தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் சொன்ன ஒரு வார்த்தை.. இன்ஸ்டாவில் கம்பேக் கொடுத்த கெனிஷா.. அதிரடியான போஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரவி மோகன்- ஆர்த்தி விவாகரத்து விவகாரம் கடந்த சில மாதங்களாகவே சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இந்த சர்ச்சையில் பாடகி கெனிஷா பெயர் அடிக்கடி பேசப்பட்டு வருகிறது. ஒரு கட்டத்தில் சோசியல் மீடியாவை விட்டு விலகுவதாக எமோஷனலாக வீடியோ வெளியிட்ட அவர், தற்போது மீண்டும் இன்ஸ்டாகிராமுக்கு திரும்பி இருப்பது ரசிகர்கள் இடையே புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.

ரவி மோகன் விவாகரத்து சர்ச்சை

ரவி மோகன் தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய போவதாக அறிவித்திருந்தார். பிறகு கெனிஷாவை தன்னுடைய கம்பானியன் என்று அறிமுகப்படுத்தினார். இந்த விவாகரத்தால் இன்னும் பரபரப்பானது. அதற்கு பிறகு கெனிஷாவின் பெயரில் ஆர்த்தியை தரகுறைவாக விமர்சித்ததாக சில ஸ்கிரீன்ஷாட்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆனது.

ஆனால் அந்த பதில்கள் நான் கொடுக்கவில்லை தன்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக கெனிஷா ஏற்கனவே சொல்லி இருந்தார். அதற்கு பிறகுதான் சோசியல் மீடியாவை விட்டு விலகுவதாக அறிவித்திருந்தார். சில மாதங்களாக அமைதியாக இருந்த கெனிஷா 3 மாத இடைவெளிக்குப் பிறகு நேற்று இன்ஸ்டாகிராமில் மீண்டும் போஸ்ட் போட்டு இருக்கிறார்.

Kenishaa Ravi Mohan Aarthi Sujatha

கெனிஷா கம்பேக்

அதில், எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. இனிமேல் என் பக்கத்தில் இசை, அன்பு, கலை, ஹீலிங் போன்ற நல்ல விஷயங்களை பகிரப் போகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். இந்த பதிவு வெளிவந்ததும் ரசிகர்களின் கவனம் வேறு பக்கம் திரும்பியது. ஏனென்றால் கடந்த சில நாட்களாக ஆர்த்தியும் அவருடைய அம்மா சுஜாதா ரவியும் பகிர்ந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டன.

விஜய் மகனை இழுத்து பேசிய ரவி மோகனின் மாமியார்.. 15 நாள் முன்பு நடந்தது தெரியுமா? சுஜாதா ஆதங்கம்
குறிப்பாக ஹீலிங் என்று வருபவர்களை ஹீல்ஸால் அடியுங்கள், கணவன் மனைவியை விட்டு இன்னொரு பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என்று இருவரும் மாறி மாறி ஸ்டோரிகள் பகிர்ந்து வந்தனர். இந்த பதிவுகளில் யாருடைய பெயரையும் நேரடியாக குறிப்பிடவில்லை என்றாலும் ரசிகர்கள் பலரும் அதை கெனிஷாவை மறைமுகமாக விமர்சிப்பதாகவே எடுத்துக் கொண்டனர்.

தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் பேட்டி

இதற்கிடையில் ஆர்த்தியின் அம்மா சுஜாதா சமீபத்தில் ஒரு பேட்டியில் கெனிஷா இன்னும் ரவி மோகனுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார் என்று குற்றசாட்டை முன் வத்ததும் மேலும் பேசும் பொருளானது. இந்த சூழ்நிலையில்தான் கெனிஷா மீண்டும் இன்ஸ்டாகிராமுக்கு திரும்பி இருக்கிறார். அதனால் இது சாதாரண கம்பேக் போல இல்லை என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.

இதுவரை அமைதியாக இருந்த கெனிஷா இனிமேல் தன் தரப்பு விளக்கத்தை சமூக வலைத்தளத்தில் சொல்லப் போகிறாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மற்றொரு தரப்பினார் அவர் தெளிவாகவே இசை, ஹீலிங், அன்பு போன்ற விஷயங்களை மட்டுமே பகிர போவதாக சொல்லி இருக்கிறார். இனிமேல் எந்த சர்ச்சையிலும் ஈடுபட விரும்பவில்லை என்பதையே இந்த பதிவு காட்டுகிறது என்றும் கருத்து சொல்லி வருகின்றனர். எது எப்படியோ இனி என்ன நடக்கப் போகிறதோ என்பது பொறுத்திருந்து தான் தெரியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+