கென் கருணாஸ் சொன்ன ஒரு வார்த்தை.. வம்புக்கு இழுக்கும் ப்ளூ சட்டை மாறன்.. வந்து குவியும் கண்டனங்கள்
சென்னை: நடிகர் கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள 'யூத்' படம் தற்போது நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. 'அசுரன்', 'விடுதலை' மாதிரி சீரியஸ் ரோல்களில் நடித்திருந்த கென், இந்த படத்தில் முழுக்க வேற மாதிரி ஜாலியான கதையுடன் வந்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.
படம் ரிலீஸ் ஆனதுக்குப் பிறகு, கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள திரையரங்கில் பொதுமக்களோட சேர்ந்து படத்தை பார்த்த கென் கருணாஸ், அதன் பிறகு மீடியாவை சந்தித்தார். அப்போது நடந்த ஒரு சம்பவம் தான் இப்போ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கென் கருணாஸ் பேசியதை திரைப்பட விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் கலாய்த்து இருக்கிறார்.

செய்தியாளர் கேள்வி
ஒரு செய்தியாளர் தணிக்கை குழு பற்றி கேள்வி கேட்டபோது, "தணிக்கை குழுவா? அப்படின்னா என்ன?" என்று கென் நேராக கேள்வி கேட்டார். அதற்கு பிறகு விளக்கம் கொடுக்கப்பட்டதும், தயாரிப்பாளர் தரப்பில் இருந்து "சென்சார் விதிமுறைகளுக்குள் படம் எடுத்தா எந்த பிரச்சனையும் வராது" என்று சொன்னார்.
கென் கருணாஸ் பதில்
அதே நேரத்தில், தந்தை கருணாஸ் போல அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்வி எழுந்தது. அதற்கு கென் சற்று சிரித்தபடியே, "நான் அரசியலுக்கு வர மாட்டேன். என் அப்பாவின் வாழ்க்கை வேறு... என்னோட வாழ்க்கை வேறு" என்று தெளிவாக சொல்லிவிட்டார்.
மேலும், இந்த படத்தை பார்த்து அவருடைய அப்பா அம்மா ரொம்ப எமோஷனல் ஆகி விட்டதாகவும், அது தான் தனக்கு பெரிய சந்தோஷம் என்றும் அவர் கூறினார். சீரியஸ் ரோல்கள் மட்டுமே தனக்கு நடிக்க கிடைத்ததால், அதிலிருந்து வெளியே வரவே இந்த மாதிரி ஒரு லைட் கதையை எடுத்ததாகவும் அவர் பகிர்ந்துகொண்டார்.
இவருடைய இந்த "அரசியலுக்கு வர மாட்டேன்" என்ற ஒரு வரி தான் இப்போ பெரிய டிஸ்கஷனாக மாறியுள்ளது. இதை பற்றிப் பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது ஸ்டைலில் கலாய்த்து பதிவு போட்டார்.
ப்ளூ சட்டை மாறன் போஸ்ட்
அவர் சொன்னது என்னன்னா, "அரசியலுக்கு வர மாட்டேன் என்று சொல்லுறது, பிறகு அரசியலுக்கு வரப்போகும் பலரும் ஆரம்பத்தில் சொல்லும் டயலாக் தான்" என்று கிண்டலாக குறிப்பிட்டார்.
இதைத்தொடர்ந்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கமெண்ட் மழை பொழிய ஆரம்பிச்சுட்டாங்க. ஒரு பக்கம், "ஒருத்தர் என்ன செய்யணும் என்பது அவரோட விருப்பம். இப்போவே இப்படிச் சொல்லி டார்கெட் பண்ண வேண்டிய அவசியம் இல்லை" என்று கெனை ஆதரித்து பேசுகிறார்கள்.
ரசிகர்கள் கருத்து
மற்றொரு பக்கம், "இது ஒரு சாதாரண observation தான். இதுல தவறேதும் இல்லை" என்று ப்ளூ சட்டை மாறனுக்கு ஆதரவாகவும் குரல் எழுகிறது. சிலர் இன்னும் நேராக, "கென் இப்போ சினிமாவில தான் focus பண்ணணும். அரசியல் டாப்பிக்கே வேண்டாம்" என்றும் கூறுகிறார்கள். மொத்தத்தில், 'யூத்' படம் நல்ல ரன்னில் இருக்கும் நேரத்தில், கென் கருணாஸ் சொன்ன ஒரு சிம்பிளான பதில் கூட பெரிய சர்ச்சையாக மாறி, சமூக வலைதளங்களில் ஹாட் டாப்பிக்காக மாறி இருப்பது தான் இப்போ பரபரப்பாக பேசப்படுகிறது.
-
"பாரதிராஜாவை போலவே... கடைசி நாட்களில் அமைதியாக வலியை சுமந்த மணிவண்ணன்!" சோக கதை -
வாழ்க்கையிலேயே கொடுமையான விஷயம் இதுதான்.. இதை மட்டும் யாரும் பண்ணாதீங்க! உருக்கமாக பேசிய செல்வராகவன் -
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
"தமிழர்கள் என்றாலே திருடர்களா? ரவுடிகளா? வெடித்த மலையாள சினிமா சர்ச்சை... 'Dridam' படத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள் -
"விஜய் ஜெயித்ததும் மாறிய கோடம்பாக்கம் அரசியல்?" லாரன்ஸ் சர்ச்சையில் கொளுத்தி போட்ட ப்ளூ சட்டை மாறன் -
மாஸ்டர் மகேந்திரனின் ஷாக்கடித்த கரண்ட் பேச்சு.. அசிங்கமா திட்டறாங்க.. விஜய் கிட்ட நல்ல பேர் வாங்கவா -
அம்மா சென்டிமென்ட்.. அறுக்காதீங்க லாரன்ஸ்! கொந்தளித்த ப்ளூ சட்டை மாறன்! சரமாரி விமர்சனம் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம்












Click it and Unblock the Notifications