kodeeswari: சாம்பாரையும் தால்ச்சாவையும் மிக்ஸ் பண்ணி கடப்பான்றுவேன்.. ஓடு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஓட்டல் முதலாளி ரோஸ்மேரி நிகழ்ச்சியை கலகலக்க வைத்தார். ஈடு கொடுத்து ராதிகாவும் விஷயங்களை... ஓட்டல் ரகசியங்களை போட்டு வாங்கினார். மிக சுவாரஸ்யமாக இருந்தது நிகழ்ச்சி.

கடப்பா இல்லேன்னா, சாம்பாரையும் தால்ச்சாவையும் மிக்ஸ் பண்ணி கடப்பான்றுவேன்.. தூக்கிட்டு ஓடு.. என்று அசால்டாக சொல்லி திகிலை கிளம்பினாலும் சிரிக்கும்படிதான் இருந்தது. நிசமாத்தான் மேடம் சொல்றேன்.. இதுக்கு பேரு நான் சமயோசித புத்தின்னு சொல்லுவேன் என்று தனது திறமைக்கு பாராட்டும் தெரிவித்துக்கொண்டார் ரோஸ்மேரி.

தமிழ்நாட்டு ஓட்டல் ரகசியங்களை போட்டு உடைச்சுட்டீங்க என்று ராதிகா கேட்க, மேடம் ஏதோ அப்பிராணியா பேசிட்டேன் மேடம்...நான் ஐயோ பாவம் மேடம் என்று காமெடி வேறு செய்தார். அருமையாக ஏற்ற இறக்கங்களோடு பாடலும் படுகிறார் ரோஸ்மேரி.

சாம்பார் தீர்ந்து போகும்

சாம்பார் தீர்ந்து போகும்

நன் என் வீட்டுக்காரரை கூப்பிடறதை விட, மாஸ்டரை கூப்பிடறதுதான் அதிகம். சாம்பார் தீர்ந்து போச்சுன்னா திரு தின்னு முழிச்சுகிட்டு நிற்பேன். மாஸ்டர்னு கூப்பிடுவேன். சாம்பார் தீர்ந்துபோச்சுண்ணு சொல்வேன்.. சால்னாவைத்தான் அப்படியே அடிச்சு உடுங்களேன் மேடம்னு அவர் சொல்லுவார். வெந்நீர் கொதிச்சுக்கிட்டே இருக்கும்.. சால்னாவை இருக்கும் சாம்பாருடன் கலந்து வெந்நீர் ஊத்தினா சாம்பார் ரெடி என்று சொன்னார்.

இல்லை சொன்னதில்லை

இல்லை சொன்னதில்லை

நேரமாகியும் மேடம்.. பசியோட வருவாங்க...அடுப்புல வெந்நீர் கொதிச்சுக்கிட்டு இருக்கும். இங்கே எதாவது கிடைக்கும்னு வருவாங்க. உடனே சாம்பார் ரெடி பண்ணிருவோம். தோசை ஊத்தி கொடுக்க வேண்டியதுதான். யாருக்கும் இல்லைன்னு சொல்லாம சாப்பாடு போடுவோம் மேடம்னு சொன்னார்.ஓ.. நீங்க அப்படி நினைச்சுக்கறீங்க என்று சொன்னார் ராதிகா.

இட்லி லாபம் இல்லை

இட்லி லாபம் இல்லை

இட்லி லாபம் இல்லை மேடம்.. அதனால எந்த ஓட்டல்ல பாருங்க ஒரு ஈடுதான் இட்லி ஊத்தி எடுப்பாங்க. இட்லி கேட்டு வந்தா நேரமாகும்னு சொல்லுவோம். அதுக்குள்ளே ரெண்டு தோசை கேட்பாங்க. ஒரு தோசை 20 ரூபாய். ஒரு இட்லி 5 ரூபாய் லாபம் இல்லை மேடம். அதனால் இட்லியை சீக்கிரம் ஊத்தி மூடிடுவோம் என்றும்சொன்னார்.

கோடீஸ்வரி ஓட்டலும்

கோடீஸ்வரி ஓட்டலும்

கோடீஸ்வரி ஓட்டல் வச்சாலும் அப்படித்தானா என்று ராதிகா கேட்க, மேடம்.. அப்போ காசு இல்லை அதனால் ஹாட்பேக் இல்லாம இப்படி அடஜஸ்ட் பண்ணினோம்.. இப்போ ஜெயிச்சு கோடீஸ்வரி ஓட்டல் ஆரம்பிச்சா எல்லாம் வாங்கி வச்சுருவேன் மேடம் என்று சொன்னார். ராதிகா, கண்மணி உங்களுக்கு ஒன்றரை லட்சம் தரனும்னா பாட்டு கேட்குது என்று சொன்னார்.

காதல் டூயட்

காதல் டூயட்

முதலில் அதோ அந்த தென்றல் ஒரு பூவைத் தேடுது என்று பாட, இந்த ஆபத்து கண்மணிக்கு பிடிக்கலைன்னு சொன்னாங்க ராதிகா. வேற பாட்டு ஒண்ணு பாடுங்க என்க.. பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா என்று பாடினார். இது கண்மணிக்கு பிடிச்சு இருக்காம். ஆனால், இன்னொரு பாட்டு பாடணும்னு சொல்லுதுன்னு சொன்னார். அவர், மேடம் இந்தபாட்டு உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் பாருங்க என்று சொல்லி, முதன் முதலாக காதல் டூயட் பட வந்தேனே என்கிற பாடலை பாடினர்.

சபாஷ் கோடீஸ்வரி

சபாஷ் கோடீஸ்வரி

கண்மணி இந்த டூயட்டில் நீ விழுந்திட்டியா என்று ராதிகா கேட்க, மேடம் படுக்க வைங்க மேடம் என்று சொன்னார் ரோஸ்மேரி. இப்படி கலகலப்பாக இருந்தது நிகழ்ச்சி. பெண்ணால் பெண்களுக்கு நடத்த்தப்படும் இந்த நிகழ்ச்சி முழுக்க நிறைய சுவாரஸ்யங்கள் எனும்போது பெண்களின் சார்பாக ஒரு சபாஷ் போடலாம் கோடீஸ்வரிக்கு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+