ஹார்ட் பீட் சூட்டிங்கில் கதறி அழுதேன்! 200 படங்களில் நடிக்கும்போது நடக்காத சம்பவம்! கவிதாலயா கிருஷ்ணன் நெகிழ்ச்சி
சென்னை: ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி, பலரின் ஃபேவரைட் வெப் சீரிஸாக மாறியிருப்பது ஹார்ட் பீட். இந்தத் தொடரில், கணேஷ் என்ற கேரக்டரில் நடித்து, ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்திருக்கிறார் நடிகர் கவிதாலயா கிருஷ்ணன். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அப்போது ஒரு அனுபவமுள்ள கலைஞனுக்கு, இந்தப் புதிய மீடியா கொடுத்த அங்கீகாரம், அவருடைய பேச்சில் அப்பட்டமாகத் தெரிந்தது.

கலைஞனின் எதிர்பாராத வெற்றி
ஹார்ட் பீட் சீரிஸ் வெப் சீரிஸாக உருவான போது, அதில் நடிக்க கவிதாலயா கிருஷ்ணனுக்கு ஆரம்பத்தில் பெரிய ஆர்வம் இல்லை. அந்த நேரத்தில், அவர் வேறு வேலைகளில் பிஸியாக இருந்தார். ஆனால், ரைட்டர் தீபக் சுந்தர்ராஜனும், எக்ஸிக்யூடிவ் புரொடியூசர் ஷாம் இருவரும் அவரைச் சந்தித்து, சீரிஸின் க்ஷஒன்லைன் கதையை சொன்னார்களாம். அது, அவருக்கு மிகவும் பிடித்துப் போனதாம்.
ஹார்ட் பீட் சீரிஸ் இந்த அளவுக்குப் பெரிய ரீச் அடையும் என்று அவர் சத்தியமாக எதிர்பார்க்கவில்லையாம். ஒரு கலைஞனாக, அவர் இதுவரை கிட்டத்தட்ட 85,000 ஹவர் தொலைக்காட்சியில் நடித்திருக்கிறார். 200 படங்கள் பண்ணியிருக்கிறார். 2500 நாடகங்கள் போட்டிருக்கிறார். இவ்வளவு அனுபவம் இருந்தும், இந்தச் சிறிய தொடருக்குக் கிடைத்த புகழ் அவரை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. கடைசி எபிசோட் பார்த்துவிட்டு, அவருக்கு நிறைய போன் கால்கள் வந்திருக்கின்றன. 200 படங்களில் கிடைக்காத புகழ் இந்த சீரிஸ்ல எனக்குக் கிடைச்சிருக்கு என்று அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
நடிப்பு தத்துவம்
கவிதாலயா கிருஷ்ணனின் நடிப்பு தத்துவம் மிகவும் வித்தியாசமானது. அவர் நடிக்க மாட்டாராம், இயல்பாக அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிடுவாராம். ஸ்கிரிப்ட்ல உள்ள டயலாக்கை அப்படியே பேச மாட்டாராம். என்ன சொல்லணும்ங்கிறதை புரிஞ்சுகிட்டு, நானாகத்தான் பேசுவேன் என்று அவர் கூறினார். அந்தச் சுதந்திரத்தை அவருக்கு ஹார்ட் பீட் குழு கொடுத்திருக்கிறது. நான் நானா இருக்கிறதுக்கான சுதந்திரம் கிடைச்சது என்று அவர் சொன்னது, அவருடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.
படப்பிடிப்பு தளத்தில் அவர் அமைதியாக இருப்பதால், எல்லாரும் அவரைப் பார்த்துப் பயப்படுவார்களாம். என்கிட்ட பேசுனா தானே நான் பேச முடியும். அவங்களும் பேச மாட்டாங்க, நானும் பேச மாட்டேன் என்று சிரித்துக்கொண்டே பேசிக் கொண்டிருந்தார்.
கண்ணீரை வரவழைத்த இறுதி எபிசோட்
ஹார்ட் பீட் தொடரின் கடைசி எபிசோட் பலரையும் கண்கலங்க வைத்தது. கணேஷ் கேரக்டரின் மனைவி இறந்துவிடும் காட்சி, ரசிகர்களை உலுக்கியது. அந்த காட்சியின் படப்பிடிப்பு பற்றி கவிதாலயா கிருஷ்ணன் பகிர்ந்து கொண்டார்.
உங்க மனைவி இறந்துடுவாங்க, நீங்க எமோஷனலி உடைஞ்சிடுவீங்க என்று ரைட்டர் தீபக் முன்னாடியே அவரிடம் சொல்லியிருக்கிறார். அதனால், அவர் அதற்காகத் தயாராக இருந்திருக்கிறார். அந்தக் காட்சியை டைரக்டர் ரொம்ப அழகாக எடுத்திருக்கிறார். ரொம்ப பிரேக் டவுன் ஆகாதீங்க சார், கொஞ்சம் கம்மியா பண்ணுங்க என்று டைரக்டர் சொல்லிக்கொண்டே இருந்தாராம். ஏனெனில், அவர் சிவாஜி கணேசனின் தீவிர ரசிகர். சிவாஜி சாரோட நெஞ்சிருக்கும் வரை படம் பார்த்தேன். அவர் எப்படி பண்ணியிருப்பாருனு நினைச்சுப்பேன் என்று கூறினார்.

அந்தக் காட்சியில் நடிக்கும்போது, ஒரு முக்கியமான விஷயம் நடந்தது. சீரிஸில், அவருடைய மனைவி பெயர் சாரதா. நிஜ வாழ்க்கையில், அவருடைய மனைவி பெயரும் சாரதா தான். இது, அந்தக் காட்சியில் ஒரு டிராமாவைக் கொடுத்ததாம். கிளிசரின் எல்லாம் போட்டு நடிக்க அவருக்குத் தெரியாதாம். ரியலா அழுததுதான் அதெல்லாம் என்று அவர் கூறினார். ரீனாவா நடித்திருந்த தீபா பாலுவும், அனுமோலும் அந்தக் காட்சியில் ரொம்ப நல்லா ரியாக்ட் பண்ணியிருப்பார்களாம். ஒருத்தங்க ரியாக்ட் பண்ணாதான் நாம ஆக்ட் பண்ண முடியும் என்று அவர் சொன்னது, ஒரு கலைஞனின் பணிவு.
கவிதாலயா கிருஷ்ணன், தனது அனுபவத்தால் ஹார்ட் பீட் சீரிஸை மேலும் உயிர்ப்புடன் ஆக்கியிருக்கிறார். அவருடைய எளிமையான நடிப்புத் தத்துவமும், கதாபாத்திரத்துடன் அவர் ஏற்படுத்திக்கொண்ட உணர்வுபூர்வமான தொடர்பும், அந்த சீரிஸின் வெற்றிக்கு முக்கியக் காரணம்.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications