சுந்தர் சி மகள் கல்யாணத்தில் விஜய் கலந்து கொள்ளாத காரணம் இதுதான்! அப்பவே நேரடியாக சொல்லிட்டாரு! குஷ்பூ ஓபன்
சென்னை: குஷ்பூ- சுந்தர் சி தம்பதியின் மூத்த மகள் அவந்திகாவின் கல்யாணம் கோவாவில் மிகவும் எளிமையாக நடைபெற்றது. இந்த கல்யாணத்திற்கு விஜய் வருவார் என்று அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசியில் அவர் வரவில்லை. இதனால் பல விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில் அவர் எதற்காக வரவில்லை என்பது குறித்து குஷ்பூ விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
குஷ்பூ- சுந்தர்சி மகள் கல்யாணம் என்பதால் பிரமாண்டமாக இருக்கும், அங்கே திரை பிரபலங்கள் எல்லோரும் வருவார்கள் என்று ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசியில் ரொம்பவும் சிம்பிளாக கோவாவில் சிலர் முன்னிலையில் திருமணத்தை முடித்து விட்டார்கள். சரி கல்யாணம்தான் சிம்பலாக முடிந்தது ரிசப்ஷன் சென்னையில் பிரமாண்டமாக நடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அதுவும் நடக்கவில்லை.
குஷ்பு மகள் கல்யாணம்
கோவாவில் நடந்த திருமணத்தில் குஷ்புவின் நெருங்கிய சினிமா வட்டாரத்தை சார்ந்தவர்கள் மட்டும் கலந்து கொண்டனர். ஆனால் முதல்வர் விஜய்க்கு நேரில் சென்று அழைப்பு விடுத்த பிறகும் அவர் வரவில்லையே என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். அதே நேரத்தில் ஒரு சிலர் விஜய் வராததும் நல்லது தான், அங்கே ஏற்கனவே திருஷாவும் சென்றிருந்தார். அதே இடத்திற்கு விஜய்யும் போனால் தேவையில்லாத சர்ச்சைகள் தான் ஏற்படும் என்று சொல்லி வந்தனர்.

குஷ்புவின் விளக்கம்
எது எப்படியோ இப்போ உண்மையான காரணம் என்ன என்பது பற்றி குஷ்பூ பேசுகையில், கல்யாணத்துக்காக நாங்க முதல்வர் விஜய்யிடம் நேரில் சென்று இன்விடேஷன் கொடுத்த போது கோவாவில் கல்யாணம் நடக்கிறது என்றதும் அப்போ வரதுக்கு கொஞ்சம் கஷ்டம் தான் என்று விஜய் சொன்னாரு. இப்பதான் பதவியில் பொறுப்பேற்று இருக்கிறோம் சட்டப்பேரவை கூட்டத் தொடரும் நடைபெறுகிறது. இந்த நேரத்தில் லீவு எடுத்து கோவா வந்தால் அது சரியாக இருக்காது. திருமணம் சென்னையில் நடந்திருந்தால் கண்டிப்பாக வந்திருப்பேன் என்று சொன்னதாக குஷ்பூ தெரிவித்திருக்கிறார்.
மகளின் பாசம்
இந்த ஒரு விளக்கத்தால் கடந்த சில வாரங்களாக சோசியல் மீடியாவில் பேசப்பட்ட பல்வேறு யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. அதுபோல இந்த கல்யாணத்தில் நடந்த இன்னொரு சுவாரசியமான விஷயத்தை பற்றியும் குஷ்பூ பேசி இருந்தார். அதாவது திருமணத்திற்காக புதிய நகைகள் எதுவும் வாங்க வேண்டாம் என்று அவருடைய மகள் சொல்லிவிட்டாராம். அம்மா உங்களுடைய நகையை போட்டு நான் கல்யாணத்தை முடித்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டாராம்.
எளிமையான கல்யாணம்
அதுபோல கல்யாணத்திற்கு மேக்கப் பண்ணுவதற்கும், புடவை கட்டுவதற்கும் தனியாக ஆட்கள் வந்திருந்தாலும் எனக்கு அம்மா தான் கட்டிவிட வேண்டும் என்று சொல்லிவிட்டாராம். அதுபோல கல்யாணத்துக்கான ஏற்பாடு ஒரு வருஷத்துக்கு முன்பே தொடங்கி இருந்தாலும் கல்யாணம் ரொம்பவும் எளிமையாக நடக்க வேண்டும் என்று அவந்திகாவும் அவருடைய கணவரும் ஆசைப்பட்டதால் தான் கல்யாணம் ரொம்பவும் சிம்பிளாக நடந்தது என்று குஷ்பு சொல்லி கூறி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications
