பெரியப்பாவுக்கு எதிராக வாரிசை காப்பாற்ற போராடும் கயல்... இனி நடக்கப் போவது இதுதானா?
கயல் பவித்ராவின் கர்ப்பத்தை கலைக்க விடாமல் காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கிறார்.
சென்னை: சன் டிவி ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் மார்ச் 14ஆம் நாளுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பவித்ராவிற்கு தெரியாமலேயே அவருடைய கர்ப்பத்தை கலைக்க நடக்கும் சூழ்ச்சியை கயல் கண்டுபிடித்து இருக்கிறார்.
பெரியப்பாவின் குடும்பத்தில் இருந்து பவித்ராவை இனி எப்படி காப்பாற்ற போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

கயலுக்கு எதிரான சூழ்ச்சி
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் தொடர்ந்து டிஆர்பி யில் முன்னணியில் இருந்து வருகிறது. அதுவும் டாப் 10 சீரியல்களில் முதல் இடத்தை பல மாதங்களாகவே இந்த சீரியல் பிடித்து வருகிறது. இந்த சீரியலில் கதாநாயகியாக இருக்கும் கயல் தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றுவதற்காக தன்னுடைய காதலையும், ஆசைகளையும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு குடும்பத்தின் முன்னேற்றத்திற்காகவே போராடிக் கொண்டிருக்கிறார். கயல் குடும்பம் அவமானப்பட வேண்டும், எந்த இடத்திலும் முன்னேறி விடக்கூடாது என்று அவருடைய சொந்த பெரியப்பாவின் குடும்பமே சூழ்ச்சி செய்து கொண்டிருக்கிறது.

மருத்துவமனைக்கு வந்த குடும்பம்
ஒவ்வொரு இடத்திலும் கயலின் பெரியப்பாவும், பெரியம்மாகவும் தனக்கு எதிராக செய்யும் செயல்களை எல்லாம் கயல் முறியடித்துக்கொண்டு வெற்றி பெற்று தன்னுடைய போராட்டத்தில் அடுத்தடுத்த நிலைக்கு சென்று கொண்டே இருக்கிறார். இந்த நிலையில் கயலின் பெரியப்பா தன்னுடைய மகன் பவித்ரா என்னும் பெண்ணை காதலித்து ஏமாற்றியதோடு அவளின் கர்ப்பத்தை கலைப்பதற்காக பவித்ராவுக்கு தெரியாமல் ஹாஸ்பிடலுக்கு கூட்டிக்கொண்டு வந்திருக்கின்றனர்.

கயலுக்குத் தெரிந்த உண்மை
கயல் வேலை பார்க்கும் ஹாஸ்பிடல் என்பதால் கயலுக்கு பெரியப்பாவின் முழு குடும்பமும் பவித்ராவோடு எதற்கு வந்திருக்கிறாங்க என்ற சந்தேகம் எழுகிறது. இதனால் கயல் அவசர அவசரமாக அனைவரிடமும் விசாரிக்கிறார். அப்போது பவித்ரா கர்ப்பமாக இருக்கும் விஷயமும், அதனை கலைக்கவே இவர்கள் இப்படி ஒரு நாடகம் போடுகிறார்கள் என்ற விஷயமும் தெரிந்து இருக்கிறது..

எப்படி நிறுத்தப் போகிறார்
தன்னுடைய பெரியப்பாவின் சூழ்ச்சியை முறியடித்து பவித்ராவையும் அவருடைய வயிற்றில் வளரும் குழந்தையையும் காப்பாற்ற வேண்டும் என்று கயல் யோசிக்கிறார். இனி இதனை எப்படி நிறுத்தப் போகிறார் என்பது இன்றைய எபிசோட்டில் தெரியும். பரபரப்பாக வெளியான இந்த பிரமோ தற்போது ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. கயலுக்கு எதிராக இருக்கும் டாக்டர் பெரியப்பாவோடு சேர்ந்து கொண்டு கயலை பழிவாங்க புது முயற்சிகளை எடுக்க இருக்கும் நிலையில் கயல் அனைவருக்கும் தோல்விகளை கொடுக்க இருக்கிறார்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications