பிரபலங்களுக்கு ஓடி ஓடி பத்திரிக்கை கொடுத்த கிங்காங்.. ஆனால் இந்த நடிகர் மட்டும் தான் குடும்பத்தோடு போய் இருக்காரு!
சென்னை: காமெடி நடிகரான கிங்காங் மகள் கீர்த்தனாவின் திருமணம் இன்று கோவிலில் எளிமையாக நடைபெற்றது. இதில் யார் யார் கலந்து கொண்டார்கள் என்ற தேடல் இணையதில் இருக்கிறது. காரணம் சில மாதங்களாகவே கிங்காங் தன்னுடைய மகள் திருமணத்திற்காக பல பிரபலங்களுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் இந்த திருமணத்தில் ஒரு சிலர் மட்டும் தான் கலந்து கொண்டிருக்கிறார்கள். விஜய் டிவி பிரபலம் ஒருவர் குடும்பத்தோடு கலந்து கொண்டிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக பல திரைப்படங்களில் நடித்து தமிழில் மட்டும் அல்லாமல் ஹிந்தியில் ஷாருக்கான், கன்னடத்தில் சிவ ராஜ்குமார் போன்ற பல டாப் ஹீரோக்களுடன் நடித்திருக்கிறார். இந்த நிலையில் கிங்காங் மூத்த மகள் கீர்த்தனாவிற்கு இன்று திருமணம் நடந்திருக்கிறது. அப்போது எடுத்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

நடிகர் கிங் காங் தன்னுடைய மகள் திருமணத்திற்காக தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களான சிவகார்த்திகேயன், கார்த்தி, விஷால், விஜய் சேதுபதி, டி ராஜேந்தர் உட்பட பல பிரபலங்களுக்கு நேரில் சென்று பத்திரிக்கை வைத்திருந்தார். அதுபோல அரசியல் பிரமுகர்கள் பலருக்கும் பத்திரிக்கை கொடுத்து இருந்தார். அப்போது எடுத்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்திருந்தார். அது இணையத்தில் வைரலாகி வந்தன. விஜய் சேதுபதிக்கு பத்திரிக்கை கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் பலருடைய கவனத்தை பெற்றது. காரணம் கிங்காங் உயரத்தில் குறைவானவர் என்பதால் அவரிடம் முட்டி போட்டு நின்று விஜய் சேதுபதி பத்திரிக்கை வாங்கி இருந்தார். இந்த செயலை பலரும் பாராட்டி வந்தனர்.
இந்த நிலையில் கிங்காங் மற்றும் அவருடைய குடும்பத்தினரின் முன்னிலையில் சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஆறுபடை முருகன் கோவிலில் இன்று காலையில் திருமணம் நடைபெற்றது. அதில் அவருடைய நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திரையுலகினர் பலருக்கு இவர் பத்திரிக்கை கொடுத்து இருந்தாலும் நடிகர் கயல் தேவராஜ், முத்துக்காளை உள்ளிட்ட ஒரு சில நடிகர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். முன்னணி நடிகர்கள் இதில் கலந்து கொள்ளவில்லை இதனால் நெட்டிசன்கள் இத்தனை பேருக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தும் யாரும் திருமணத்தில் கலந்து கொள்ளவே என்று அதிருப்தி அடைந்திருக்கிறார்கள்.

ஆனால் இந்த திருமணத்தை கிங்காங் தன்னுடைய உறவினர்கள் முன்பு எளிமையாக நடத்தியதாகவும், திருமண வரவேற்பு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடத்த உள்ளதால் அதில் பலரும் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. ஆனாலும் இந்த திருமண பங்க்ஷனில் விஜய் டிவி பிரபலமான நாஞ்சில் விஜயன் அவருடைய மனைவி மற்றும் குழந்தையோடு கலந்து கொண்டார் அதை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications