கென் கருணாஸ்க்கு வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் செய்த சிம்பு.. யூத் பட நடிகை நெகிழ்ச்சி போஸ்ட்
சென்னை: தமிழ் சினிமாவில் தற்போது பேசுபொருளாக மாறி இருக்கும் படங்களில் ஒன்று 'யூத்'. கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள இந்த படம், வெளியான சில நாட்களிலேயே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக இளம் தலைமுறையின் வாழ்க்கை, உணர்வுகள், குடும்பம் மற்றும் எதிர்காலம் பற்றிய குழப்பங்களை இயல்பாக எடுத்துக் காட்டியிருப்பது படத்துக்கு பெரிய பலமாக மாறியுள்ளது.
கென் இந்த படத்தில் சிம்புவின் ரசிகராக நடித்திருக்கிறார். இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து சிம்பு யூத் பட குழுவினரை வீட்டிற்கு அழைத்து அனைவரையும் பாராட்டி இருக்கிறார். அது குறித்து கென் கருணாஸ் மீடியாவில் உருக்கமான பதிவு வெளியிட்டிருக்கிறார்.
ஏற்கனவே யூத் படத்தை பார்த்ததும் நடிகர் Silambarasan (சிம்பு) 'யூத்' படத்தை பார்த்து பாராட்டியிருந்தார். அதில் அவர், "புத்துணர்ச்சி, துடிப்பு, நெகிழ்ச்சி கலந்த படம்... இன்றைய தலைமுறையோடு இணையும் கதை" என்று குறிப்பிட்டிருந்தது ரசிகர்களிடையே கவனம் பெற்றது.

நடிகர் சிம்புவின் பாராட்டு
இந்த பாராட்டை தொடர்ந்து, சிம்பு நேரில் சந்தித்து பாராட்டியிருப்பது தற்போது பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த சந்திப்பின் போது எடுத்த புகைப்படங்களை கென் கருணாஸ் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:
"Some love doesn't need words... just a quiet thank you 🤍
Forever GRATEFUL ANNA, HAPPIEST STR FAN🤍"
கென் கருணாஸ் சோசியல் மீடியா பதிவு
இந்த குறுகிய வரிகள் இருந்தாலும், அதில் இருக்கும் நெகிழ்ச்சி ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது. குறிப்பாக "Forever grateful anna" என்ற வார்த்தைகள், சிம்புவுக்கு கென் வைத்துள்ள மரியாதையை வெளிப்படுத்துகிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த பதிவு வெளியான சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கான லைக்குகளும், நூற்றுக்கணக்கான கமெண்ட்ஸ்களும் குவிந்துள்ளன. "STR - கென் கூட்டணி சூப்பர்", "இது தான் ரியல் ஆதரவு", "இளம் டாலண்ட் க்கு சிம்பு தந்த பெரிய புஷ்" போன்ற கருத்துக்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.

யூத் படத்தின் கதை
'யூத்' படத்தை பொறுத்தவரை, பள்ளி மற்றும் கல்லூரி பருவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம், மூன்று காதல் கோணங்கள், நண்பர்கள் உறவு, குடும்ப எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை இணைத்து செல்கிறது. இறுதியில் ஹீரோ தனது வாழ்க்கையை பொறுப்புடன் மாற்றிக் கொள்வது போன்ற மெசேஜ் கொண்ட கதை என்பதும் ரசிகர்களை கவர்ந்த முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
யூத் பட நடிகர்கள்
மேலும், ஜிவி பிரகாஷ் அமைத்துள்ள இசை, படத்தின் உணர்வுகளை அழகாக எடுத்துச் சென்றுள்ளது. சுராஜ், தேவதர்ஷினி உள்ளிட்டோருடன் கென் கருணாஸ் வரும் காட்சிகள் கூட ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
யூத் பட ஹீரோயினி போஸ்ட்
அதுபோல சிம்புவை சந்தித்தது தன்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் என்று யூத் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் நடிகை அனிஷ்மா அணில் குமார் சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
மொத்தத்தில், 'யூத்' படம் வெற்றி பாதையில் செல்லும் நேரத்தில், சிம்பு போன்ற முன்னணி நடிகர் நேரில் அழைத்து பாராட்டியது, கென் கருணாஸ் பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. தற்போது இந்த சந்திப்பு புகைப்படங்களும், கென் வெளியிட்ட அந்த உணர்வுப்பூர்வமான பதிவும் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
-
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
என் வாழ்க்கையே முடிஞ்சிடுச்சுனு நினைத்தேன்! அந்த நொடி நடந்த சம்பவம்.. நடிகர் முனிஷ்காந்த் உருக்கம்! இது பலருக்கு பாடம் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
“அந்த பாவம் நிம்மதியா வாழ விடாது…” பெத்தவங்களை தவிக்க விடாதீங்க.. உருக்கமாக பேசிய சிவகுமார்! பின்னணி சம்பவம் -
Youth Box Office: டாப் ஹீரோக்களை மிரள வைத்த கென் கருணாஸ்.. யூத் படத்தின் ஐந்து நாள் வசூல் இத்தனை கோடியாம்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications