லும் வாய்ப்பு உள்ளநிலையில் அதில் மயங்க்
ஒரு கோடி ரூபாய் பரிசு பெற்று இருக்கும் நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
தமிழில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற நிகழ்ச்சியை போன்றே இந்தியில் கேபிசி ஜூனியர் வீக் அதாவது கவுன் பனேகா கோடிபதி என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி ஹிந்தியில் பிரபலமாக இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியை அமிதாப்பச்சன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி தற்போது 15 வது சீசன் முடிவடைந்து இருக்கிறது.
ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியில் ஏழு கோடி வரைக்குமான பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டில் சீசன் 14ல் இருந்து இந்த நிகழ்ச்சியில் ஏழரை கோடி பரிசு தொகையாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதில் சீசன் ஒன்றிலிருந்து 15 வது சீசன் வரைக்கும் அமிதாப்பச்சன் தொகுப்பாளராக இருக்கும் நிலையில் சீசன் மூன்றில் மட்டும் ஷாருக்கான் தொகுப்பாளராக இருந்திருக்கிறார்.
இதில் பங்கேற்ற ஹரியானாவை சேர்ந்த 14 வயது மயங்க் என்பவர் அமிதாப்பச்சனிடம் இருந்து வந்த கடினமான கேள்விகளுக்கு சடசடவென பதிலளித்து ஒரு கோடி ரூபாய் பரிசு தொகையை பெற்றிருக்கிறார். அதே நேரத்தில் இது போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒரு கோடி ரூபாய் வென்ற முதல் சிறுவன் என்ற சாதனையை மயங்க் படைத்திருக்கிறார். மேலும் அவருடைய அறிவு திறமை பாராட்டி அவருக்கு ஒரு கோடி ரூபாய் மட்டும் அல்லாமல் அதோடு hyundai i20 காரும் பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து மயங்க் பேட்டி ஒன்றில் பேசுகையில் இந்த நிகழ்ச்சியில் எனது அறிவை முழுமையாக வெளிப்படுத்துவதற்கு என்னை ஊக்கப்படுத்திய அமிதாப்பச்சன் சாருக்கும் அவருடன் அமர்ந்து விளையாட வாய்ப்பளித்தவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இந்த வெற்றியின் மூலமாக என்னை அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். இவ்வளவு பெரிய தொகையை வென்ற இளம் போட்டியாளர் என்பது எனக்கும் என்னுடைய குடும்பத்திற்கு பெருமை அளிக்கிறது என்று பேசி இருக்கிறார். தற்போது இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications