Revolver Rita: அழுகை வருது! கண்கலங்கிய சென்ராயன்; பாராட்டிய கீர்த்தி சுரேஷ்! உணர்ச்சிப்பூர்வமான நிகழ்வு!
சென்னை: தென்னிந்திய திரைப்பட ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பும் படங்களில் ஒன்றாக உள்ள கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'ரிவால்வர் ரீட்டா' படத்தின் 'ப்ரீ ரிலீஸ்' நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. சந்துரு இயக்கத்தில் 'டார்க் காமெடி' பாணியில் உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் 28-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகர் சென்ராயன் ஆகியோர் உணர்ச்சிப்பூர்வமாக பேசியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கலங்கிய சென்ராயன்
நிகழ்ச்சியில் நடிகர் சென்ராயன் பேசும்போது தன்னுடைய உழைப்பை குறித்து சொன்னது அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது. கீர்த்தி சுரேஷைப் பாராட்டிப் பேசிய சென்ராயன், "கீர்த்தி சுரேஷ் சூப்பரா நடிப்பாங்க, டான்ஸ் ஆடுவாங்க, எல்லாம் செய்வாங்க. ஆனா இந்தப் படத்தில கீர்த்தி கார் சூப்பரா ஓட்டி இருப்பாங்க" என்று பெருமிதத்துடன் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "ட்ரெய்லரைப் பார்க்கும் போது அழுகை வருது ... ஏன்னா ... அவ்வளவு கஷ்டப்பட்டு நான் நடிச்சேன்" என்று உணர்ச்சிப்பூர்வமாகத் தெரிவித்தார். அந்தக் கதாபாத்திரத்திற்காக அவர் எவ்வளவு முயற்சி எடுத்திருக்கிறார் என்பதை இது காட்டுகிறது. படம் ரொம்ப சூப்பரா வந்திருக்கு, என்னோட கேரக்டர் ரொம்ப சூப்பரா இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
கீர்த்தி சுரேஷ் பாராட்டு மற்றும் ஆதங்கம்:
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கீர்த்தி சுரேஷ், படக்குழுவினர் குறித்துத் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். நடிகை ராதிகா சரத்குமார் குறித்துப் பேசுகையில், "இந்தப் படத்தில் முதல் முறையாக ராதிகா மேடமுடன் நடிக்கிறேன். ஆனால் அவருடைய நிறுவனத்தின் மூலம்தான் 'இது என்ன மாயம்' படத்தில் அறிமுகமானேன் - அதனால் ராதிகா மேடம் எனக்கு முன்னாடியே பழக்கம் - ஆனா படப்பிடிப்புத் தளத்தில் பயங்கர தீயாக இருப்பார்" என்று புகழ்ந்தார்.
ராதிகாவிற்கும் கீர்த்திக்கும்மான கலவை ரொம்ப அழகாக வந்திருப்பதாகவும் கூறினார். முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த சென்ராயனுக்கு நன்றி தெரிவித்த கீர்த்தி சுரேஷ், அவரது மன உணர்வுகளை புரிந்துகொண்டு பேசினார்: "நீங்க அந்த வார்த்தையை தூக்கிட்டோமேன்னு வருத்தப்பட வேண்டாம் ... அந்த வார்த்தையை கண்டிப்பாக வைக்க முடியாது - ஏனென்றால் பல பேர் பார்க்கிறார்கள் ... சென்சார் போர்டு மட்டுமில்லை, அதை யார் கேட்டாலும் தப்பாக இருக்கும்" என்று விளக்கினார்.
இருப்பினும், "நீங்க சொல்ல வருவது உங்க நடிப்பு மூலம் ஆடியன்ஸுக்குப் புரிந்து விடும் - அது இல்லாமலும் நன்றாக இருக்கும்" என்று சென்ராயனின் நடிப்பைப் பாராட்டி ஆறுதல் கூறினார். சென்ராயன் தன்னுடைய கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை நம்பிக்கையுடன் தெரிவித்திருப்பதும், கீர்த்தி சுரேஷ் அவருடைய உழைப்பைப் பாராட்டியிருப்பதும் 'ரிவால்வர் ரீட்டா' மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications