கிழக்கு வாசல் சீரியலில் அறிமுகமாகும் நடிகர் ரஜினிகாந்த் பட நடிகை..யாரு தெரியுதா? ஆரம்பமே அசத்தல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கிழக்கு வாசல் சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் அதிரடியாக நடிகர் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி திரைப்படத்தில் நடித்த நடிகை முக்கிய கேரக்டரில் அறிமுகமாகி இருக்கிறார்.

மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் கிழக்கு வாசல் சீரியல் பெரிய அளவில் டிஆர்பியில் முன்னேற்றம் அடையாத நிலையில் இந்த சீரியலில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.

kizhakku vasal Serial Actress Prakarshitha her debut in the main character in this serial

அந்த வகையில் கடந்த வருடம் நடிகை ராதிகாவின் ராடான் நிறுவனம் தயாரிக்க நடிகர் விஜயின் அப்பாவான எஸ்ஏ சந்திரசேகர் நடிப்பில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் கிழக்கு வாசல் சீரியல் நல்ல கதை அம்சத்தோடு இருந்தாலும் அது மதியம் நேரத்தில் ஒளிபரப்பாகி வருவதால் பெரிய அளவில் பிரபலமாகாமல் இருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் கதாநாயகியாக நடிகை ரேஷ்மா நடித்து வருகிறார்.

அவருக்கு ஜோடியாக நடிகர் வெங்கட் அதாவது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஜீவா கேரக்டரில் நடித்து வந்த வெங்கட் தான் இந்த சீரியலில் கதாநாயகனாக சண்முகம் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் இந்த சீரியல் 100 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது என்ற தகவல்களும் சில நாட்களாக இணையத்தில் பரவி வருகிறது.

kizhakku vasal Serial Actress Prakarshitha her debut in the main character in this serial

ஆனால் சீரியலில் இன்னும் ஒரு சில உண்மைகள் உடைபடாமல் இருக்கிறது. ஏற்கனவே ரேணுவிற்கு தன்னுடைய அம்மா யார் என்ற உண்மை தெரிய வந்திருக்கிறது. ஆனால் பாஞ்சாலிக்கு ரேணுகா தன்னுடைய மகள் என்பது தெரியாமல் இருக்கிறார். இப்படியான நிலையில் தன்னுடைய தங்கை அனு சண்முகத்தை காதலிப்பதை தெரிந்ததும் சண்முகம் தன்னை காதலிக்கிறார் என்ற உண்மை தெரிந்தும் ரேணுகா விட்டுக் கொடுத்திருக்கிறார்.

ஆனாலும் சண்முகம் மற்றும் அனுவின் எங்கேஜ்மென்ட் பார்த்து ரேணுகா அழுது கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் அனுவிற்கும் சண்முகத்திற்கும் திருமணம் நடக்குமா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் புதியதாக ஒரு கேரக்டர் அறிமுகமாகி இருக்கிறார் என்று தெரிகிறது.

அவர் வேறு யாரும் இல்லை கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி 300 நாட்களுக்கு மேலாக திரையரங்கில் ஓடி சாதனை படைத்த சந்திரமுகி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக பொம்மி கேரக்டரில் நடித்த நடிகை பிரகர்ஷிதா தான். இவர் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.

kizhakku vasal Serial Actress Prakarshitha her debut in the main character in this serial

இவர் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சின்னதிரையிலும் வேலன், ராஜ ராஜேஸ்வரி, செல்வி போன்ற பல சீரியல்களில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் இப்போது கிழக்கு வாசல் சீரியலில் இவர் அறிமுகமாகி இருக்கும் நிலையில் இந்த சீரியலில் தொடர்ந்து நடிப்பாரா? அல்லது முக்கிய கேரக்டரில் சில காட்சிகளுக்கு மட்டும் வருவாரா? என்ற கேள்விகளும் இருக்கிறது. ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பே இவர் சீரியலில் அறிமுகமாக போகிறார் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் இப்போதுதான் அவர் கிழக்கு வாசல் சீரியலில் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+