குஷ்பு மகள் கல்யாணத்தில் நெகிழ வைத்த நிமிடங்கள்..."அழுத மாப்பிள்ளை... கண்ணீர் விட்ட ஆர்த்தி ரவி!
சென்னை: நடிகை குஷ்பு - இயக்குநர் சுந்தர்.சி தம்பதியின் மகள் அவந்திகா - ஷ்ரவன் திருமணம் கோவாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றிருந்தாலும், அந்த திருமணத்தில் நடந்த சில உணர்வுப்பூர்வமான தருணங்கள்தான் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
கண் கலங்கிய மாப்பிள்ளை
முதலில் தாலி கட்டும் நேரத்தில் மணமகன் ஷ்ரவன் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய வீடியோ வைரலானது. அப்போது மணப்பெண் அவந்திகா சிரித்தபடியே அவரை சமாதானப்படுத்தி, லேசாக கிண்டல் செய்த க்யூட்டான தருணம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அந்த வீடியோவை நடிகை தமன்னாவும் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

ஆர்த்தி ரவியின் அழுகை
இதற்கிடையில், தற்போது மற்றொரு புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில், மகளுக்கு தாலி கட்டப்படும் நேரத்தில் நடிகை குஷ்பு கைகளை கூப்பி இறைவனை வேண்டியபடி நெகிழ்ச்சியுடன் நிற்கிறார். அவரது அருகிலேயே நின்றிருந்த ஆர்த்தி ரவி கண்களில் கண்ணீர் வழிந்துகொண்டிருப்பது அந்த புகைப்படத்தில் தெளிவாக பதிவாகியுள்ளது.

குஷ்பு மகள் திருமணம்
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், "ஆர்த்தி ரவி ஏன் இவ்வளவு எமோஷனலாக அழுதார்?" என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். குஷ்பு குடும்பத்துடனும், ஆர்த்தி ரவி குடும்பத்துடனும் பல ஆண்டுகளாக நெருக்கமான நட்பு இருப்பதாக திரையுலகில் கூறப்படுகிறது. சிறு வயதிலிருந்தே அவந்திகாவை பார்த்து வளர்ந்தவர்களில் ஆர்த்தி ரவியும் ஒருவர் என்பதால், அந்த குழந்தை மணப்பெண்ணாக புதிய வாழ்க்கைக்கு செல்லும் தருணத்தை பார்த்து அவர் உணர்ச்சிவசப்பட்டிருக்கலாம் என்று பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல், "இது வெறும் திருமணம் இல்லை... குடும்ப உறவுகளின் உணர்வுகளை வெளிப்படுத்திய தருணம்", "அவந்திகாவை தன் வீட்டுப் பெண் போலவே நினைத்ததால்தான் ஆர்த்தி ரவி கண்கலங்கியிருக்கிறார்", "உண்மையான பாசம் இருந்தால்தான் இப்படிப்பட்ட கண்ணீர் வரும்" என்ற கமெண்ட்ஸ்களும் குவிந்து வருகின்றன.

சுந்தர் சி மகள் கல்யாணத்தில்
இந்த திருமணத்தில் நடிகைகள் த்ரிஷா, தமன்னா, நாகார்ஜுனா - அமலா, சிரஞ்சீவி - சுரேகா, வெங்கடேஷ், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். கோல்டன் தீமில் நடைபெற்ற இந்த திருமணத்தின் புகைப்படங்கள் ஏற்கனவே வைரலாகி வரும் நிலையில், தற்போது மணமகனின் கண்ணீர், அவந்திகாவின் ஆறுதல், குஷ்புவின் நெகிழ்ச்சி, ஆர்த்தி ரவியின் உணர்ச்சிவசப்பட்ட தருணம் ஆகியவை இணையத்தில் அதிகம் பகிரப்படும் காட்சிகளாக மாறியுள்ளன.
மொத்தத்தில், பிரபலங்கள் கலந்துகொண்ட பிரம்மாண்ட திருமணமாக மட்டுமல்லாமல், உண்மையான பாசம், நட்பு, குடும்ப பிணைப்பு, பிரிவு தருணத்தின் உணர்வுகளை வெளிப்படுத்திய திருமணமாகவும் குஷ்பு மகள் அவந்திகாவின் திருமணம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளது.













Click it and Unblock the Notifications