கீர்த்தி சுரேஷின் டோரதிக்கு மலேசியாவில் சிக்கல்? LGBTQ விஷயத்தால் தடை! படத்தின் பின்னணி என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கார்த்திக் சுப்புராஜ் படம் என்றாலே வழக்கமான காதல் ஆக்சன் என்று மட்டும் போய்விடாது. ஏதாவது ஒரு வித்தியாசமான உலகத்துக்குள் நம்மை அழைத்து செல்வார். அந்த வரிசையில் இப்போது உருவாகி இருக்கும் டோரதி படம் என்று செப்டம்பர் 25 தேதி திரையரங்குகளில் வெளியாகும் நிலையில் ரிலீசுக்கு முன்பே மலேசியாவில் படத்தை சுற்றி ஒரு பிரச்சனை உருவாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிலும் குறிப்பாக படத்தில் இடம்பெற்றுள்ள LGBTQ தொடர்பான விஷயம் தான் மலேசிய தணிக்கை விதிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றனர். ஆனால் இந்த விவகாரம் ஏன் டோரதி படத்தைப் பற்றி இவ்வளவு பேச வைத்திருக்கிறது என்றால் படம் ஆரம்பத்திலிருந்து கொஞ்சம் வித்தியாசமான கதைகளத்துடன் உருவாகி இருக்கிறது.

டோரதி என்ன கதை

இந்த படத்தின் கதை 1990களில் மதுரை மற்றும் அதை சுற்றிய கிராம பின்னணியில் நடக்கிறது. சின்ன வயதில் இருந்தே நெருங்கிய நண்பர்களாக இருக்கும் கார்த்தி மற்றும் சுப்பு என்ற இருவரை சுற்றி தான் கதை நகர்கிறது. இருவருக்கும் இடையிலான நட்பு சாதாரண நட்பு கிடையாது. சிறுவயதில் இருந்து ஒன்றாக வளர்ந்து ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் இருக்கும் நண்பர்கள் ஆனால் அவர்களுடைய வாழ்க்கைக்குள் கீர்த்தி சுரேஷாக நடிக்கும் டோரதி வரும்போது அந்த நட்பில் பெரிய மாற்றம் ஏற்படுகிறது.

Keerthi Suresh Dorothy Karthik subraj Malaysia

நண்பர்களுக்குள் சண்டை

முதலில் சாதாரணமாக தோன்றும் உறவுகள் கொஞ்சம் கொஞ்சமாக பொறாமை, தவறான புரிதல், கோபம் என மாறுகிறது. ஒரு கட்டத்தில் உயிர் நண்பர்களாக இருந்த இருவருமே எதிர் எதிராக நிற்க வேண்டிய சூழல் உருவாகிறது. அதற்குப் பிறகு கதை கொலை, வன்முறை, பழிவாங்குதல் என்று வேறு பாதைக்கு செல்கிறது. படத்தின் டிரைலரும் இதைத்தான் மையமாக வைத்து காட்டி இருக்கிறது.

ஆனால் இது வெறும் 2 நண்பர்களுக்குள் சண்டை கதை கிடையாது. சாதி, ஆணாதிக்கம், வன்முறை, ஆண்கள் தங்களுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்தக் கூடாது என்ற சமூக மனநிலை போன்ற விஷயங்களை படம் பேசுகிறது. அதனால் தான் ட்ரைலரின் முடிவில் கூட ஆண்கள் அழக்கூடாதா என்று வழக்கமான எண்ணத்தையே கேள்வி கேட்கும் விதமாக வசனம் வருகிறது.

Keerthi Suresh Dorothy Karthik subraj Malaysia

கீர்த்தி சுரேஷ் கேரக்டர்

இங்கே ஒரு சுவாரஸ்யமான விஷயம் இருக்கிறது. படத்தில் கீர்த்தி சுரேஷ் தான் பெயருக்கேற்ற முக்கியமான கதாபாத்திரமாக இருந்தாலும் அவருடைய ஸ்கிரீன் பிளே அதிகமாக இருக்காது என்று கீர்த்தி ஏற்கனவே சொல்லி இருக்கிறார். ஆனால் குறைவான காட்சிகளில் வந்தாலும் அவரது கேரக்டர் மொத்த கதையையும் பாதிக்கும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கிறது. அதனால் தான் படத்தின் பெயரை டோரதி.

Keerthi Suresh Dorothy Karthik subraj Malaysia

சர்வதேச கவனம்

டோரதி படத்துக்கு இந்திய ரிலீசுக்கு முன்பே சர்வதேச அளவில் கவனம் கிடைத்துள்ளது படம் Toronto international film festival 2016ல் உலக திரையிடலாக தேர்வு செய்யப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் TIFFல் திரையிடப்பட்ட முதல் இந்திய தமிழ் திரைப்படம் என்ற பெருமையும் இதற்கு கிடைத்திருக்கிறது. அங்கு படம் திரையிட்டபோது பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பும் கிடைத்ததாக பட குழு தெரிவித்துள்ளது. இப்படி சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு கவனம் பெற்ற ஒரு படம் இப்போது மலேசியாவில் வெளியாகுமா? வெளியாகாதா? என்ற கேள்விக்குள் சிக்கி இருப்பதுதான் புதிய பரபரப்பு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+