இடிந்து போன கிங்காங்.. போட்டோ ஒரு விஷயமா? அதுவிடுங்க, வாரிசு ஹீரோவை ட்ரோல் பண்ணி கொடுமை: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிங்காங் எதற்காக பிரபலங்களுக்கு கல்யாண பத்திரிகையை தந்ததை பொதுவெளியில் போட்டோக்களை பதிவிட்டு காட்டிக் கொள்ள வேண்டும்? விஜய் சேதுதிபதியின் மகன் சூர்யாவை, ட்ரோல் மெட்டீரியலாக்க பல பேர் முயற்சிப்பது ஏன்? என்பது குறித்தெல்லாம் மூத்த அரசியல் விமர்சகரும், எழுத்தாளருமான ராஜ கம்பீரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு ராஜ கம்பீரன் தன்னுடைய கருத்துக்களை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளர். இதுதான் தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறது.

AramNaadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள ராஜகம்பீரன், "பொதுவாக சினிமா உலகில் பிரபலங்களின் பிள்ளைகள் சினிமாவில் நடிக்க வந்து 90 சதவீதம் பேர் தோற்றுதான் போயிருக்கிறார்கள்..

Television varisu nadigar Vijay sethupathi

வாரிசுகள் தோல்வி

விஜயகுமாரின் மகன் அருண் விஜய், பாக்யராஜ் மகன் சாந்தனு, சத்யராஜ் மகன் சிபிராஜ், பாரதிராஜாவின் மகன், பிரபுவின் மகன், கார்த்திக்கின் மகன் இப்படி பலரும் தோல்வியைதான் தழுவினார்கள்.. ஆனால் எந்த பின்புலமும் இல்லாமல் நடிக்க வந்து, வெற்றி பெற்றவர்கள் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி போன்றோரும் உண்டு..

பிரபலங்களின் மகன் ஜெயிக்கவே கூடாதா? என்றால், சிவக்குமாரின் மகன்கள் 2 பேருமே வெற்றிபெற்றுள்ளார்கள்.. தனுஷ், விஜய் போன்றோரும் வெற்றி பெற்றுள்ளனர்.. ஆனால், யார் பரிந்துரையும் வாழ முடியாத துறை சினிமாத்துறையாகும்..

சூர்யா தனித்தன்மை

எனவே, சினிமாவில் வெற்றி பெறுவது என்பது தேர்தல் வெற்றியைவிடவும் முக்கியமானதாக பார்க்கிறேன். அரசியலுக்காவது கட்சியின் பின்புலம் உதவும். ஆனால், சினிமாவில் எதுவுமே வாரிசுகளுக்கு உதவாது. விஜய் சேதுபதி மகன் சூர்யா வெற்றி பெறுவது அவரது தனித்தன்மையை பொறுத்தது.

விஜய் சேதுபதியின் ரசிகர்களேகூட, அவரது மகன் படத்தையும் விரும்பி பார்ப்பார்களா? என்று தெரியாது.. கதைக்கு பொருத்தமானவராக அந்த நடிகர் உள்ளாரா? அந்த கதையை சுமப்பாரா? பொழுதுபோக்கு படத்தை தருவாரா? என்றுதான் மக்கள் பார்ப்பார்களே தவிர, பாரதிராஜா மகன் நடித்திருக்கிறாரே? என்றெல்லாம் பார்க்க மாட்டார்கள்.

இனிஷியல் பயன்படாது

மகாராஜா படம் விஜய் சேதுபதிக்கு ஓடியது, ஆனால், வெளிநாட்டில் ஷூட்டிங் எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்ட ஏஸ் என்ற படம் ஓடவில்லையே? ஏன்?

காரணம், கதையம்சம் நிறைந்த படங்களாக இருந்தால் மட்டுமே விஜய் சேதுபதியே இங்கு வெற்றி பெறுகிறார்.. எனவே, விஜய் சேதுபதி என்பது தகுதியாக மாறாது.. மக்களுக்கு பிடித்தால் மட்டுமே நடிகர் வெற்றி பெறுவார்களே தவிர, இனிஷியல் பயன்படாத துறை, சினிமா துறை மட்டுமே. எனவே, சூர்யா சேதுபதி, தன்னுடைய தனித்தன்மையை நிரூபிக்கும் வரைக்கும் விஜய் சேதுபதியால் நடக்காது.

கிங்காங் கொண்டாடப்பட வேண்டியவர்

சூர்யா சேதுபதியை போலவே, கிங்காங்கையும் கிண்டலடித்து கொண்டிருக்கிறார்கள்.. சினிமாவில் போராடி வந்தவர் கிங் காங்.. பத்திரிகையை தந்ததையெல்லாம் சோஷியல் மீடியாவில் பதிவிட்டதையும் கிண்டலடிக்கிறார்கள்...

ஆனால், அத்தனை பேரிடமும் அவர் பழக்கம் வைத்துள்ளார்.. கல்யாண பத்திரிகை தரும்போது, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் முட்டிப்போட்டுக் கொண்டு வாங்கினார்.. தான் ஒரு எளிய கலைஞன், பிரபலமான நடிகர்களை சென்று சந்திப்பதை பெருமையாக நினைக்கிறார் கிங்காங்.. இந்தஉலகில் குறைந்தபட்ச மனிதாபிமானமும்,

நன்றியுணர்ச்சியும் இருக்கு என்பதற்கு சாட்சியாகவே, அந்த போட்டோக்கள் உள்ளன.. எத்தனையோ பேர் இந்த உருவத்தில் சோர்ந்து போகும்போது, தன்னுடைய உருவத்தை தாண்டி வெற்றி பெற்றிருக்கிறார்.. எனவே, கொண்டாடப்படக்கூடிய கலைஞன் கிங்காங்" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+