கயல் சீரியல் டுவிஸ்ட்... எழில் கல்யாணத்தில் நடந்த திருப்பம்.. ஆனால் இதை மறந்துட்டாங்களே

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலின் ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

அதில் பல மாதங்களாகவே எதிர்பார்த்து இருந்த எழிலுடைய திருமணம் நடைபெற்று இருக்கிறது.

Kayal serial promo 2023 August 5th promo full update Ezhil married kayal

இந்த நிலையில் இந்த கதையை ஏற்கனவே பல திரைப்படங்களில் பார்த்திருந்தாலும் இப்போது இதுதான் டிரண்டாக இருக்கிறது என்று இந்த சீரியல் ப்ரோமோவில் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அதனாலேயே இந்த சீரியல் டிஆர்பியில் முதலிடத்தை பிடித்துக் கொண்டிருக்கிறது. கயல் சீரியல் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு தற்போது வரை ஒளிபரப்பாகி வருகிறது.

Kayal serial promo 2023 August 5th promo full update Ezhil married kayal

கயல் சீரியலில் தந்தையை இழந்த குடும்பத்தில் பொறுப்பில்லாமல் இருக்கும் குடிகார அண்ணன், அவருடைய குடும்பம், கணவரை இழந்த தாய் மற்றும் தன்னுடைய தங்கைகள், தம்பி என்ன பெரிய குடும்பத்தில் கயல் மொத்த குடும்ப சுமையையும் தன்னுடைய தோளில் சுமந்து தன்னுடைய சந்தோஷங்களை எல்லாம் பெரிது படுத்தாத ஒரு நர்ஸ் கேரக்டரில் நடிகை சைத்ரா ரெட்டி நடித்திருக்கிறார்.

அதனாலேயே கயல் சீரியல் நடிகையை அதிகமான ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது. நம்ம வீட்டில் இப்படி ஒரு நபர் இல்லையே என்று பலர் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் நாங்களும் இப்படித்தான் வீட்டில் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறோம் என்று கூட பல பெண்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இந்த சீரியலில் எதிர்பாராத திருப்பங்கள் இப்போது நடைபெற்றிருக்கிறது.

Kayal serial promo 2023 August 5th promo full update Ezhil married kayal

சீரியலின் கதைப்படி கயல் தன்னுடைய நண்பரான எழிலுக்கு தன்னுடைய பெரியப்பாவின் மகளான ஆர்த்தி கூட திருமணம் செய்து வைப்பதில் ஆர்வமாக இருக்கிறார். அதற்காக பல தடைகளை தாண்டியும் திருமணத்தை எப்படியும் நடத்தியே ஆக வேண்டும் என்று கயல் போராடிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் பல வருடங்களாகவே எழில் காதலித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் திருமண சடங்குகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. அப்போது தாலியை எல்லோரும் ஆசிர்வதித்து அதை எழில் இடம் கொடுத்து தாலி கட்ட சொல்கின்றனர். அப்போது எழில் ஒரு சில நிமிடம் அப்படியே யோசிக்கிறார். அப்போது எழிலுடைய அம்மா தாலியை கட்டுடா என்று எழிலை அவசரப்படுத்த, அந்த நேரத்தில் எழில் மேடையில் கல்யாண பொண்ணுக்கு அருகில் தாலியை சரி செய்வதற்காக குனிந்தபோது கயல் கழுத்தில் தாலியை கட்டி விடுகிறார்.

Kayal serial promo 2023 August 5th promo full update Ezhil married kayal

இதனால் அதிர்ச்சியான கயலின் பெரியம்மா கயலை கழுத்தை பிடித்து இப்படியாக தற்போது வெளியான பிரமோ இருக்கையில் இந்த பிரமோவிற்கு அதிகமான ரசிகர்கள் இந்த கதையை நாங்க பல திரைப்படங்களில் பார்த்தது தான். அதையேதான் இங்கேயும் ஓட்டிக் கொண்டிருக்கிறீர்களா? சொந்தமாக ஏதாவது யோசித்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+