தெரு நாய் எல்லாம் பாவம் இல்ல! பிரச்சனை நமக்கு நடக்கும் போது தான் தெரியும்! கீர்த்தி சுரேஷ் ஓபன்
சென்னை: தமிழ் சினிமாவில் திறமையான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரு நாய்கள் குறித்து தான் பகிர்ந்த கருத்துகளால் கவனத்தை ஈர்த்துள்ளார். அவர், சமூகத்தில் எழும் இந்த விவாதத்தை இரண்டு பக்கங்களிலிருந்தும் பார்க்க வேண்டியது அவசியம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
சமீபத்தில் தெரு நாய் விவகாரம் பெரிய அளவில் பூதாகரமாகி கொண்டு இருக்கிறது. தெருவில் நிம்மதியாக யாராலும் நடக்க முடியாத அளவிற்கு தெருநாய் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. தெரு நாய் கடித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரேபிஸ் நோயால் காலமாகி கொண்டு இருக்கின்றனர். இதனால் பாதிக்கப்படும் மக்கள் தெருநாயை கட்டுப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் இப்போது நீதிமன்றம் பஸ் ஸ்டாண்ட் ரயில்வே ஸ்டேஷன் போன்ற இடங்களில் தெருநாயை கட்டுப்படுத்த வேண்டும் அங்கிருந்து தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று ஆணை வெளியிட்டு இருக்கிறது.

கீர்த்தி சுரேஷ் கருத்து
இந்த நிலையில் இது பற்றி கீர்த்தி சுரேஷ் பேசும்போது தெரு நாய்களுக்கு எதிரான தீர்ப்பை பார்த்து ரொம்ப கஷ்டமா இருப்பதாக குறிப்பிட்ட கீர்த்தி சுரேஷ், அதன் மறுப்பக்கத்தையும் நாம் பார்க்க வேண்டும் என்று சொன்னார்.
"என்னோட டிரைவரோட சின்ன பசங்க ரோட்டில் போகும் போது ரெண்டு தடவை தெரு நாய் கடிச்சிருக்கு. தெருநாய் எல்லாம் பாவம்னு சொல்லுறோம். ஆனா, நமக்குத் தெரிந்தவர்களுக்கு நடந்தாத்தான் புரியுது" என்று அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். நாயின் எச்சிலோ, ஒரு நகமோ பட்டால் கூட தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், அதனால் அதனுடைய பாதிப்பு எப்படி இருக்கும் என்று தெரியாது - அதையும் நாம பார்க்கணும்" என்று தனது கருத்தைத் தெளிவாகத் தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் பிரமோஷன்
இத்தகைய சமூகப் பொறுப்புள்ள கருத்தை பகிர்ந்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷ், தான் நடித்துள்ள 'ரிவால்வர் ரீட்டா' படத்தின் பிரமோஷனுக்காக பிக் பாஸ் சீசன் 9 வீட்டுக்குள் சென்றுள்ளார்.
இரவில் திடீரென 'எண்ட்ரி' கொடுத்த கீர்த்தி சுரேஷ்க்கு, பிக் பாஸ் போட்டியாளர்கள் அமோக வரவேற்பு கொடுத்துள்ளனர். இந்த வாரம் 'ஸ்கூல் டாஸ்க்' நடைபெறுவதால் போட்டியாளர்கள் பள்ளிச் சீருடையில் இருந்துள்ளனர்.
போட்டியாளர்களுடன் ஜாலியாக பேசிய கீர்த்தி சுரேஷ், அவர்களுக்கு வெளியில் நிறைய ரசிகர்கள் இருப்பதாகக் கூறினார். மேலும், நவம்பர் 28-ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள தனது 'ரிவால்வர் ரீட்டா' திரைப்படத்திற்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொண்டார். இறுதியில் அவர்களுடன் டான்ஸ் ஆடிவிட்டு வெளியே வந்தார்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications