கோலங்கள் "ஆதி” ஞாபகம் இருக்கா..? நடிகை தேவயானி பகிர்ந்த புகைப்படங்கள்.. குவியும் நினைவுகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி 90 கிட்ஸ்களால் அதிகமாக ரசிக்கப்பட்ட கோலங்கள் சீரியல் இப்ப வரைக்கும் பலராலும் பேசப்பட்டு வருகிறது.

நடிகை தேவயானிக்கு வெள்ளி திரையில் பெரிய அளவில் ஹிட் கிடைத்திருந்தாலும் சின்ன திரையில் கோலங்கள் சீரியல் ரசிகர்களின் மனதில் அவருக்கு தனியாக ஒரு இடத்தை கொடுத்து இருந்தது.

kolangal serial Do you remember Aathi, Actress Devyani shared photos

அதுபோல அவருக்கு ஆப்போசிட்டாக அதாவது வில்லனாக நடித்த ஆதி அப்போது பலராலும் திட்டப்பட்டுக் கொண்டிருந்தாலும் இப்போது அவர் எங்கே போனார் என்ன செய்து? கொண்டிருக்கிறார் என்று ரசிகர்கள் தேடிக் கொண்டிருக்கின்றனர்.

சன் டிவியில் ஒளிபரப்பான கோலங்கள் சீரியல் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் சீரியல்களில் ஒன்று. இப்போதும் இந்த சீரியலை அதிகமான ரசிகர்கள் மிஸ் பண்ணி வருகின்றனர். இதுபோல ஒரு சீரியல் மீண்டும் வராதா? அல்லது கோலங்கள் சீரியலில் இரண்டாவது பாகம் விரைவில் வரவேண்டும் என்றெல்லாம் ரசிகர்கள் கூறிக் கொண்டிருக்கின்றனர்.

kolangal serial Do you remember Aathi, Actress Devyani shared photos

அந்த அளவிற்கு இந்த சீரியல் ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்து இருந்தது. இதில் கதாநாயகியாக நடிகை தேவயானி நடித்திருப்பார். அவருக்கு வில்லனாக "ஆதி" கேரக்டர் மிரட்டி இருப்பார். சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலும் கூட அதே இயக்குனர் திருச்செல்வதால் இயக்கப்பட்டு வருகிறது. முதல் சீரியல் வில்லனுக்கு கிடைத்த வரவேற்பு காரணமாகவே அதே ஆதி என்ற பெயரை வைத்து இந்த எதிர்நீச்சல் சீரியலையும் வில்லனை ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைய செய்துவிட்டார்.

இந்த நிலையில் சீரியல் பற்றி பேசும் ரசிகர்கள் பலர் இணையதளத்தில் தினமும் கோலங்கள் ஆதியை தேடிக் கொண்டிருப்பதை காண முடிகிறது. இப்போது அவர் எங்கே போனார் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று யாருக்கும் தெரிவதில்லை. காரணம் அவர் சமூக வலைத்தளத்தில் எந்த அக்கவுண்டிலும் இல்லை. கோலங்கள் சீரியலில் ஆதியாக நடித்த நடிகரின் பெயர் "அஜய் கபூர்" இவர் பஞ்சாபை சேர்ந்தவர் தான்.

kolangal serial Do you remember Aathi, Actress Devyani shared photos

ஆரம்பத்தில் இவர் நடிப்பிற்காக வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தபோது தினமும் வாக்கிங் செல்வது வாடிக்கையாக இருந்திருக்கிறார். அப்படி வாக்கிங் செல்லும் போது நடிகை சத்யபிரியா தான் இவரிடம் கோலங்கள் சீரியலில் வில்லனுக்காக தேடிக் கொண்டிருக்கிறார்கள். நீங்க போய் பாருங்க என்று சொன்னார்களாம். அப்போது ஆதியும் இயக்குனர் திருச்செல்வதை போய் சந்தித்திருக்கிறார்.

அங்கு திருச்செல்வம் நான் ஏற்கனவே ஆதி கேரக்டரில் ஒரு நடிகரை பிக்ஸ் பண்ணி விட்டேன் என்று கூறிவிட்டாராம். ஆனாலும் இவர் இவர் விடாமல் அது இருக்கட்டும் நீங்க எனக்கு ஒரு வாய்ப்பு மட்டும் தாங்க, நான் நடிச்சு காட்டுறேன். அது புடிச்சிருக்கா இல்லையா என்று மட்டும் சொல்லுங்க என்று சொன்னாராம். அதற்கு இயக்குனர் சரி என்று சொன்னதும் ஒரே ஒரு ஷார்ட் மட்டும் நடித்துக் காட்டியிருக்கிறார். அப்போதே திருச்செல்வத்திற்கு பிடித்து விட்டதாம்.

kolangal serial Do you remember Aathi, Actress Devyani shared photos

ஆனாலும் நான் ஏற்கனவே ஒருத்தரை பிக்ஸ் பண்ணி விட்டேன். இப்போ உங்களை எடுத்தா நல்லா இருக்காது ஆனா நான் என்ன மாதிரி நினைச்சிருந்தேனோ, அந்த நடிப்பு அப்படியே உங்க கிட்ட இருக்கு. சரி, இருந்தாலும் நம்ம அடுத்த முறை பார்ப்போம் என்று சொல்லி அனுப்பிவிட்டாராம். சரி என்று ஆதியும் கொஞ்ச தூரம் வந்துட்டு இருக்கும்போதே அவருக்கு அசிஸ்டன்ட் டைரக்டரிடம் இருந்து கால் வந்திருக்கிறது. நாம வேற ஒரு லொகேஷனில் வச்சு மீட் பண்ணுவோம் வாங்க என்று சொன்னார்களாம்.

உடனே ஆதியும் அடுத்த நாள் சொன்ன மாதிரி இடத்துக்கு போயிருக்கார். அங்கே இவருடைய நடிப்பை பார்த்து பிடித்துப்போன திருச்செல்வன் நீங்கதான் இனி ஆதி என்று உடனே கூறி முடிவு செய்து இருக்கிறார். அப்போது இவருடைய வாய்ஸில் டப்பிங் பேசவில்லையாம். வேற வாய்ஸில் பேசிக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்கள். காரணம் இவருக்கு அந்த நேரத்தில் தமிழ் எல்லாம் அதிகமாக பேச தெரியாதாம்.

ஆனால் இவருடைய நடிப்புக்கும் வேற ஆட்களின் டப்பிங் சம்பந்தமே இல்லை என்று கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட அவருடைய டப்பிங் கேட்டுவிட்டு திருச்செல்வன் நீ தான் பேசியாக வேண்டும் என்று சொல்லிவிட்டாராம். அப்போது இவர் காய்ச்சலில் இருந்து இருக்கிறார். ஆனாலும் இயக்குனர் திருச்செல்வம் நீ பேசினால் தான் முடியும் என்று சொன்னதால் இவர் பேசினாராம். அதனால் தான் அந்த ஸ்பெஷலான வார்த்தை உச்சரிப்பு கிடைத்திருக்கிறது.

தற்போது கோலங்கள் ஆதி எந்த சீரியலிலும் தலை கட்டாமல் இருக்கிறார். இந்த நிலையில் நடிகை தேவயானி தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் கோலங்கள் சீரியலின் மலரும் நினைவுகளை பகிர்ந்து இருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் பலர், ஹாய்.. நம்ம ஆதி இருக்காரு என்று அவர் குறித்த பல நினைவுகளையும் ஆதியின் நடிப்பை பற்றியும் தொடர்ச்சியாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+