Kiss day 1 box office: கவினின் கிஸ் படத்தின் முதல் நாள் வசூல் இவ்வளவுதானாம்! இதுவும் ஒரு காரணமா?
சென்னை: நிகழ்ச்சி இயக்குனர் சதீஷ் இயக்கத்தில், இளம் நாயகன் கவின் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி நடிப்பில் வெளியாகியுள்ள கிஸ் திரைப்படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ள நிலையில், படத்தின் முதல் நாள் வசூல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கவின் ரசிகர்கள் எதிர்பார்த்த கம்பேக் படமாக இது அமையுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், படத்தின் மோசமான வசூல், இந்த எதிர்பார்ப்பை தவிடுபொடியாக்கிவிட்டது. இந்த வசூல் வீழ்ச்சிக்கு ரோபோ சங்கரின் மறைவும் ஒரு காரணமாக இருக்கலாம் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

கிஸ் பட கதை சுருக்கம்
கிஸ் திரைப்படம் ஒரு ஃபேன்டஸி கலந்த ரொமாண்டிக் காமெடி கதை. ஒரு புத்தகத்தின் மூலம் முத்தம் கொடுத்தால் எதிர்காலத்தை அறியும் சக்தி, கதாநாயகன் கவினுக்குக் கிடைக்கிறது. காதல் பிடிக்காத அவர், அந்த சக்தியைப் பயன்படுத்தி காதலர்களைப் பிரித்து விடுகிறார். ஆனால், பிரீத்தியைச் சந்தித்த பிறகு அவரது மனது மாறுகிறது. அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
கலவையான கருத்துக்கள்
கவின் மற்றும் ப்ரீத்தியின் நடிப்பு, குறிப்பாக லிப் கிஸ் காட்சி, ரசிகர்களால் பேசப்படுகிறது. விடிவி கணேஷ் மற்றும் ஆர்.ஜே. விஜய் ஆகியோரின் நகைச்சுவை காட்சிகள் சிரிக்க வைக்கின்றன. ஜென் மார்ட்டின் இசையில் சில பாடல்கள் சிறப்பாக உள்ளன.
நெகட்டிவ்
படத்தின் முதல் பாதி மிகவும் மெதுவாக நகர்வதாக விமர்சனங்கள் கூறுகின்றன. திரைக்கதை சுவாரசியமாக இல்லை என்றும், கிளைமாக்ஸ் சி.ஜி. காட்சிகள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றும் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். மொத்தத்தில், கிஸ் திரைப்படம் இளைஞர்களுக்கு ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்கலாம் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
பாக்ஸ் ஆபிஸ் வசூல்
கவின் நடிப்பில் வெளிவந்த ஸ்டார் மற்றும் ப்ளெடி பெக்கர் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால், கிஸ் படம் அவருக்கு ஒரு கம்பேக் படமாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், படத்தின் முதல் நாள் வசூல் படுமோசமாக உள்ளது. இந்தியா முழுவதும் வெறும் 40 லட்சம் ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் வெறும் 18 லட்சம் ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளது.
இது கவினின் முந்தைய படங்களான ப்ளெடி பெக்கர் (2.8 கோடி) மற்றும் ஸ்டார் (4 கோடி) ஆகியவற்றோடு ஒப்பிடுகையில் மிக மிகக் குறைவு.
வசூல் வீழ்ச்சிக்கு காரணம்
நேற்று முன்தினம் காலமான நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் மறைவு, திரையுலகினர் மற்றும் ரசிகர்களைப் பெரிய அளவில் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் புகழ் பெற்ற ரோபோ சங்கர் திடீரென உயிரிழந்தது, திரையுலகில் ஒரு சோக அலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல பிரபலங்கள் நேற்று ரோபோ சங்கரின் இல்லத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினர். இத்தகைய துயரமான சூழல், ரசிகர்களுக்கும், நடிகர்களுக்கும், படங்களைப் பார்ப்பதில் ஆர்வம் குறைவாகவே இருந்திருக்கலாம். இதன் காரணமாகக்கூட, கிஸ் போன்ற படங்கள் எதிர்பார்த்த வசூலைப் பெறாமல், வீழ்ச்சியைச் சந்தித்திருக்கலாம் என்றும் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications