கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்ய போகும் பிரபலம் இந்த நபரா? துபாயில் பல கோடி சொத்துக்கு அதிபதி!
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய நீண்ட கால காதலரான அந்தோணி தட்டிலை திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியேறி இருக்கிறது. கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொள்ளப் போகும் அவருடைய காதலர் யார் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
ஒரு சில நடிகைகளை பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போன்று இருப்பார்கள். அந்த அளவிற்கு பார்த்ததும் வசீகரிக்கும் அழகைப் பெற்ற கீர்த்தி சுரேஷ் ஆரம்பகால திரைப்படங்களில் இருந்து தன்னுடைய தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். அதிலும் ரஜினி முருகன் திரைப்படத்தில் பல ரசிகர்களை கவர்ந்த கீர்த்தி சுரேஷ் கடைசியாக நடித்த ரகு தாத்தா திரைப்படத்தில் தன்னுடைய இன்னொரு முகத்தையும் கட்டி இருக்கிறார்.

சமீபத்தில் பல நடிகைகள், நடிகர்கள் திடீர் திருமணம் செய்து வருகிறார்கள். நடிகை ரம்யா பாண்டியன் அவருடைய காதலனை சில நாட்களுக்கு முன்புதான் திருமணம் செய்திருந்தார். கடந்த மாதத்தில் அவர் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற செய்திகள் வெளியான போது இது வதந்தியாக இருக்கும் என்று ரசிகர்கள் நினைத்திருந்த நிலையில் தன்னுடைய காதலனோடு எடுத்த வீடியோவை ரம்யா பாண்டியன் வெளியிட்டு இருந்தார்.
அதைத்தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் அவருடைய காதலரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதுவும் காதல் திருமணம் தானாம். அதுவும் ஒரு வருடம், இரண்டு வருடம் அல்ல இவர்களுடைய காதல் பதினைந்து வருடங்களாக தொடர்கிறதாம். அவருடைய காதலரின் பெயர் அந்தோணியாம்.
கேரள மாநிலத்தை சேர்ந்த அந்தோணி தட்டில் தற்போது கொச்சி மற்றும் துபாயில் தொழிலதிபராக இருக்கிறாராம். ஹபீப் ஃபீரூக்குடன் சேர்ந்து சென்னையில் பதிவு செய்யப்பட்ட ஆஸ்போர்ட் ஹவுஸ் விண்டோ சொல்யூஷன்ஸின் முதன்மை உரிமையாளராக இருக்கிறாராம். இவருக்கு கேரளா மற்றும் துபாயில் கோடிக்கணக்கில் சொத்துக்களுள்ளதாக கூறப்படுகிறது.
பொதுவாக கீர்த்தி சுரேஷ் சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் ரொம்பவும் துருதுருப்பான பெண். ஆனால் அவருடைய காதலர் கீர்த்திக்கு அப்படியே ஆப்போசிட்டாம். ரொம்பவும் அமைதியான கேரக்டர்தானாம். இவர்களுடைய காதலுக்கு இரண்டு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்து இருக்கிறார்கள்.
பள்ளி நாட்களில் இருந்து கீர்த்திக்கு ஒரு நல்ல நண்பராக இருந்து.. இருவரும் கொச்சியில் இளங்கலை படிப்பை தொடர்ந்து போது தங்களின் நட்பை காதல் என்கிற அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். பல ஆண்டுகளாக இந்த ஜோடி தங்களின் காதலை ரகசியமாக வைத்திருந்த நிலையில் இவர்களுடைய திருமணம் தற்போது கை கூட இருக்கிறது.

பேபி ஜான் திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அடி எடுத்து வைத்த கீர்த்தி சுரேஷின் திருமணம் வரும் டிசம்பர் 11ஆம் தேதி மற்றும் 12ஆம் தேதி கோவாவில் நடைபெற இருக்கிறது என்று கூறப்படுகிறது. கீர்த்தி சுரேஷ் நடிகை மேனகா மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஜீ. சுரேஷ்குமாரின் மகள் தான்.
2008 முற்பகுதியில் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கிய கீர்த்தி சுரேஷ் கீதாஞ்சலி என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான சினிமா விருதையும் பெற்றிருந்தார். அதோடு தேசிய விருது உட்பட பல விருதுகளையும் வாங்கி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சில மாதங்களுக்கு முன்புவரைக்கும் கீர்த்தி சுரேஷ் விஜயை காதலிப்பதாகவும், விஜய் தான் கீர்த்தி சுரேஷுக்கு தனியாக வீடு எடுத்து கொடுத்திருக்கிறார் என்ற வதந்திகள் எல்லாம் பரவி வந்தது. ஆனால் அதற்கு கீர்த்தி சுரேஷ் அமைதியாகவே இருந்த நிலையில் தன்னுடைய திருமணத்தின் மூலமாக இந்த வதந்திகளுக்கு பதிலடி கொடுக்க இருக்கிறார்.












Click it and Unblock the Notifications