தருமபுரி சுஷ்மிதாவுக்கு கண் கொடுத்த கோடீஸ்வரி!
சென்னை: கலர் தமிழ் டிவியின் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட சுஷ்மிதாவுக்கு ஒரு கண் பார்வை தெரியாமல் இருந்தது, இப்போது நன்றாக தெரிகிறது என்று சொல்கிறார் ராதிகா சரத்குமார்.
சுஷ்மிதா கோடீஸ்வரி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டபோது ஒரு கண்ணில் பார்வை இல்லையாம்.
டாக்டர் உமா ரமேஷ் சுஷ்மிதாவுக்கு தானே முன்வந்து தனது சொந்த செலவில் ஆபரேஷன் செய்ததாக ராதிகா கூறினார்.

தருமபுரி சுஷ்மிதா
நம்ம கூட போன வாரம் விளையாடிய சுஷ்மிதாவுக்கு குடும்பத்தில் பல கஷ்டங்கள். அதோடு, அவங்களுக்கு ஒரு கண் பார்வை இல்லை. இந்த விஷயம் எனக்கு தெரிய வந்தபோது, கலர்ஸ் தமிழ் டிவியும் நானும் டாக்டர் உமா ரமேஷ்கிட்டே பேசினோம். அவங்க சொந்த செலவில் ஆபரேஷன் செய்யறேன்னு ஒத்துக்கிட்டாங்க. இப்போ சுஷ்மிதாவுக்கு கண் பார்வை நல்லா தெரியுது. ரெண்டு கண்ணுல பார்க்கறீங்க என்று சொன்னார் கோடீஸ்வரி நிகழ்ச்சியை நடத்தும் ராதிகா சரத்குமார்.

மருத்துவர்கள் கடவுள்
மருத்துவர்கள் கடவுளுக்கு சமம்னு சொல்லுவாங்க. சுஷ்மிதாவுக்கு காம்பிளிக்கேட்டட் சர்ஜரின்னு சொன்னீங்க அதை பத்தி சொல்லுங்க டாக்டர் என்றார். சுஷ்மிதாவுக்கு ரொம்ப சின்ன வயசு 24 வயசு. ரைட் சைட் கண்ணுல அடிபட்டு இருக்கு. வயசான பிறகு வர்ற கேட்டராக்ட் இந்த பொண்ணுக்கு சின்ன வயசுல வந்துச்சுருச்சு.

காண்பிச்ச இடத்தில்
சுஷ்மிதாவை காண்பிச்ச இடத்தில் ஒரு லட்சம் ஆகும்னு சொன்னதில் அவங்க லேட் பண்ணி இருந்திருக்காங்க. நான் உங்க ஃபேன்.. கோடீஸ்வரி நிகழ்ச்சி பார்த்துகிட்டு இருந்ததால் சுஷ்மிதா பத்தி நான் தெரிஞ்சுகிட்டேன். அப்புறம் நீங்களும் என்னை அப்ரோச் பண்ணினீங்க. இப்போ ஆபரேஷன் சக்ஸஸ்ஃபுல்லா நடந்துருச்சு என்கிறார் டாக்டர் உமா ரமேஷ்.

தன் கஷ்டம்
சுஷ்மிதா அவ்ளோ நேரம் விளையாடியும், தன் கஷ்டம் பத்தி பேசவே இல்லை, குடும்ப கஷ்டம் பத்தி பேசினாங்க. பெத்தவங்க கஷ்டம் பத்தி பேசினாங்க. தன் கஷ்டம் பத்தி பேசவே இல்லை. பெண்கள் எப்போதும் இப்படித்தான். தன்னோட கஷ்டம் பத்தி வெளியே சொல்லவே மாட்டாங்க என்று ராதிகா கூறினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications