Comali film: வர வர இந்த ஆதவன் ரொம்ப மொக்கையா இருக்காரே... ஏன்
சென்னை: காம்பியர் என்றால் அடுத்தவர்களுக்கு போர் அடிக்கும் அளவுக்கு பேசிட்டே இருக்கக் கூடாது. அதேபோல நமது செய்கைகளும் கூட லிமிட்டிலேயே இருக்க வேண்டும். சிரிக்க வைக்கலாமே தவிர சிரிக்க வைக்காமல் விட மாட்டேன் என்று பிடிவாதமாக போட்டு பிளேடு போடக் கூடாது.
நம்ம சன் டிவி ஆதவனைப் பார்த்தால் சில நேரங்களில் ரொம்ப மொக்கையா பேசுறாரே என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. காரணம் நிகழ்ச்சிக்கு வந்தவர்களை விட இவர்தான் அதிகம் பேசிக் கொண்டிருக்கிறார்.
மதுரை முத்துவுடன் சேர்ந்து இவர் பங்கேற்கும் காமெடி கலாட்டா நிகழ்ச்சியிலும் இப்படித்தான். இவர்களே அதிகமாக பேசிக் கொண்டிருப்பார்கள். பங்கேற்போர் வெறுமனே விழித்தபடி நிற்கும் நிலையும் காணப்படும்.

சிறப்பு நிகழ்ச்சி
நேற்று கூட சுதந்திர தினத்தையொட்டி கோமாளி படக் குழுவினருடன் ஒரு சந்திப்பு நடந்தது. ஹாய் ரவி ஹலோ காஜல் என்ற பெயரில். காஜல் அகர்வால் அப்போதுதான் ஃபிரிட்ஜிலிருந்து எடுத்த பாதுஷா மாதிரி அவ்வளோ அழகா இருந்தார். ரவியும் செம ஹேன்ட்சம். அதேபோல பொன்னம்பலம் உள்ளிட்ட படக் குழுவினரும் கலந்து கொண்டனர்.

சேட்டைகள் கேள்விகள்
விஷயம் என்னவென்றால் ஆதவனும், காம்பியரும் கேட்ட கேள்விகள், செய்த சேட்டைகளுக்கு ரவியும், காஜலும் நன்றாகவே ரியாக்ட் செய்தனர். கோலி விளையாடுதல், கில்லி விளையாடுதல், லவ் புரபோசல் என எல்லாவற்றிலும் காஜல் கலக்கினார். அத்தனை பாந்தமாக அவர் பேசியது கவரும் வகையில் இருந்தது.

அறுவை ஆதவன்
ஆனால் ஆதவன்தான் செமையாக அறுத்து விட்டார். வளவளா பேச்சு சில நேரங்களில் போதும் சாமி வாயை செத்த மூடுங்கோ என்று சொல்ல வேண்டும் போலத் தோன்றியது. அவரது சவுண்டுதான் ஜாஸ்தியாக இருந்தது. இதுபோன்ற சமயங்களில் கெஸ்ட்டுகளிடம் நல்ல நல்ல கேள்விகள் கேட்டு நிறைய மேட்டர்களை கறக்கலாம்.

மெனக்கெடல் முழுவதும்
ஆனால் காஜலிடம் தகவல்களைக் கேட்டுப் பெறுவதை விட அவரை சிரிக்க வைத்து இம்பரஸ் செய்வதில்தான் ஆதவன் நிறைய மெனக்கெட்டது போல இருந்தது. ஹீரோ ஜெயம் ரவியே நினைத்திருப்பார்.. ஆட ஆதவா.. இதெல்லாம் உனக்கு ஓவரா இல்லையான்னு.. அத்தனை ஜொள்ளு.. தரையே வழுக்கியிருக்கும்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications