கயல் சீரியல் சஞ்சீவின் புதிய காதல்.. புது வீடு கட்டிய பிறகு நடந்த மாற்றம்! அவரே வெளியிட்ட வீடியோ
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாக ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலம் அடைந்த நடிகர் சஞ்சீவ் இப்போது கயல் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவர் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் புதிய காதலில் சிக்கி இருப்பதாக கூறி இருக்கிறார் இது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
சின்னத்திரையில் பலரும் விரும்பும் நட்சத்திர தம்பதிகளாக ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் இருந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் விஜய் டிவியில் ராஜா ராணி சீரியல் மூலமாகத்தான் அறிமுகம் ஆகி இருந்தனர். இந்த சீரியலில் ரீல் ஜோடியாக நடித்து ரியல் ஜோடியாக மாறிவிட்டனர். சீரியல் முடிவதற்குள் இவர்களுக்கு திருமணமும் முடிந்து ஒரு குழந்தைக்கு பெற்றோர்களும் ஆகிவிட்டனர்.

அதைத்தொடர்ந்த ராஜா ராணி 2 சீரியலிலும் ஆலியா நடித்து வந்தார். ஆனால் அப்போது இரண்டாவது முறையாக தான் கர்ப்பமாக இருந்ததால் அந்த சீரியலில் இருந்து விலகி இருந்தார். இப்போது இரண்டு குழந்தைகள் இவர்களுக்கு இருக்கும் நிலையில் மீண்டும் தங்களுடைய சீரியல் பயணத்தை தொடங்கி இருக்கின்றனர். சஞ்சீவ் சன் டிவியில் கயல் சீரியலில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் ஆலியாவும் சன் டிவியில் இனியா சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் தான் இந்த தம்பதி பலரும் வியந்து பார்க்கும் அளவிற்கு பிரமாண்டமான வீடு கட்டி இருந்தனர். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதால் ஆலியா வீட்டில் இவர்களுடைய திருமணத்திற்கு சம்மதிக்காமல் இருந்தனர். இரண்டு குழந்தைகள் பிறந்த போது கூட இவர்களை வந்து பார்க்காமல் இருந்த ஆலியாவின் பெற்றோர் இப்போது சமீபத்தில் சஞ்சீவ் பிறந்த நாளில் அவருடைய குடும்பத்தோடு வந்து சேர்ந்திருக்கின்றனர்.

இது குறித்து ஆலியா சமூக வலைத்தள பக்கத்தில் நெகிழ்ச்சியோடு பதிவு வெளியிட்டிருந்தார். காதலித்து திருமணம் செய்து கொண்ட ஒரு சில பிரபலங்கள் மட்டும்தான் தங்களுடைய திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டு போய் கொண்டு இருக்கின்றனர். அவர்களில் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் தம்பதியும் இடம்பிடித்து இருக்கின்றனர். இவர்கள் இருவரும் அடிக்கடி க்யூட்டான பல ரீல்ஸ் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் சஞ்சீவ் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ தான் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது. அதில் தன்னுடைய புதிய காதல் என்று சஞ்சீவ் பதிவிட்டு இருக்கிறார். அது வேற எதுவும் இல்லை கீபோர்டு வாசித்தபடி சஞ்சீவ் இருக்கும் நிலையில் இப்போதைக்கு இதுதான் புதிய முயற்சி... அவருடைய கீபோர்டு மியூசிக் பார்த்து பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் மற்றும் லைக்குகளை குவித்து வருகிறார்கள். அதே நேரத்தில் இந்த பதிவில் ஆலியா எந்த கருத்தும் வெளியிடவில்லை.












Click it and Unblock the Notifications