Kayal Amutha: என்னாது நான் தற்கொலைக்கு முயன்றேனா! எல்லாமே Fake! கயல் சீரியல் நடிகை அமுதா மறுப்பு!
சென்னை: கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மனமுடைந்த பிரபல சின்னத்திரை நடிகை அமுதா தற்கொலை முயற்சி செய்ததாக தகவல்கள் வெளியான நிலையில் அந்த தகவலை யாரும் நம்ப வேண்டாம் என நடிகை அமுதா கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் அந்த தகவல்கள் எல்லாம் போலியானவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை சாலிகிராம் வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் வசித்து வந்தவர் சின்னத்திரை நடிகை அமுதா (28). இவரது கணவர் பிரபு (30), ஐடி ஊழியராவார். இவர்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த நிலையில் அமுதா கயல் சீரியலில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. அவர் ஷூட்டிங் சென்றுவிட்டு இரவு வீடு திரும்ப நீண்ட நேரமாகுமாம். இது பிரபுவுக்கு பிடிக்கவில்லை. இதனால் சீரியல்களில் நடிப்பதை நிறுத்தும்படி பிரபு கூறியதற்கு அமுதா உடன்படவில்லை என தெரிகிறது.
இதனால் அவர்கள் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு நடந்து வந்ததாம். இதனால் அமுதாவை பிரிந்த பிரபு, ஆவடியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்ததாக தெரிகிறது. இதனால் அமுதா மனமுடைந்ததாக தெரிகிறது.
கணவருடன் சமாதானம் பேச பல முறை முயன்றும் அவர் பேச மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் பினாயிலை எடுத்து குடித்து அமுதா தற்கொலைக்கு முயற்சித்ததாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து அவர் விருகம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் போலீஸார் அவரிடம் விசாரித்து வருவதாகவும் சொல்லப்பட்டது.
இந்த நிலையில்தான் அமுதா இதையெல்லாம் மறுத்து ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இப்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது என் கணவருக்கும் எனக்கும் பிரச்சினையால் நான் தற்கொலை முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் வீடியோவில் உள்ளது.
இதை யாரும் நம்பாதீர்கள். அது ஒரு போலியான வீடியோ. நான் எனது சொந்த ஊரில் இருக்கிறேன். எதற்காக இப்படி ஒரு வீடியோவை பதிவு செய்தார்கள் என எனக்கு தெரியவில்லை. அந்த வீடியோ பதிவு போலியானது என அனைவருமே ரிப்போர்ட் செய்யுங்கள் என தெரிவித்துள்ளார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications