மொய்ப் பணத்துக்கு ஆசைப்பட்ட கிங்காங்? முட்டி போட்டு பத்திரிகை வாங்கினாங்களே? கிங் காங் ஹைலைட் இதான்
சென்னை: மொய்ப் பணத்துக்காக, மகளின் கல்யாண பத்திரிகையை அனைவருக்கும் தரவில்லை கிங்காங்.. அப்படி காசு வாங்குபவராக இருந்தால், முக்கிய நபர்களை சந்தித்து, அவர்களுக்கு மட்டும் பத்திரிகை வைத்திருக்கலாம்.. அவர்கள் தரும் பணத்தையும் பெற்று கொண்டிருக்கலாம். ஆனால், கிங்காங் தன்னுடைய மகளை அனைவருமே வாழ்த்த வேண்டும் என்று ஆசைப்பட்டார்" என்று பத்திரிகையாளர் சுபைர் தெரிவித்துள்ளார்.
Aagayam Tamil என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சுபைர், கிங்காங் கடுமையான உழைப்பாளி.. அவர் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தாத ஊர்களே கிடையாது. எங்கே போனாலும் பஸ்ஸில்தான் போவார்.. ஓடி ஓடி உழைத்து, சம்பாதித்து, சேமித்து, வீட்டை வாங்கி, பிள்ளைகளை படிக்க வைத்து, இன்று திருமணம் செய்யும் வரை உயர்ந்துள்ளார்.

விஜயகாந்த் இருந்திருந்தால், அவருடைய தலைமையில்தான் இந்த திருமணம் நடந்திருக்கும் என்று கிங்காங் அடிக்கடி சொல்வார்.. தன்னுடைய மகளை எல்லா பிரபலங்களும் வந்து ஆசீர்வதிக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால் யாருமே வரவில்லை.. இது பெரிய ஏமாற்றம்தான்..
வீடியோகூட போட முடியாதா
முன்பெல்லாம் பத்திரிகை தந்தால், அந்த கல்யாணத்துக்கு செல்ல முடியாதவர்கள் டெலிகிராமில் தந்தி மூலம் வாழ்த்து சொல்வார்கள்.. இப்போது சோஷியல் மீடியா வளர்ந்துவிட்ட நிலையில், ஒருத்தரும் வீடியோ பதிவிட்டுகூட வாழ்த்து சொல்லவில்லை.. இவர்களை எல்லாம் நம்பிதானே அவர் பத்திரிகை வைத்தார்?
திருச்சியில் வேறு நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த முதல்வர், விமானத்தில் ஏறி, சென்னை ஏர்போர்ட்டிலிருந்து நேராக கிங்காங் இல்ல திருமணத்துக்கு சென்றிருக்கிறார்..
இதுதான் ஹைலைட்
இதில் என்ன ஒரு ஹைலைட் என்றால், போண்டாமணி, சிங்கமுத்து போல, அதிமுகவில் பிரச்சாரம் செய்பவர் கிங்காங், சிறிய நடிகராக இருந்தாலும், மாற்று முகாமில் இருந்தாலும், முதலமைச்சர் சென்றுள்ளார்.. இதை சினிமாவில் யாருமே எதிர்பார்க்காத விஷயம். எனக்கு முதலமைச்சர் வருவதாக திடீரென்றுதான் சொல்கிறார்கள்.. நான் எதிர்பார்க்கவேயில்லை.. இன்ப அதிர்ச்சி அடைந்துவிட்டேன் என்று அழுதுட்டே சொல்றாரு கிங்காங்..
அதேபோல, தமிழிசை சவுந்தராஜன், திருமாவளவன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.. ஜெயக்குமார் அனைவரிடமுமே எளிதாக இயல்பாக பழகக்கூடியவர்.. அப்படியே கிங்காங்கை தூக்கி இடுப்பில் வைத்து கொண்டார்.. விஜயகாந்த் சார்பாக பிரேமலதா சென்றுள்ளார்.
விஜயகாந்த் இருந்திருந்தால்?
ஆனால், டாப் நடிகர்கள்தான் வரவில்லை. இதுவே அம்பானி வீட்டு கல்யாணத்துக்கு போய் டான்ஸ் ஆடுகிறார்கள்.,. கோவாவில் நடிகைக்கு திருமணம் என்றால், தனி ஃபிளைட்டில் கிளம்பி போகிறார்கள். விஜயகாந்த் இன்று இருந்திருந்தால், அவரே இந்த கல்யாணத்தை முன்னின்று நடத்தியிருப்பார்.. விஜயகாந்தே திருமணத்தை நடத்தும் சூழல் என்றால், அனைத்து சினிமா பிரபலங்களும், கிங்காங் வீட்டு திருமணத்துக்கு வந்திருப்பார்கள்
மொய்ப் பணத்துக்காகவா
மொய்ப் பணத்துக்காக, இந்த கல்யாண பத்திரிகையை அனைவருக்கும் தரவில்லை.. அப்படி காசு வாங்குபவராக இருந்தால், முக்கிய நபர்களை சந்தித்து, அவர்களுக்கு மட்டும் பத்திரிகை வைத்திருக்கலாம்.. அவர்கள் தரும் பணத்தையும் பெற்று கொண்டிருக்கலாம். ஆனால், கிங்காங் அப்படி நினைக்கவில்லை..
மகளின் திருமணத்துக்கு, பிரபலங்களுக்கு பத்திரிகை வைப்பதை அனைவருக்கும் தெரியப்படுத்த ஆசைப்பட்டார்.. அனைவருமே வந்து தன்னுடைய மகளை வாழ்த்த வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர் கிங்காங். உழைப்பால் கிங்காங் உயர்ந்து, குடும்பத்தை காப்பாற்றியிருக்கிறார்.. இதையெல்லாம் ஒரு ரோல்மாடலாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, அவரை டிரோல் செய்வது தேவையில்லாத விஷயம்" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications