நான் அப்படி செய்யவில்லை.. அது எல்லாமே பொய்.. தன்னை பற்றி வெளியான வீடியோவிற்கு CWC கிஷோர் விளக்கம்
சிவாங்கிக்கு பதிலாக என்னை துரத்திட்டாங்க என்று கிஷோர் கூறியதாக சில வீடியோக்கள் வெளியான நிலையில் அது பொய் என்று கிஷோர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
சென்னை: குக் வித் கோமாளி நான்காவது சீசனில் முதல் வாரத்தில் கிஷோர் வெளியேற்றப்பட்டார்.
வெளியே வந்த கிஷோர் பேசியதாக சில வீடியோக்கள் வெளியாகி வந்தது.
அதுவும் சிவாங்கிக்கு பதிலாக என்னை துரத்திட்டாங்க என்று கிஷோர் பேசியதாக அந்த வீடியோவில் கேப்ஷன் கொடுக்கப்பட்டிருந்தது.
நான் அப்படி எதுவும் வீடியோ வெளியிடவில்லை யாருக்கும் பேட்டி கொடுக்கவில்லை என்று கிஷோர் விளக்கம் கொடுத்து பதிவு ஒன்றை அனுப்பி இருக்கிறார்.

புதிய கோமாளிகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகின்ற நிலையில், கடந்த வாரத்தில் முதல் போட்டியாளராக கிஷோர் வெளியேற்றப்பட்டார். இந்த சீசனில் பல போட்டியாளர்கள் புதியதாக அறிமுகமானார்கள். அவர்களின் ஜி.பி முத்து, ஓட்டேரி சிவா, சிங்கப்பூர் தீபன், சின்னத்திரை நடிகை ரவீனா டாடா, சுனிதா, மோனிஷா, மணிமேகலை போன்றோர் கோமாளிகளாக கலந்து கொண்டிருக்கின்றனர்.

புதிய குக்குகள்
அதுமட்டுமல்லாமல் இந்த சீசனில் குக்குகளாக ஷெரின், விசித்திரா, அஜித் பட நடிகரான ராஜா ஐயப்பா, பாக்கியலட்சுமி சீரியல் எழில் கேரக்டரில் நடிக்கும் விஜே விஷால், காளையன், மைம் கோபி, நாய் சேகர் இயக்குனர் கிஷோர் ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொண்டு இருக்கின்றனர். இதுவரைக்கும் கோமாளியாக கலந்து கொண்ட சிவாங்கி இந்த சீசனில் குக்காக அறிமுகம் ஆகி இருக்கிறார்.

முதல் வெளியேற்றம்
இந்த நிலையில் முதல் முறையாக இந்த சீசனில் எலிமினேஷன் ரவுண்ட் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் முதலில் வைத்த ரவுண்டில் சிவாங்கி சமயலில் அசத்தி யாரும் எதிர்பார்க்காத அளவில் செப் ஆப் தி வீக் பரிசை தட்டி சென்றார். அதைத்தொடர்ந்து முதல் ரவுண்டில் சுமாராக சமைத்த காளையன், ஷெரின், கிஷோர் ஆகிய மூவரும் எலிமினேஷன் ரவுண்டுக்கு சென்றனர். இதைத்தொடர்ந்து இவர்களில் சுமாராக சமைத்ததாக கிஷோர் வெளியேற்றப்பட்டார்.

கிஷோரின் விளக்கம்
இந்த நிலையில்தான் சிவாங்கிக்கு பதிலாக தன்னை வெளியேற்றி விட்டதாகவும் thumbnail வைத்து youtube சேனல் ஒன்று வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதற்கு பதில் அளித்த கிஷோர் நான் எந்த பேட்டியும் கொடுக்கவில்லை.இந்த thumbnail செய்தி அனைத்தும் போய்.தயவு செய்து இந்த பொய்யான செய்தியை நீக்குங்கள் என்று கூறியிருக்கிறார். தற்போது கிஷோர் கொடுத்த விளக்கம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications