சீரியலில் "முத்த காட்சி”.. இதை கவனிச்சீங்களா? அந்த சீரியலிலும்.. இதைத் தவிர்த்து இருக்கலாம்
சென்னை: சின்னத்திரையிலும் மெல்ல மெல்ல ஆபாசம் காட்சிகள் அதிகரித்து வருவது தற்போது சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் ஒன்றாக அமர்ந்து பார்க்கும் சீரியல்களில் எதார்த்தத்தை காட்டுகிறோம் என்று கூறி குளியலறை காட்சிகளும், முதலிரவு காட்சிகளும் வெட்ட வெளிச்சமாக காட்டுகிறார்கள் என்று பலர் திட்டிக் கொண்டிருக்கின்றனர்.

ஆரம்ப காலகட்டத்தில் இணையதள வசதிகள் பெரிய அளவில் இல்லாத நிலையில் இப்போது இருக்கும் இணைய பயன்பாட்டை வைத்து சீரியலில் வரும் சொதப்பல்கள் குறித்து ரசிகர்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
ஆரம்ப காலகட்டத்தில் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் குடும்பத்தோடு பார்க்கும் வகையில் இருக்கும்.. பொதுவாக சீரியல்கள் என்றால் குடும்ப கதையை மையமாகக் கொண்டு இருக்கும் அண்ணன் தம்பி ஒற்றுமை, அப்பா மகள் பாசம் என அனைத்தும் அங்கே நிறைந்திருக்கும். ஒரு சில சீரியல்களில் காமெடிக்காகவும் பலர் அதை பார்த்துக் கொண்டிருப்பர்..

ஆனால் இப்போதைய பல சீரியல்களில் ஒரே கதை தான் ரிப்பீட் மோடில் புதுசு புதுசாக டைட்டில் மட்டும் வைத்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கதாநாயகி ஏழை பெண்ணாக இருப்பார், கதாநாயகன் பணக்கார வீட்டு பையனாக இருப்பார். அதுவும் அம்மா பேச்சை எதிர்த்து பேச முடியாமல் இருப்பார். அதுபோல கதாநாயகிக்கும் கதாநாயகனுக்கும் விருப்பமே இல்லாமல் திருமணம் நடக்கும்.
ஆனால் திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் காதலித்து கொண்டிருப்பார்கள். ஆனாலும் ஹீரோ அம்மாவை எதிர்க்க முடியாமல் இருப்பார். இதுதான் இப்போது உள்ள பல சீரியல்களின் மையக் கருத்தாக இருக்கிறது. இந்த நிலையில் இது போல இப்போது அதிகமான சீரியல்களில் ஆபாச காட்சிகளும் மெல்ல மெல்ல புகுத்தப்படுகிறது. அதற்குக் காரணம் டிஆர்பி அதிகரிப்பதற்கான தான். ஆனால் இது தவறான வழி என்பது புரிந்தும் பலர் செய்து வருகிறார்கள்.

ஆரம்ப காலகட்டத்தில் சன் டிவி சீரியல்கள் அதிகமான வரவேற்பு பெற்று இருந்தது. இப்போது சன் டிவிக்கு போட்டியாக பல சேனல்கள் முளைத்துக் கொண்டிருக்கிறது. அதிலும் அதிகமாக பிறமொழி சீரியல்களின் தழுவல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறுவதால் அடுத்தடுத்து பல சீரியல்களை பல சேனல்கள் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் பிற மொழி சீரியல்களில் இருக்கும் காட்சிகள் கூட அபத்தமாக அப்படியே தமிழில் வைக்கின்றனர்.
அதில் பல சீரியல்களில் முத்த காட்சிகளும் இப்போது ரிப்பீட் ஆகி வருகிறது. இதை வீட்டில் குடும்பத்தோடு பெரியவர்கள் அனைவரும் சேர்ந்து இருந்து பார்க்கும் நிலையில் அனைவருக்கும் தர்ம சங்கடத்திற்குள் ஆகின்றனர். பொதுவாக பல திரைப்படங்களுக்கு கூட "ஏ" சர்டிபிகேட் இருக்கிறது. குறிப்பிட்ட சில படங்கள் திரையரங்குகளில் குழந்தைகளோடு பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. ஆனால் இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் சீரியலில் அபத்தமான பல காட்சிகள் காட்டப்படுவது வேதனையாக இருக்கிறது.

அதிலும் கடந்த வாரம் விஜய் டிவியில் முத்தழகு சீரியலில் புரோமோ வெளியாகி இருந்தது. அதில் ப்ரோமோவிலும் முத்த காட்சிகளும் கதாநாயகனும் கதாநாயகியும் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகளும் இருந்தது. அதுபோல ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் "சிறகடிக்க ஆசை" சீரியலிலும் முட்டி மோதிக் கொண்டிருக்கும் கதாநாயகன் கதாநாயகி இடையில் ஒரு முத்தக்காட்சியை வைத்திருக்கிறார்கள்.
அதுபோல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீரியலில் கடந்த மாதத்தில் அடுத்தடுத்து முதலிரவு சீன்கள் வைத்து ரசிகர்களை நெளிய வைத்து விட்டார்கள். இந்த மாதிரி பல சீரியல்கள் பெயரை சொல்லிக்கொண்டே போகலாம். அந்த மாதிரி நீங்க பார்த்து கடுப்பான சீரியல்களின் பெயரை கமெண்டில் சொல்லுங்க.












Click it and Unblock the Notifications