ஆட்டம் க்ளோஸ்.. கீர்த்தி சுரேஷின் மைனஸ் இதுதான்.. சான்ஸ் கிடைக்காமல் போக என்ன காரணம்? பிரபலம் நறுக்
சென்னை: பிரபல நடிகை கீர்த்தி சுரேஷூக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளது. படவாய்ப்புகள் இல்லாததால்தான், கீர்த்தி சுரேஷூக்கு திருமணம் நடக்க உள்ளது என்றும், எதனால் அவருக்கு வாய்ப்புகள் குறைந்தன என்பது குறித்தும், மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக உள்ள நடிகை கீர்த்தி சுரேஷ்... இவரது முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. எனவே, குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, விஷால் என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க துவங்கிவிட்டார். தமிழ் போலவே தெலுங்கிலும் கீர்த்தி சுரேஷூக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தேசிய விருது வாங்கிய நடிகைகளில் ஒருவராகவும் உள்ளார் கீர்த்தி சுரேஷ்..

இந்நிலையில், கீர்த்தி சுரேஷின் திருமணம் விரைவில் நடக்க போகிறது. தன்னுடைய 15 வருடக்காதலரான ஆன்டனி என்பவரை திருமணம் செய்ய போகிறார். இவரும் கேரளாவைச் சேர்ந்தவர் என்றாலும், துபாயில் வசித்து வருகிறாராம்..
விரைவில் திருமணம்: டிசம்பர் 12ம் தேதி கீர்த்தி சுரேஷ் திருமணம் நடைபெற உள்ளதாக தெரிகிறது. சமீபத்தில் திருப்பதிக்கு சென்ற கீர்த்தி சுரேஷ் தனக்கும் ஆண்டனிக்கும் டிசம்பர் 12ம் தேதி கோவாவில் திருமணம் நடக்கும் என்பதை உறுதிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் திருமணத்துக்கு பிறகு நடிப்பாரா? நடிக்க மாட்டாரா? அவருக்கு எதனால் படவாய்ப்புகள் குறைந்தது என்பது குறித்து Fine Time Cinema என்ற யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.
கிசுகிசுக்கள்: அதில், "எப்போதுமே ஒரு ஹீரோவுடன் தொடர்ந்து இன்னொரு படத்தில் நடித்தால் கிசுகிசுக்கள் துவங்கிவிடும்.. இதில் சிவகார்த்திகேயன் ஏற்கனவே அனுபவப்பட்டிருந்தால், கீர்த்தி சுரேஷூடன் நடிக்கும்போதே உஷாராகிவிட்டார். இதற்கு பிறகு விஜய் உட்பட பலருடன் கிசுகிசுக்கப்பட்டார் கீர்த்தி சுரேஷ்... கடைசியாக அனிருத்துடன் கிசுகிசுக்கப்பட்டார்.
"நடிகையர் திலகம்" சாவித்ரி படம் நடித்தபோது, இந்த பூனையும் பால் குடிக்குமா? என்பது போல இருந்தார். இதற்கு பிறகு தெலுங்கு, இந்திக்கு சென்றதுமே அவரது உடையில் கவர்ச்சி அதிகமாகிவிட்டது. இதுசம்பந்தமான ஆல்வம் வந்தாச்சு. வீடியோவும் வந்தாச்சு.,
மைனஸ் விஷயம்: கீர்த்தி சுரேஷிடம் உள்ள மைனஸான விஷயம், கவர்ச்சியான நபர் அவர் கிடையாது. இவரது பாட்டி நடிகை, அம்மா நடிகை, அப்பா தயாரிப்பாளர் என்பதால், சினிமா குடும்பத்தை சேர்ந்தவர்.. நல்ல திறமையான நடிகை என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், நடிகையர் திலகம் படத்துக்கு பிறகு, நிறைய புகழ் சேர்ந்துவிட்டது. எனவே, நயன்தாரா போல நாமளும் தனியாக நடிக்கலாம் என்று அசாத்திய நம்பிக்கை வந்தது. நயன்தாராவுக்கே அறம் உட்பட 2 படம்தான் ஓடியது.. அதனால் எல்லாருக்குமே அந்த வாய்ப்பு கிடைக்காது.
திடீர்னு ரஜினி, கமல், அஜீத், எல்லாருமே இவரை கைவிட்டுட்டாங்க.. இதனால் பட வாய்ப்புகளும் குறைவாயிருச்சு.. என்னைக்கு ரஜினிக்கு தங்கச்சியாக நடித்தாரோ, அப்பவே ஆட்டம் க்ளோஸ். எந்த ஒரு நடிகருக்கும், தங்கையாக நடித்தால், அடுத்தமுறை அவருக்கு ஹீரோயின வாய்ப்பு கிடைக்காது. இது சினிமாவில் எழுதப்படாத சட்டம். அதில் கீர்த்தி சுரேஷூம் சிக்கிக்கொண்டார்.
பட வாய்ப்புகள்: இப்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லை.. தன்னுடைய நண்பரை 7 வருடம் காதலித்ததாக சொல்லி உள்ளார். - துபாயில் அவர் பெரிய பணக்காரர்-ன்னு சொல்றாங்க.. எப்போதுமே ஒரு நடிகையின் பாய்பிரண்ட் வசதியாகத்தான் இருப்பாங்க..
கோவா சர்ச்சில் கல்யாணம் நடக்க உள்ளது. கீர்த்தி சுரேஷ் கண்டிப்பாக இந்துவாக இருக்க முடியாது.. கிறிஸ்தவ மதத்தில் ஞானஸ்தானம் தரப்பட்டிருந்தால்தான், அங்கே திருமணத்துக்கு ஒப்புக் கொள்வார்கள். எனவே கீர்த்தி சுரேஷ் கிறிஸ்தவ மதத்துக்கு மாறலாம்.. அல்லது மாறியிருக்கலாம். இதற்கு அவரது வீட்டிலும் ஒப்புக் கொள்ளலாம்.
பாஜக: கீர்த்தி சுரேஷின் அப்பா பாஜகவை சேர்ந்தவர்.. ஆர்எஸ்எஸ் பிரமுகர்.. பிரதமர் மோடியிடம் கீர்த்தியை ஏற்கனவே அறிமுகம் செய்து வைத்திருந்தார் சுரேஷ். தன்னுடைய மகளை ஹேமமாலினி, ஜெயப்பிரதா போல எப்படியாவது எம்பியாக்க வேண்டும் என்று ஆசையில் இருந்தார் அவரது அப்பா சுரேஷ். இப்போது கோவாவில் கீர்த்தியின் திருமணம் நடக்க உள்ளது.. திருமணமாகிவிட்டால், அவர் நடிப்பாரா தெரியாது. ஆனால், டாப் ஹீரோவுடன் ஜோடியாக நடிக்க வாய்ப்பிருக்காது" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
விஜய் - ராகுல் சந்திப்பு நடக்காமல் போனதற்கான உண்மைக் காரணம் என்ன? அதிர்ச்சி தரும் பின்னணி -
விஜய் வீட்டுக்கு பக்கத்தில் வீடு வாங்கணும்! பனையூரை வட்டமடிக்கும் ரியல் எஸ்டேட் முதலைகள்! என்ன விலை? -
விஜய் டெல்லி பயணம் 2.0.. அமித் ஷாவை எப்படியாவது சந்திக்க காய் நகர்த்தும் முதல்வர்.. மீண்டும் ட்ரிப்? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
பரிசு வேண்டாம்.. நோட்டு கொடுங்க.. அரசுப் பள்ளி மாணவர்களுக்காக இறங்கிய தவெக அமைச்சர் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
திருச்சி கிழக்கில் வெல்லமண்டி நடராஜன் போட்டி? அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கொடுத்த க்ரீன் சிக்னல்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
தமிழகத்தில் 3 பவர் சென்டர்களாம்! டெல்லியில் விஜய் கால் வைத்ததும் வந்து விழுந்த விமர்சனம்! -
காந்தாரா சர்ச்சை! மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மனிடம் மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்! நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications